புத் 66 இல. 21

விஜய வருடம் வைகாசி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் பிறை 25

SUNDAY MAY 25 2014

 

 

பிரேசிலுக்கு தான் உலகக்கிண்ணம்: இப்ராகிமோவிச் சொன்ன இரகசியம்

பிரேசிலுக்கு தான் உலகக்கிண்ணம்: இப்ராகிமோவிச் சொன்ன இரகசியம்

உலகக்கிண்ண கால்பந்து தொடரில் பிரேசில் அணி தான் கிண்ணத்தை ஆறாவது முறையாக வெல்லும் என இப்ராகிமோவிச் தெரிவித்துள்ளார்.

சுவீடன் கால்பந்து அணியின் அணித்தலைவராக இப்ராகிமோவிச் உள்ளார். ஆனால் பிரேசிலில் நடக்கும் உலகக்கிண்ண தொடருக்கு இந்த அணி தகுதிபெறவில்லை.

உலகக்கிண்ணப் போட்டியில் தகுதி பெறாதது பற்றி இப்ராகிமோவிச் கூறுகையில், சொந்தமண்ணில் களமிறங்கும் பிரேசில் அணிக்கு சம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ளது. இந்த அணி ஆறாவது முறையாக கிண்ணத்தை வென்று வரலாறு படைக்கும்.

ஏனென்றால் பிரேசிலில் நடக்கும் உலகக்கிண்ண தொடரில் பங்கேற்கும் ஐரோப்பிய அணிகளுக்கு, அங்குள்ள வானிலை உட்பட பல சு+ழ்நிலைகள் கடினமாக இருக்கும். எனவே இதற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வது சிரமம். இந்த காரணங்களால் பிரேசில் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்.

மேலும் இந்த உலகக்கிண்ண தொடரில் பங்கேற்க முடியாமல் போனது எங்களுக்கு மிகுந்த வருத்தம் தான். தகுதிச் சுற்று போட்டிகளில் எங்களால் முடிந்தவரை சிறப்பாகத் தான் போராடினோம்.

ஆனால் கடைசியில் முடியாமல் போய்விட்டது. அடுத்த தொடரில் இன்னும் வலிமையாக மீண்டு வருவோம் என்று கூறியுள்ளார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.