வரு. 77 இல. 238

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 17
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 21ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, OCTOBER 07, 2009

ஐ. நா. அலுவலகக் குண்டுவெடிப்புக்கு தலிபான்கள் உரிமை கோரியதால் பாகிஸ்தான் விமானத்தாக்குதல்

ஐ. நா. அலுவலகக் குண்டுவெடிப்புக்கு தலிபான்கள் உரிமை கோரியதால் பாகிஸ்தான் விமானத்தாக்குதல்

ஆறு தலிபான்கள் பலி: மூன்று பேர் காயம்

பாகிஸ்தான் விமானப்படை நட த்திய தாக்குதலில் ஆறு தலிபான்கள் பலியானதுடன் மூன்று பேர் காய மடைந்தனர். வஸிர்ஸ்தானின் மகின் நவாஸ்கொட் ஆகிய பகுதிகளில் பாகிஸ்தானின் ஜெற்விமானங்கள் கடந்த திங்களன்று தாக்குதல்கள் நடத்தின.

தலிபான்களின் மறைவிட ங்கள் எனச் சந்தேகிக்கப்பட்ட இட ங்கள் தாக்கியழிக்கப்பட்டன. இதில் ஆறு தலிபான்கள் பலியாகினர். மூன்று பேர் காயமடைந்தனர். இந் தப் பிரதேசத்தின் பாதைகள் மூடப் பட்டு நுழைவாயில்களில் படையி னர் காவல் புரிந்தனர்.

எஞ்சியுள்ள தலிபான்கள் இப்பிரதேசங்களில் மறைந்துள்ளதாகத் தகவல்கள் கிடை த்ததால் பாகிஸ்தான் அரசாங்கம் திடீர் இராணுவ நடவடிக்கையில் இறங்கியது.

இஸ்லாமாபாத்தில் ஐ. நா. அரசாங்கம் தாக்குதலுக்குள்ளா னதால் ஐந்து பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு தலிபான்கள் உரிமை கோரியுள்ள நிலையில் ஜெற் விமானங்கள் தலிபான்களின் முக்கிய இடங்களைத் தாக்கின.

பாகிஸ்தானில் வன்முறைகள் தலைதூக்கியுள்ளமைக்கு வஸிரிஷ்தா னில் பயிற்சி பெறும் தலிபான்களே காரணம். ஆப்கான், பாகிஸ்தானில் தீவிரவாதத்தை தோற்றுவிப்போரு க்கு வஸிரிஸ்தான் தளமாக இயங்கு வதால் இப்பிரதேசத்தை முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டியுள்ளதாக இராணுவ அதி காரிகள் தெரிவித்தனர்.

பிரிட்டிஷ் அமைச்சர்கள் பாகி ஸ்தான் வந்து தலிபான்களுக் கெதிரான இராணுவ நடவடிக்கை களை விஸ்தரிப்பது பற்றிப் பேசு கின்றனர். அமெரிக்காவையும் பிரிட் டஷையும் எச்சரிக்கும் பொருட்டு இஸ்லாமாபாத்திலிருந்த ஐ.நா. தலை மையகத்தை தாக்கியதாக தலிபான் கள் தெரிவித்துள்ளனர்.

பைதுல்லா மெசூத் கொலை செய்ய ப்பட்ட பின்னர் பாகிஸ்தானிலுள்ள தலிபா ன்களுக்கு அவரது சகோதரர் ஹகி முல்லாமெசூத் தலைமையேற்றார். இதனால் சோர்வடைந்த தலிபான் கள் உஷாரடைந்தனர். ஆப் கானிஸ் தானில் நேட்டோப் படைகள் தோல் வியடைந்தால் இஸ்லாமிய உலகில் தலிபான்களின் செல்வாக்கு அதிக ரிக்கலாம் என மேற்குலகம் அஞ்சு கின்றமை கவனிக்கத்தக்கது.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •