புத் 66 இல. 40

ஜய வருடம் புரட்டாதி மாதம் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 துல்ஹஜ் பிறை 09

SUNDAY OCTOBER 05 2014

 

 
கலாநிதி A.M.A அkஸ்

கலாநிதி A.M.A அkஸ்

ஞாபகார்த்த தினம்

கலாநிதி ஏ.எம்.ஏ. அkஸ் ஞாபகார்த்த தின வைபவம் எதிர்வரும் 10 ஆம் திகதி வெள்ளிக் கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு கொழும்பு, ஸாஹிராக் கல்லூரி கபூர் மண்டபத்தில் நடைபெறும். ஏ.எம்.ஏ. அkஸ், இலங்கையின் முதலாவது முஸ்லிம் சிவில் சேவை அதிகாரியும், கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் அதிபரும் மற்றும் வை. எம்.ஏ. பேரவை, இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதியம் என்பனவற்றின் ஸ்தாபகரும், செனட்டரும் ஆவார். ஓய்வுபெற்ற வங்கியாளரும், இஸ்லாமிய நிதியியல் ஆலோசகருமான ஏ.ஐ,மரைக்கார் ஞாபகார்த்த உரை நிகழ்த்துவார். ‘இஸ்லாமிய வங்கியியல் - நிதியியலில் ஒரு மாற்று வழி’ என்பது உரையின் தலைப்பாகும். இது ஒரு பகிரங்கச் சொற்பொழிவாகையினால், விரும்பியோர் அனைவரும் சமுகமளிக்கலாம்.

இந்நிகழ்ச்சிக்கு, கலாநிதி அkஸ் மன்றத் தலைவர் எஸ்.எச்.எம். ஜெமீல், வை.எம்.எம்.ஏ.பேரவைத் தேசியத் தலைவர் எம்.ரி.தாஸிம் ஆகியோர் தலைமை தாங்குவர்.

அன்றைய தினம் ‘அறிவோர் பார்வையில் கலாநிதி ஏ.எம்.ஏ. அkஸ்’ எனும் தமிழ் நூலும், “யாழ்ப்பாணம் சோனகத் தெருவின் ஒரு பிரபலமான குடும்பம்” எனும் ஆங்கில நூலும் வெளியிடப்படும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.