புத் 66 இல. 21

விஜய வருடம் வைகாசி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் பிறை 25

SUNDAY MAY 25 2014

 

 

சுனைனாவின் புது முயற்சி

சுனைனாவின் புது முயற்சி

காதலில் விழுந்தேன் என்ற படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சத்தில் இடம் பிடித்தவர் நடிகை சுனைனா.

இந்த படத்திற்கு பிறகு மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், திருத்தணி, வம்சம், நீர்ப்பறவை என அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார்.

ஆனால் இவருக்கு பெயர் சொல்லும் வகையில் எந்த படமும் அமைய வில்லை என்றே கூறலாம்.

ஆனாலும் சுனைனா தொடர்ந்து கதையை தேர்வு செய்து படங்களில் நடித்து வருகிறார், அதோடு சமீபத்தில் கூட தன் பெயரை அனு'h என்று மாற்றிக் கொண்டார்.

பெயர் மாற்றத்துக்கு பிறகு சுனைனா, தற்போது ஸ்ரீகாந்த்துக்கு ஜோடியாக நம்பியார் படத்திலும், விஜய் சேதுபதி மற்றும் கிருஷ்ணா நடித்துக் கொண்டிருக்கும் வன்மம் படத்திலும் நாயகியாக நடிக்கிறார்.

மேலும் வன்மம் படத்திற்காக உடல் எடையை இன்னும் கொஞ்சம் குறைத்து ஸ்லிம்மாகி இருக்கிறார் சுனைனா.

சுனைனாவின் இந்த ஸ்லிம் அவதாரத்தை பார்த்தவர்கள் எல்லாம் பாராட்டு மழையால் நனைய வைக்கிறார்களாம். இதனால் இனி நமக்கு நல்ல காலம் தான் என்ற பகல் கனவு கண்டு கொண்டு இருக்கிறார் சுனைனா என்ற அனு'h.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.