வரு. 77 இல. 238

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 17
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 21ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, OCTOBER 07, 2009

அமெரிக்க டாக்டர்களுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு

அமெரிக்க டாக்டர்களுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு

மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. மிகவும் கவுரவமாக கருதப்படும் இந்த நோபல் பரிசை சுவீடனைச் சேர்ந்த அறக்கட்டளை வழங்குகிறது.

மரபுப்படி, மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறுபவரின் பெயரை முதலில் அறிவிப்பது வழக்கம்.

அதன்படி 2009ம் ஆண்டுக்கான மருத்துவத் துறை நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அந்த பரிசுக்கு, அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று டாக்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஆஸ்திரேலியாவில் பிறந்த எலிசபெத் பிளாக்பர்ன் இங்கிலாந்தை சேர்ந்த ஜாக ஸ்சோஸ்டாக் மற்றும் கரோஸ் கிரெய்டர் ஆகிய மூன்று டாக்டர்களும் தேர்வாகி இருக்கின்றனர். அவர்களுக்கு ரூ. 7 கோடி (1.40 மில்லியன் டாலர்) பரிசாகக் கிடைக்கும்.

குரோமோசோம்களை படிமம் எடுப்பது மற்றும் பாதுகாப்பது எப்படி? என்பது பற்றி கண்டுபிடித்ததற்காக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இது குறித்து நோபல் பரிசு வழங்கும் நிறுவனம் கூறுகையில், “உயிரியியலில் இதுவரை இருந்து வந்த மிகப்பெரிய பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •