புத் 66 இல. 21

விஜய வருடம் வைகாசி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் பிறை 25

SUNDAY MAY 25 2014

 

 
இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி ஜனாதிபதி முகர்ஜp முன்பாக பதவிப்பிரமாணம்

இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி ஜனாதிபதி முகர்ஜp முன்பாக பதவிப்பிரமாணம்

இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி நாளை 26 ஆம் திகதி திங்கட்கிழமை பதவியேற்கிறார். இந்தியக் குடியரசுத் தலைவரின் மாளிகையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் அவருக்குப் பதவிப் பிரமாணம், இரகசியக் காப்புப் பிரமாணம் ஆகியவற்றை குடியரசுத் தலைவரான ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி செய்து வைக்கவுள்ளார்.

இந்தியாவில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் அதிகாரத்ததைப் பெற்றது. ஆட்சியமைப்பது தொடர்பாக பா.ஜ.க, கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் இந்திய நாடாளுமன்றில் நடந்தது. இதில் மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைக்க ஒருமனதாக ஆதரவு தெரிவித்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை மோடி நேரில் சந்தித்து ஆட்சியமைப்பதற்கான உரிமை கோரி கடிதத்ததை வழங்கினார். இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவரின் செயலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு திங்கட்கிழமை (மே 26) மாலை 6 மணிக்குப் பதவியேற்கும் . அதில் பிரதமர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம், இரகசியக் காப்புப் பிரமாணம் ஆகியவற்றை குடியரசுத் தலைவர் செய்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.