புத் 66 இல. 21

விஜய வருடம் வைகாசி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் பிறை 25

SUNDAY MAY 25 2014

 

 
எங்கள் நாட்டை 1505ல் ஆக்கிரமித்த போர்த்துக்கேயர் றோமன் கத்தோலிக்க மதத்தை இங்கு அறிமுகம் செயாதார்கள்

எங்கள் நாட்டை 1505ல் ஆக்கிரமித்த போர்த்துக்கேயர் றோமன் கத்தோலிக்க மதத்தை இங்கு அறிமுகம் செயாதார்கள்

இலங்கைக்கு சர்வதேச ரீதியில் அச்சுறுத்தல்களையும் அழுத்தங்களையும் கொண்டு வருவதில் அமெரிக்காவையே மிஞ்சிவிடக் கூடிய வகையில் பிரிட்டிஷ் அரசாங்கம் இராஜதந்திரம் என்ற போர்வையின் கீழ் இன்று சதி வேலைகளை திரைமறைவில் செய்து கொண்டிருக்கிறது.

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் இந்த முகமூடியை கிழித்து எறியும் நோக்கத்துடனேயே இந்த கட்டுரை எழுதப்படுகிறது. இந்தக் கட்டுரையில் உள்ள உண்மையான தகவல்களை வாசித்து தெரிந்து கொள்வதன் மூலம் பிரிட்டிஷ் அரசாங்கத்தைச் சேர்ந்த இராஜதந்திரிகளும் இராணுவ வீரர்களும் வரலாற்றுக் காலம் தொட்டு நம் நாட்டு மக்களை அடிமைகளாக வைத்து பிரித்து வாழும் கொள்கையை மிகவும் தந்திரமான முறையில் கையாள்வதன் மூலம் எங்கள் தேசிய செல்வத்தை சூரையாடிய விபரங்களையும் உள்ளடக்கியதாக இது அமைந்துள்ளது.

இலங்கை வரலாற்றை திரும்பிப் பார்க்குமிடத்து 2014 மே மாதத்தை அடைந்த போது நாம் போர்த்துக்கேய ஆட்சியாளர்களினால் 1505ம் ஆண்டில் அடிமையாக்கப்பட்ட நிகழ்வில் 358வது வருடம் நிறைவடைந்துள்ளது.

இதுவரைகாலமும் இலங்கைக்கும் தமிழ் நாட்டில் உள்ள சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்கு இடையில் அடிக்கடி யுத்தங்கள் ஏற்பட்டு இம் மூன்று மன்னர்களின் எவராவது ஒருவர் இலங்கையின் சில பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி நடத்திக் கொண்டிருந்த போதிலும் அவர்களினால் கலாசார சீர்குலைவோ இந்து, பௌத்த மதங்களுக்கு அழிவோ ஏற்படவில்லை.

இவ்விதம் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த இந்திய மன்னர்களை நம் நாட்டு மக்கள் ஒற்றுமையாகப் படைகளைத் திரட்டி விரட்டி அடித்ததும் உண்டு. இந்த யுத்தங்கள் ஒரே நாட்டில் உள்ள இரு குழுக்களுக்கு இடையில் நடந்த சண்டையைப் போன்று இருந்ததே ஒழிய அவை இரு நாடுகளுக்கு இடையிலான கோர யுத்தங்களாக அமையவில்லை.

இவ்விதம் தென்னிந்திய சேர, சோழ. பாண்டிய மன்னர்களின் ஆக்கிரமிப்பினால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கீழைத்தேய கலாசாரம் வலுவடைவதற்கும் அதன் மூலம் இந்தியா வின் கட்டிடக்கலை இலங்கையிலும் அறிமுகப்படுத்துவதற்கும் இலங்கையில் இந்துக் கோயில்கள் உருவாகுவதற்கும் ஒரு பின்னணி காரணியாக அமைந்து இருந்தது.

ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களைப் போன்று இந்தியாவில் இருந்து இலங்கையை கைப்பற்றி ஆட்சி நடத்திய சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் படை வீரர்கள் நம்நாட்டுப் பெண்களை தங்கள் காம இச்சையைப் பு+ர்த்தி செய்வதற்காக தான்தோன்றித் தனமாக நடந்து துன்புறுத்தினார்கள் என்பதற்கும் ஆதாரங்கள் இல்லை.

இங்கு வந்த தென்னிந்திய ஆக்கிரமிப்பாளர்கள் எமது பெண்களை சம்பிரதாயபூர்வமாக திருமணம் செய்து இல்லறவாழ்க்கையி;ல் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

தென்னிலங்கையில் உள்ள சிங்களப் பெண்களைக் கூட இந்த இந்திய மன்னர்களின் வழித்தோன்றல்கள் திருமணம் செய்து மகிழ்ச்சியோடு வாழ்ந்ததாகவும் அதனால் தான் தென்னிலங்கையில் உள்ள சிங்களவர்களின் பெயர்களில் தமிழ்ப் பெயர்களும் இணைந்திருப்பதாக வரலாற்றில் இருந்து ஆதாரங்களை காணக்கூடியதாக இருக்கிறது.

1505ம் ஆண்டில் இலங்கையை ஐரோப்பாவில் இருந்து வந்த போர்த்துக்கேய மாலுமிகள் கைப்பற்றிய சம்பவம் முதல் 1948ல் இலங்கை பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற நாள் வரை இடம்பெற்ற வரலாற்று சம்பவங்களை நாம் இப்போது ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.

1505ம் ஆண்டில் இடம்பெற்ற போர்த்துக்கேயரின் ஆக்கிரமிப்பே இலங்கையின் வரலாற்றில் ஒரு அதிமுக்கிய நிகழ்வாக அமைந்திருக்கிறது. அன்றிலிருந்து போர்த்துக்கேயருக்கு எதிரான யுத்தத்தில் எங்கள் நாட்டில் தேசப்பற்றுள்ள படையினர் முல்லேரியாவிலும், ரன்தெனிவெலயிலும் நடத்திய போராட்டங்கள் போர்த்துக்கேயரை வலுவடையச் செய்தது.

இந்தக் காலகட்டத்தில் ஒல்லாந்த ஆக்கிரமிப்பாளர்களும் போர்த்துக்கேயருக்கு எதிராக யுத்தத்தை நடத்தியதனால் போர்த்துக்கேயருக்கு எதிரான யுத்தம் இருமுனைப்போராட்டமாக மாறியது. ஒரு பக்கத்தில் ஒல்லாந்தரும் மறு பக்கத்தில் இலங்கையின் தேசப்பற்றுள்ள படைகளும் போர்த்துக்கேயரை எதிர்த்துப் போராடினார்கள்.

இவற்றின் எதிரொலியாக 1505ம் ஆண்டில் லோரன்ஸ் டி அல்மேதா என்ற போர்த்துக்கேய இராணுவத் தளபதி இலங்கையை ஆக்கிரமித்த தினத்தில் இருந்து 150 வருடங்களுக்குப் பின்னர் போர்த்துக்கேயர் இலங்கையின் தேசப்பற்றுள்ள இராணுவத்தினரின் உதவி யுடன் போர்த்துக்கேயரை யுத்த முனையில் தோற்கடித்து அவர்களின் கப்பல்கள் அனைத்தையும் நிர்மூலமாக்கி இலங்கை மண்ணில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள்.

இந்தக் கடைசி யுத்தம் 7 மாதங்களாக தொடர்ச்சியாக நடைபெற்று இறுதியில் இவ் யுத்தத்தில் போர்த்துக்கேயர் மண் கவ்வ வேண்டிய நிலை ஏற்பட்டது. இரண்டாவது இராஜசிம்ம என்ற மன்னன் ஒல்லாந்தர்களின் உதவியை நாடி போர்த்துக்கேயரை இங்கிருந்து விரட்டியடித்தான்.

போர்த்துக்கேயரை விரட்டியடித்த ஒல்லாந்தருக்கு இலங்கை மன்னன் வரவேற்பளித் நிகழ்வை மிளகாயைக் கொடுத்து அதற்கு பதில் இஞ்சியை பெற்றுக் கொண்டது போன்ற ஒரு பாரதூரமான விளைவு என்று அன்றைய மூதாதையர்கள் கிண்டல் செய்து போர்த்துக்கேயரைப் போன்று ஒல்லாந்தரும் இலங்கை மக்களின் செல்வத்தை சுரண்டி எங்களை அடிமையாக்கும் திட்டத்தை செயற்படுத்துவார்கள் என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தினார்கள்.

போர்த்துக்கேயர் காலத்திலேயே இலங்கைக்கு றோமன் கத்தோலிக்க மதம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அதனால் வடபகுதியிலும் நாட்டின் கரையோரப் பகுதிகளிலும் உள்ள பௌத்த மற்றும் இந்துக்கள் பலவந்தமாக கத்தோலிக்க மதத்துக்கு மாற்றப்பட்டனர்.

இவ்விதம் றோமன் கத்தோலிக்க மதத்தைத் தழுவியர்களுக்கு அன்றைய போர்த்துக்கேய ஆட்சியாளர்கள் பல சலுகைகளையும் சன்மானங்களையும் கொடுத்து தமது மதத்தினை பரப்புவதற்கு உதவி செய்தார்கள்.

இந்தக் காலகட்டத்தில் இலங்கைக்கு வந்த அராபிய மாலுமிகளின் வழித்தோன்றல்களான சோனக இன வர்த்தகர்களிடம் இருந்த வாசணைத் திரவி யம் மற்றும் இரத்தினக்கல் தொழிலை போர்த்துக்கேயர் அபகரித்து அவர்களையும் துன்பத்தில் ஆழ்த்தினார்கள்.

இங்கு வந்த மலபார் இனத்து முஸ்லிம்களும் 1538ல் பெடலை என்னும் இடத்தில் மார்டின் அல்பான்சோ டி சூசா என்ற போர்த்துக்கேய இராணுவத் தளபதியி னாலும் 1539ல் மிகல் பெரேரா என்ற இராணு தளபதியினாலும் நீர்கொழும்பில் தோற்கடிக்கப்பட்டனர்.

1550ம் ஆண்டில் இந்தியாவில் வைஸ்ரோய் என்ற உயர் பதவி வகித்த அல்வான்சோ நொரான்னோ என்ற இராணுவத் தளபதி 500 போர்த்துக்கேய போர்வீரர்களுடன் கொழும்புக்கு வந்து முதலில் சீதாவக்கவில் தாக்குதலை மேற்கொண்டு பின்னர் கோட்டை இராஜதானியையும் ஆக்கிரமிப்பு செய்தார்.

இந்த கொடுமைக்கார போர்த்துக்கேய தளபதி எங்கள் நாட்டு மக்களின் இரண்டு இராஜதானிகளை ஆக்கிரமிப்பு செய்ததுடன் அங்கிருந்த பௌத்த விகாரைகளை அழித்து ஒழித்ததுடன் அங்கிருந்த 2 மன்னர் மாளிகைகளில் உள்ள பொக்கி'ங்களையும் கொள்ளையிட்டான்.

இந்தக் காலகட்டத்திலேயே போர்த்துக் கேயர் கத்தோலிக்க மத போதகர்களை இங்கு அழைத்து வந்து நம் நாட்டவர்களை கத்தோலிக்கர்களாக மனமாற்றம் செய்யும் பணியையும் நிறைவேற்றினார்கள்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.