புத் 67 இல. 48

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 16

SUNDAY NOVEMBER 29 2015

 

 

மெற்றோபொலிட்டன் கல்லூரியின்; நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டமளிப்பு

மெற்றோபொலிட்டன் கல்லூரியின்; நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கல்முனை முன்னாள் மேயர் கலாநிதி சிறாஸ் மீராசாஹிபின் அமெரிக்கா லண்டன் கல்வி நிறுனத்தின் இலங்கை நிறுவனமான மெற்றோபொலிட்டன் கல்லூரியின்; நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா அண்மையில் வெள்ளவத்தையில் உள்ள எக்சலன்சி ஹோட்டலில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார.;; கௌரவ அதிதிகளாக , இராஜhங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌவுசி, பிரதியமைச்சர்அமீர்அலி, பாராளுமன்ற உறுப்பினர்கள் நவவி, இசாக் ஹாஜp, மற்றும் பலர் கலந்து கொண்டனர்

இங்கு உரையாற்றிய அமைச்சர்; றிசாத் பதியுதீன் - தன்னுடன் கொழும்பு சாஹிராக் கல்லூரியில் பயின்ற கலாநிதி சிறாஸ் எனது பாடசாலை நண்பன், அத்துடன் சிறந்த தலைமைத்துவத்தைக் கொண்டவர். அவரது இக் கல்லூரி இலங்கையில் கடந்த 15 வருடங்களாக இயங்கி வருகின்றது. இங்கு 85 க்கும் மேற்பட்டோர் ஆங்கில டிப்ளோமா, உளவியல் சமுக விஞ்ஞானம், மொழிகள், தொழில்நுட்பம், முகாமைத்துவம் போன்ற பயிற்ச்சி நெறிகளை உள்நாட்டு மற்றும் மாலைதீவு மாணவர்கள் பயின்று வெளியேறுகின்றனார். மேலும் இங்கு 650 மாணவர்கள் இங்கு கல்வி கற்று உலகில் நாலா பாகங்களிலும் பறந்து சிறந்த கல்வியலாளர்களாக விளங்குகின்றனர். இந்த அரசின் புதிய கல்வித்திட்டத்தில் தனியார் கல்வி நிறுவனங்களை மேலும் மேம்படுத்தி உள்ளுர் மற்றும் மாலைதீவு போன்ற நாடுகளிலும் உள்ள மாணவர்களை கவர்ந்து பல புதிய திட்டங்களையும் இந்த அரசு வகுத்துள்ளது அத்துடன் தணியார் பல்கலைக்கழங்களை மாலபே பிரதேசத்தில் அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.