புத் 66 இல. 40

ஜய வருடம் புரட்டாதி மாதம் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 துல்ஹஜ் பிறை 09

SUNDAY OCTOBER 05 2014

 

 
தமிழீழத்திற்கு பாதை அமைக்கும் முயற்சி

தமிழீழத்திற்கு பாதை அமைக்கும் முயற்சி

மு.கா.மீது முஸம்மில் பாய்ச்சல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எதிர்காலம் என்பது தமிbழத்திற்கு பாதை அமைக்கும் எதிர்காலமா, என தேசிய சுதந்திர முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் ஊட கப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

தமிழர்களும், முஸ்லிம்களும் இணைய வேண்டிய காலம் வந்துள்ளது. இரு தரப்பும் இணைந்தால் மாத்திரமே எதிர்காலம் உள் ளது என முஸ்லிம் காங்கிரஸின் செயலா ளர் நாயகம் ஹசன் அலி அண்மையில் தெரிவித்திருந்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகத்தின் கருத்தின் பாரதூரமான நிலைமையை இலங்கையின் மக்களுக்கு குறிப்பாக நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு விளக்கப்படுவது தேசிய சுதந்திர முன்னணியின் புறந்தள்ள முடியாத பொறுப்பு எனக் கருதுகிறோம்.

மேற்குலக ஏகாதிபத்தியவாதிகளின் உதவியுடன் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள இரண்டாம் ஈழ நடவடிக்கையின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய முஸ்லிம் காங்கிரஸ் செயற்பட்டு வருகிறது என்பதை நாம் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வந்தோம், ஹசன் அலி அவர்களின் கருத்து இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது.

முஸ்லிம் காங்கிரஸ் உட்பட மேற்குலக ஏகாதிபத்தியவாதிகளின் நேரடியான அனுசரணையின் கீழ் செயற்படும் அடிப்படைவாத அணிகள் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையில் விரோதத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் கடந்த காலம் முழுவதும் ஈடுபட்டன.

மேலும் இரண்டு இனங்களுக்கும் இடை யில் இருந்து வரும் நீண்டகால சக வாழ்வை உடைக்க வேண்டும் என்ற முயற்சியில் இவர்கள் ஈடுபட்டனர்.

சிங்கள மக்களின் தொந்தரவுகளைத் தொடர்ந்தும் பொறுத்துக் கொள்ள முடியாதாம். இதற்குப் பதிலாக வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களுடன் கைகோர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை முஸ்லிம் மக்கள் மத்தியில் உறுதியாக்கும் எதிர்பார்ப்பு முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக முன்னெடுக்கப்பட்டதாம்.

முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையில் பகையை ஏற்படுத்தும் மோதல் நிலைமையை பயன்படுத்தி முஸ்லிம் காங்கிரஸ் தனது புதிய ஈழ நடவடிக்கைக்கு ஏதுவான தனது பணிகளை ஆரம்பித்துள்ளது எனவும் மொஹமட் முஸாம்மில் கூறியுள்ளார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.