புத் 67 இல. 48

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 16

SUNDAY NOVEMBER 29 2015

 

 

உள்நாட்டு தொழில் வெற்றிடங்களுக்கும் கல்வித்துறைக்கும் பங்களிப்பு வழங்கும் EDULINK

உள்நாட்டு தொழில் வெற்றிடங்களுக்கும் கல்வித்துறைக்கும் பங்களிப்பு வழங்கும் EDULINK

EDULINK இன்டர்ந'னல் கம்பஸின் முதலாவது பட்டமளிப்பு வைபவம் அண்மையில் வெகு விமர்சையாக இடம்பெற்றது. 2015 ஆம் ஆண்டில் தமது உயர் ;கல்வியை பூர்த்தி செய்த பட்டதாரிகள், உள்நாட்டு தொழில் வெற்றிடங்களை நிவர்த்தி செய்யவதுடன், கல்வித்துறைக்கும் பங்களிப்பு வழங்கவுள்ளனர்.

பட்டப்படிப்பை பூர்த்தி செய்த மாணவர்களில், பிரித்தானியாவின் கிறீன்விச் பல்கலைக்கழகத்திட மிருந்து பட்டங்களை பெற்றிருந்த வர்கள் உள்ளடங்கியிருந்ததுடன், EDULINKஇன் சர்வதேச அடிப்படைக் கற்கைகளை பூர்த்தி செய்தவர்களும் உள்ளடங்கியுள்ளனர்.

கிறீன்விச் பட்டப்படிப்புகளை பூர்த்தி செய்வதவர்களில், கணக்கியல் மற்றும் நிதியியல் பட்டம், சர்வதேச வணிகம், கணனி விஞ்ஞானம் மற்றும் வணிக தகவல் கட்டமைப்பு மற்றும் சர்வதேச வணிக முதுமானிப் பட்டம், கணனி விஞ்ஞானத்தில் முதுமானி பட்டம் பெற்றவர்கள் உள்ளடங்கியுள்ளனர். ஓவ்வொரு பிரிவுகளிலும் சிறப்பான முறையில் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தவர்களுக்கு கௌரவிப்புகள் வழங்கப்பட்டி ருந்தன. EDULINK இன் குழுக் கல்விப் பணிப்பாளர் பேராசிரியர் ஹெலன் மேசன் கருத்து தெரிவிக்கையில், "2015 EDULINK பட்டமளிப்பு வைபவம், எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. ஏனெனில் தலைவர்களாக திகழக்கூடிய ஆளுமை மற்றும் தொழில் புரியக்கூடிய பட்டதாரிகளை உருவாக்கும் எமது இலக்கு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. உயர் கல்விச் செயற்பாடுகளுக்கு இலங்கையை சர்வதேச மையமாக திகழச் செய்யும் இலங்கை அரசின் நோக்கத்துக்கமைய இந்த செயற்பாடு அமைந்துள்ளது. நாட்டின் அறிவு அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சிக்கு அதிகளவு பங்களிப்பு வழங்குவது என்பது எமக்கு பெருமைசேர்ப்பதாகவும் அமைந்துள்ளது" என்றார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.