புத் 66 இல. 21

விஜய வருடம் வைகாசி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் பிறை 25

SUNDAY MAY 25 2014

 

 
இவ்வருடமும் ர~;ய மற்றும் சோவியத் ஒன்றிய நாடுகளில் உல்லாசப் பிரயாண பிரசார நிகழ்வுகள் பல...

இவ்வருடமும் ர~;ய மற்றும் சோவியத் ஒன்றிய நாடுகளில் உல்லாசப் பிரயாண பிரசார நிகழ்வுகள் பல...

ஜீடந்த வருடம் ரஷ்யாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்கள் பலவற்றிலும் மற்றும் பெலோரஷ்யா, யுக்ரேன் நாடுகளில் நடைபெற்ற உல்லாசப் பயண பிரசார நடவடிக்கைகளில் கிடைத்த வெற்றியின் பலனாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதரகம், இலங்கை உல்லாசப் பிரயாண அபிவிருத்தி பணியகத்தின் பூரண ஒத்துழைப்புடன் அவ்வாறான பல நிகழ்வுகளை இவ் வருடமும் ரஷ்யா, ஆர்மேனிய, பெலோரஷ்யா, யுக்ரேன் மற்றும் மொல்தோவியா தேசங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்கள் பலவற்றில் நடைபெற ஏற்பாடு செய்துள்ளது. முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளும் தற்போது சுயாதீன நாடுகளாகவும் செயற்படும், இவ் நாடுகளுக்கான இலங்கை தூதரகமாக செயற்படுவது, ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலே அமைந்திருக்கும் இலங்கை தூதரகமாகும்.

இவ் வருட பிரசார நிகழ்வுகளில் முதற் கட்ட நிகழ்வுகள் ரஷ்ய மற்றும் ஆர்மேனிய நாடுகளில் நடைபெற சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இந் நிகழ்வுகள் 2014 மே மாதம் 29ம் திகதி மொஸ்கோ நகரிலே ஆரம்பிக்கவுள்ளன.

மூன்று தினங்கள் நடைபெறவிருக்கும் இந் நிகழ்விலே, இலங்கை கலாசார நடனங்கள், உல்லாசப் பயண ஒழுங்கமைப்பாளர்களுக்கான கருத்தரங்குகள், இலங்கை தொடர்பான புகைப்படக் கண்காட்சிகள், ஆயுர்வேத மற்றும் கைத்தொழில் பாசறைகள் போன்றன இடம்பெறவுள்ளன.

இதன் பின் கசான், சமார, சராதொவ், வோல்கோகரத், பிரசித்த தோன்ற நதிக்கரை நகரமான இரஷ்தொப் போன்ற ரஷ்ய நகரங்களிலே இந் நிகழ்ச்சிகள் நடைபெறுவதுடன் ஆர்மேனியாவில் 2014 ஜுன் 16 திகதி நடைபெறும் இறுதி நிகழ்ச்சியுடன் முதல் கட்ட நிகழ்வுகள் நிறைவு பெற உள்ளன.

இலங்கையின் புகழ்மிகு நடன குழுக்கள் வழங்கும் கண்கவர் நடன நிகழ்ச்சிகள் சகல நகரங்களின் பிரதான கடைத் தொகுதிகளிலும், வெட்ட வெளித் திடல்களிலும் நடைபெறுவதுடன் இவற்றினை கண்டு களிக்க வரும் வெளி நாட்டவர்களுக்கு இலங்கை தேநீரின் சுவையை உணரக்கூடியவாறு இலவசமாக தேநீர் வழங்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வுகள் தொடராக மூன்று வாரங்கள் சகல நிகழ்ச்சிகளும் உள்ளடங்கலாக நடைபெற உள்ளமை சிறப்பம்சமாகும்.

அதேசமயம் நகரங்களை தேர்ந்தெடுக்கும் போது மக்கள் தொகை ஒரு மில்லியனுக்கு மேலாக வசிக்கும் நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் அந் நகரங்களில் இருந்து இலங்கைக்கு விமான பயண வசதியுள்ளமை பற்றியும் கருத்தில் கொள்ளப்பட்டது.

இலங்கை உல்லாசப் பயண அபிவிருத்தி பணியகத் தரவுகளுக்கமைய 2013ஆம் வருட ஏப்ரல் மாதத்தை விட 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கைக்கு வருகை தந்த உல்லாசப் பயணிகளின் தொகை 39.5% வீதம் அதிகரித்துள்ளது. ரஷ்யா மற்றும் சோவியத் ஒன்றிய நாடுகளில் இருந்து வருகை தரும் உல்லாசப் பயணிகளின் தொகையும் இவ்வதிகரிப்புக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது.

இவ் வருட முதல் நான்கு மாதங்களில் மட்டும் ரஷ்யாவிலிருந்து வருகை தந்த உல்லாசப் பயணிகளின் தொகை 81.1% அதிகரித்துள்ளமை இதற்கு சான்றாகும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.