புத் 66 இல. 40

ஜய வருடம் புரட்டாதி மாதம் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 துல்ஹஜ் பிறை 09

SUNDAY OCTOBER 05 2014

 

 
விபத்துடன் தொடர்புடைய மர்மமான நபர் யார்?

வாக்கு வங்கி சரிய விபத்தே காரணம்:

விபத்துடன் தொடர்புடைய மர்மமான நபர் யார்?

விரைவில் தெரியவரும் என்கிறார் செந்தில்

“ஊவா மாகாணசபைத் தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வாக்கு வங்கி குறைந்துள்ளதாகக் கருத்துக்கணிப்பு நிலவுகின்றது. இதற்கு பண்டாரவளையில் நடந்த விபத்தே காரணம்” என ஊவா மாகாண சபைத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் வெற்றியீட்டிய செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

“விபத்துக் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொ ண்டு வருகின்றனர். விபத்து டன் தொடர்புடையவர் எனக் கருதப்படும் அந்த மர்ம மான மனிதர் யார் என்று விரைவில் பொலிஸார் கண்டுபிடித்து விடுவர்” என்றும் அவர் தெரிவித்தார்.

“விபத்தில் நான் உட்பட 30 பேர் பாதிக்கப்பட்டோம். 25 பேர் வைத் தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருமே எனது குடும் பத்தினர். இவர்களுக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். நான் குணமாகியதுடன் முத லில் பதுளை மாவட்டத்துக்குச் சென்று விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சந்திக்கவுள்ளேன். தேர்தல் நடைபெறுவதற்கு கடைசி மூன்று தினங்கள் நாங்கள் பதுளை மாவட்டத்தில் இருக்கவில்லை. விபத்தில் படுகாயமடைந்து நான் உட்பட எனது ஆதரவாளர்கள் 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோம். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தொண்டர்கள் ஐநூறுக்கும் மேற்பட்டோர் எங்களுடனேயே இருந்தனர்.

இதனால், இறுதி மூன்று நாட்களிலும் எமக்கு வாக்குகளை திரட்டிக்கொள்வதற்கான சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. சில பிரதேசங்களில் தேர்தல் பிரசாரங்களையும் முன்னெடுக்கவில்லை. இதனால், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ¤க்கான வாக்குகள் குறைவடைந்தன. ஆனால், கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது இத்தேர்தலில் 10000 வாக்குகள் அதிகமாகப் பெற்றுள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.