புத் 66 இல. 21

விஜய வருடம் வைகாசி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் பிறை 25

SUNDAY MAY 25 2014

 

 

சர்வதேச அங்கீகாரம் பெற்ற 5S சான்றிதழ் MMBL-பாத் பைண்டர் குழுமத்திற்கு

சர்வதேச அங்கீகாரம் பெற்ற 5S சான்றிதழ் MMBL-பாத் பைண்டர் குழுமத்திற்கு

சர்வதேச அங்கீகாரம் பெற்ற 5S சான்றிதழ், பெலியாகொட ரிவர் பொய்ன்ற்றில் இடம்பெற்ற வைபவ மொன்றில், மும்பாயின் இன்ரெர்நெ' னல் சேர்ட்டிபிக்கே'ன் சேர்விசஸ் பிறைவேட் லிமிடெட்டினால் MMBL -பாத் பைண்டர் குழுமத்துக்கு அண்மையில் வழங்கப்பட்டுள்ளது.

இவ்விருதினைக் கையளித்து உரை யாற்றிய, கைஸான் புரொடக்டிவிட்டி (பிறைவேட்) லிமிடெட்டின் தலை வரும் முகாமைத்துவப் பணிப்பாளரு மான லால் பொன்சேக்கா, 5ளு அலுவலக முகாமைத்துவ முறைமக ளுக்காக, சர்வதேச சான்றிதழ் இலங்கைக்குக் கிடைப்பது இதுவே முதல்; தடவை என்றார். இவ்வாறான உயர் தரத்தை அடைவதற்குச் செலவிடப்பட்ட காலம் ஆச்சரியம் தரத்தக்க வகையில் மிகக் குறை வானதாக அமைந்ததாகவும், இத் தரத்தினை அடைவதற்கு இந்நிறு வனத்துக்கு 7 வாரங்களே தேவைப் பட்டதாகவும் இது உண்மையில் பாராட்டப்பட வேண்டியதொரு சாதனை என்றும் குறிப்பிட்டார். சர்வதேச தராதரங்கள், வழிகாட்டல்கள், நடைமுறைகள் என்பனவற்றுக்கான தேவைப்பாடுகளுக்கு இணங்;கிச் செயற்படும் ஒரு அமைப்பாக இந் நிறுவனம் பதிவு செய்யப்பட்ட பின் னரும், பல்வேறு மதிப்பீகளுக்குப் பின்னருமே இச்சான்றுதல் இதற்கு வழங்கப்பட்டுள்ளது.

முகாமைத்துவ முறைமைகளின் குறித்த கால இடைவெளிகளுக் ;கிடையிலான கணக்காய்வுகளின் அடிப்படையிலும், முகாமைத்துவ முறைமைகளில் அல்லது அதன் கூறுகளில் குறிப்பிடத்தக்க மாற்ற ங்கள் ஏற்படும்போது அவை பற்றி மும்பாயை தளமாகக் கொண்டி யங்கும் இன்டெர்நெ'னல் சேர்டி பிக்கே'ன் சேர்விசஸ் பிறைவேட் லிமிடெட்டுக்கு எழுத்து மூலமாக அறிவிக்கப்படும் பட்சத்திலும், இச் ;சான்றிதழ் செல்லுபடியாகும் கால எல்லையானது நீடித்துச் செல்லும். இதன் விளைவாக MMBL -பாத் பைண்டர் குழுமம், 2015 ஆம் ஆண்டிலேயே கணக்காய்வுக்கு உட்படுத்தப்படும்.

பரவலாக நடைமுறையில் இரு க்கும் ஜப்பானிய கோட்பாடான 5ளு 5 பாரிய விடயங்களை உள்ளடக் கியது. அவையாவன செய்ரி (வகைப்படுத்தல்), செய்டன்(தயார் செய்தல்), செய்சோ(பிரகாசித்தல்), செய்கெத்சூ (தரப்படுத்தல்), சிட்சுகே (நிலைத்திருத்தல்) என்பனவாகும். வேலைத்தளத்தில் அழுத்தத்தினைக் குறைத்து வினைத்திறனை அதிக ரிக்க பரவலாக அங்கீகரிக்கப்பட்ட நடைமுறை இதுவென்பது குறிப்பிட த்தக்கது. 'செய்ரி' வகைப்படுத் தல்கள் மூலம் தேவையற்றன வற்றை அப்புறப்படுத்துகின்றது. முறையான முகாமைத்துவத்துக்கும், பொருட்கள், கோப்புகள், உபகர ணங்கள் எதுவானாலும் அவற்றை இலகுவாக மீட்டெடுக்கவும் உதவு கின்றது 'செய்டன';;. 'செய்சோ' வேலைத்தளத்தினை தூய்மையாகவும், அழுக்கில்லாமலும் பாதுகாப்பதால் வினைத்திறனை அதிகரிக்கின்றது. 'செய்கெத்சூ' வண்ண குறியீட்டு முறைமையை உபயோகிப்பதன் மூலம் அலுவலக முறைமைகளை தரப்படுத்துகின்றது. 'சிட்சுசே' தரத ;தினைப் பின்பற்றுவதை பெருமை யாக உணரவைப்பதன் மூலம் அதனை ஊக்கப்படுத்துகின்றது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.