வரு. 77 இல. 238

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 17
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 21ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, OCTOBER 07, 2009


அம்பாந்தோட்டை துறைமுக இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பம்

அம்பாந்தோட்டை துறைமுக இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பம்

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் இரண்டாம் கட்ட நிர்மாண வேலைகள் ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி (இன்று) ஆரம்பிக்கப்படவுள்ளதாக துறைமுக, விமான சேவைகள், வடிகாலமைப்பு மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை உப்புக் கூட்டுத்தாபனத்திற்கு யிஷிலி 22000 தரச் சான்றிதழை பெறும் விசேட நிகழ்வு 2009/09/28 ஆம் திகதி அம்பாந்தோட்டை உப்புக் கூட்டுத்தாபனத்தில் நடைபெற்ற போது அதில் விசேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் நீர் வழங்கல் அமைச்சர் மஹிந்த அமரவீர, உப்புக் கூட்டுத்தாபன் தலைவர் மஹிந்த குணவர்தன, உரக் கூட்டுத்தாபன தலைவர் என். எஸ். எம். ஸம்ஸ¤தீன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இங்கு அமைச்சர் தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவித்ததாவது; அம்பாந்தோட்டை துறைமுதக்தின் முதலாவது கட்ட நிர்மாண வேலைகள் நிறைவு செய்வதற்கு முன்பு இரண்டாவது கட்ட நிர்மாண வேலைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான நிதி கிடைக்கப் பெற்றுள்ளது.

இதனால் இரண்டாம் கட்ட நிர்மாண வேலைகள் தொடர்பாகவும் ஆராய்ந்து வருகின்றோம்.

உப்புக் கூட்டுத்தாபனம் இன்று இலங்கையிலேயே உப்புத் தொழிலில் ஈடுபடும் சர்வதேச தரச் சான்றிதலை பெற்றுள்ள ஒருகூட்டுத்தாபனம் என்பதனை அறியும் பொழுது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

கடந்த கால எமது அரசாங்கத்தின் மூலம் இதனை தனியாருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்திருந்த வேளையில் அப்போதைய தொழில் அமைச்சராக இருந்த எமது ஜனாதிபதி ஊழியர் நம்பிக்கை நிதிய பணத்தினை பயன்படுத்தி இதனை தனியார் மயப்படுத்தலில் இருந்து பாதுகாத்தார்.

அன்றிலிருந்து இன்று வரை இந்த நிறுவனம் பாரியளவில் அபிவிருத்தியடைந்து வருகின்றது. இவ்வாறு நிறுவனம் வளர்ச்சிப் பாதையை நோக்கி நகரும் போது நிறுவனத்திலுள்ள ஊழியர்களின் பிரச்சினைகளும் தீர்ந்து அவர்களுக்கு புதிய நம்பிக்கை கட்டியெழுப்பப்படுகின்றது.

கடந்த காலங்களில் பல்வேறு தொழில் சங்கங்களில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை அவர்களுக்கு எவ்வித அசாதாரணங்களும் ஏற்படாதவாறு அவர்களை பாதுகாக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு நீங்கள் பெற்ற சம்பளத்தோடு ஒப்பிடும் போது தற்பொழுது ஒவ்வொருவரினது சம்பளமும் அறுபது வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று உங்களுக்கு சிறந்ததொரு வாழ்க்கையை கொண்டு நடாத்துவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளமையிட்டு மிகக் மகிழ்ச்சியடைகின்றேன்.

உப்புக் கூட்டுத்தாபனத்தில் கைவிடப்பட்டிருந்த கொஹொலங்கல உப்பு வயல்கள் நூறு இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

தலைநகரில் இயங்கி வந்த தலைமையக காரியாலயமும் தற்பொழுது இங்கு நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. அத்தோடு புதிய வேலைத்தளம், வாகனங்கள் துப்பரவு செய்யும் நிலையம் என்பவற்றையும் அவதானிக்கும் போது எதிர்காலத்தில் உப்புக் கூட்டுத்தாபனம் சிறந்ததொரு கூட்டுத்தாபனமாக திகழும் என்பதில் ஐயமில்லை.

அம்பாந்தோட்டை நகரின் அபிவிருத்தியோடு சேர்த்து இப்பிரதேசமும் எதிர்காலத்தில் மிகவும் முக்கியமான பிரதேசமாக மாறும் பொழுது இப்பிரதேசத்தினை உப்பு நகரம் (salt ணீity) என பெயரிட்டு அழகுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கும்படி நிர்வாகத்தினரை வேண்டியுள்ளேன்.

நாம் இந்த நிறுவனத்தை பெற்றுக் கொண்டது தொழில் வழங்குவதற்கு அல்ல. தொழிலாளர் உரிமைகளை பாதுகாத்து அவர்களுக்கும் ஒரு சந்தர்ப்பத்தினை வழங்குவதற்காகவே ஆகும் எனவும் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய உப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மஹிந்த குணவர்தன தெரிவித்ததாவது, ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சியில் தொழில் அமைச்சராக இருந்து நாட்டை பாதுகாத்த தற்போதைய ஜனாதிபதி அக்காலத்தில் ஒரு பிரச்சினைக்குரிய முடிவை எடுத்தார். இதற்கு அவருக்கு அரசியல் ரீதியாக பல எதிர்ப்புகள் வந்தது.

தான் பிறந்த மண்ணில் பாதயாத்திரை சென்ற போது தனக்கு உதவிய உப்பளத்தை தனியார்மயப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்த வேளை அதனை பாதுகாத்து ஊழியர்களுக்கு வழங்கினார். இதனால் இன்று இதனூடாக ஊழியர்கள் மாத்திரமின்றி இப்பிரதேசமும் முழு நாடும் பயன்பெற்று வருகின்றது. இது போன்ற தூர சிந்தனையுள்ள ஒரு தலைவரை நாம் பெற்றுள்ளது எமது அதிர்ஷ்டம்.

இன்று எமது நிறுவனம் சர்வதேச ரீதியிலும் தொடர்புகளை பேணி வருகின்றது. கடந்த காலங்களை விடவும் பாரியளவில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதோடு உப்பு உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டு சிறந்த ரக அயடீன் கலக்கப்பட்ட உப்பும் நாடு பூராவும் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

1997 ஆம் ஆண்டு இதன் வைப்பு 112 மில்லியனாக இருந்ததோடு அது தற்பொழுது 200 மில்லியன் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதோடு 153 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.

அன்றைய தினம் விசேட அதிதிகள் களச் சுற்றுலா ஒன்றுக்கு அழைத்து செல்லப் பட்டு அம்பாந்தோட்டை உப்புக் கூட்டுத்தாபனத்தில் மேற்கொள் ளப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள், புதிய தொழில் நுட்பம், சுற்றாடல் பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பாகவும் காண்பிக்கப்பட்டது.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •