புத் 66 இல. 21

விஜய வருடம் வைகாசி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் பிறை 25

SUNDAY MAY 25 2014

 

 
எங்கள் தேசிய செல்வமான யானை இனத்தை

எங்கள் தேசிய செல்வமான யானை இனத்தை

காப்பாற்றுவது பொதுமக்களின் சமூகப் பொறுப்பாகும்எங்கள் நாட்டின் அரசியலில் யானை ஒரு முக்கிய இடத்தை வகித்து வருகிறது. இலங்கையின் முதலாவது அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னமாக யானை இருந்து வருகிறது.

யானைகள் எங்கள் நாட்டின் தேசிய செல்வமாக மதிக்கப்படுகின்றன. சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர் அபிவி ருத்தி என்ற பெயரில் காடுகள் அழிக்கப்பட்டு புதிய குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படாத காலகட்டத்தில் எங்கள் நாட்டின் யானைகள் மிகவும் அமைதியான முறையில் மனிதர்களுக்கு தீங்கிழைக்காமல் காடுகளில் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தன.

1950ம் ஆண்டு தசாப்தத்தில் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம மந்திரி டி.எஸ்.சேனநாயக்க கல்லோயா அபிவிருத்தித் திட்டத்தை அமுலாக்க ஆரம்பித்ததை அடுத்து காடுகள் அழிக்கப்பட்டு அங்கு விவசாயிகளின் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.

அத்துடன் காட்டு நிலங்களும் மரங்கள் வெட்டி அகற்றப்பட்ட பின்னர் பன்படுத்தப்பட்டு நெற்காணிகளாக மாற்றப்பட்டன. இதனால் எங்கள் நாட்டின் தேசிய விலங்காக நாம் அன்புடன் மதித்து வரும் காட்டு யானைகளின் இருப்பிடம் சுருங்கத் தொடங்கியது.

தங்களுடைய பிரதேசத்தில் மனிதர்கள் குடியேறிவிட்டார்கள் என்பதை அறியாத யானைகள் தங்களின் பண்டைய வாசஸ்தலமான மனிதர்கள் குடியிருக்கும் புதிய குடியேற்றங்களுக்குள் அத்துமீறிப் புகும் சந்தர்ப்பங்களில் ஆத்திரமடைந்த குடியேற்ற வாசிகளின் துப்பாக்கி குண்டுக்கு இழக்காகி பெருமளவில் மரணிக்கின்றன.

இதேநேரத்தில் சில சுயநலவாத கும்பல்கள் காடுகளுக்குள் சட்ட விரோதமாக கூடுருவிச் சென்று யானைகளின் தந்தங்களை எடுப்பதற்காக அவற்றை சுட்டுக் கொல்லும் நாசகார வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்ற காரணத்தினால் இன்று யானைகளின் எண்ணிக்கை எங்கள் நாட்டில் குறைந்து வருகிறது.

சமீபகாலமாக குட்டியானைகள் சட்டவிரோதமாக களவெடுக்கப்படுகின்ற பல்வேறு சம்பவங்களை நாம் சமீபத்தில் பத்திரிகைகளின் மூலம் நாம் வாசித்தும் இருக்கின்றோம்.

இந்த பின்னணியை வைத்து யானைகள் பற்றிய சில விபரங்களை நாம் உங்களுக்கு எடுத்துரைப்பது பொருத்தமாக இருக்கும்.

யானைகளின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். யானைகள் தாவரப் பச்சிணிக் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும். அவை பாலூட்டும் மிருகங்களாகும். யானைகளுக்கு இருக்கும் துதிக்கை அதன் பெரிய உடம்பை தாக்கக்கூடிய சிறிய பு+ச்சிகள் போன்றவற்றை தடைசெய்தவற்கு பயன்படுத்தும் ஒரு பாரிய காத்தாடியைப் போன்று இருக்கின்றன.

யானைகளின் மூதாதையர் 50 முதல் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வடஅமெரிக்காவில் வாழ்ந்ததாக வரலாறு சான்று பகர்கிறது.

யானைகள் குடும்பத்தில் 350 வௌ;வேறு இனங்கள் இருக்கின்றன. ஆனால் இன்று மூன்று வகையான யானை இனங்களே இருக்கின்றன. இந்த மூன்று வகையான யானை இனங்களும் இருண்ட கண்டமான ஆபிரிக்காவில் இருந்தே தோன்றின.

இவற்றில் இரண்டு யானை இனங்கள் ஆபிரிக்காவிலேயே தொடர்ந்தும் இருக்கின்றன. மூன்றாவது யானை இனமான ஆசியாக் கண்டத்துக்கு வந்தடைந்ததனால் அவற்றை ஆசிய யானைகள் என்று அழைக்கிறார்கள்.

இலங்கையில் உள்ள காட்டு யானைகள் நாளொன்றுக்கு 50 முதல் 200 கிலோமீற்றர் தூரம் நடப்பதுடன் அவை ஐய்யாயிரம் முதல் 20 ஆயிரம் ஹெக்டயர் நிலப்பரப்பை பயன்படுத்துகின்றன.

யானைகள் உணவு, நீர், ஓய்வெடுக்க வசதியான காடுகள் மற்றும் இனவிருத்தியில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கும் இடங்களிலேயே பெரும்பாலும் வாழுகின்றன. ஆண் யானைகள் விடலைப் பருவத்தைத் தாண்டியவுடன் தங்கள் கூட்டத்தில் இருந்து விலகிச் சென்று தனியாக வாழ்கின்றன.

யானைகளுக்கு மதநீர் வெளியேறும் சந்தர்ப்பத்தில் அவை அமைதியிழந்து எல்லோரையும் தாக்கும் மூர்க்கத் தனமானவையாக மாறிவிடுவதுண்டு. மதநீர் வெளியேற்றம் தணிந்த பின்னர் அவை அமைதியடைந்து தனக்கு ஒப்பான பெண் யானையுடன் இணைந்து சேர்க்கையில் ஈடுபடுகின்றது.

பெண் யானைகளின் தலைமையில் விடலைப் பருவத்தை அடைந்த யானைகளும் குட்டி யானைகளும் தங்களுக்கு சொந்தமான பிரதேசத்தில் நிலைகொண்டிருப்பதே பொதுவான சம்பிரதாயமாகும். இலங்கை போன்ற நாடுகளில் உள்ள ஆசிய யானைகளை பகல்பொழுதில் காடுகளில் அவதானிப்பது கஷ்டமாக இருக்கும்.

அவை பெரும்பாலும் நடுக்காட்டில் மரங்களின் நிழலில் பகல் பொழுதில் ஓய்வெடுத்து சூரிய அஸ்தமனத் துக்குப் பின்னரே வெளியில் வருகின்றன. ஆபிரிக்க யானைகளின் உயரம் 3.5 மீற்றர்களாகும். ஆயினும் ஆசிய யானைகள் அவற்றை விட குறைந்த 3 மீற்றர் உயரத்திலேயே இருக்கின்றன.

ஆசிய யானைகளின் நிறை 3 வாயிரம் முதல் 6 ஆயிரம் கிலோகி ராம் ஆகும். ஆபிரிக்க யானைகளின் நிறை 4 ஆயிரம் முதல் 7500 கிலோ கிராம் ஆகும். ஆசிய யானைகளின் தந்தத்தின் நுனியில் ஒரு விரலைப்போன்று ஒரு பகுதி நீண்டு கொண்டிருக்கும். ஆபிரிக்க யானைகளின் தந்தத்தின் நுனியில் இரண்டு விரல்களைப் போன்ற ஒரு பகுதி நீண்டு கொண்டிருக்கும்.

ஆசிய யானைகளின் காதுகள் சிறி தாகவும், ஆபிரிக்க யானைகளின் காதுகள் பெரிதாகவும் இருக்கும். ஆசிய யானைகளில் ஆண் யானைகளுக்கே தந்தம் இருக்கும். ஆயினும் ஆபிரக்க ஆண் யானைகளுக்கும் பெண் யானைகளுக்கும் தந்தம் இருக்கும்.

குட்டியானைகள் தாயிடம் இருந்து பாலை உறிஞ்சியே குடிக்கின்றன. குட்டியானைகளின் பிரதான உணவாக அமைந்திருப்பது தாய்ப்பாலாகும். பொதுவாக யானைகள் 60 வயது வரை உயிர்வாழ்கின்றன. என்றாலும் 80 வயதுவரையில் உயிர்வாழும் யானைகளும் இருக்கின்றன. சில பெண் யானைகள் கர்ப்பம் தரித்து 22 வருடங்களுக்குப் பின்னரும் குட்டிகளை ஈன்றெடுப்பதுண்டு.

யானை கூட்டங்களுக்கு தலைமை தாங்குவது பெண்யானைகளாகும். தனது கூட்டம் ஆபத்துக்களில் சிக்குவதை தடுப்பதற்கான பாதுகாப்பை பெண்யானைகளே மேற்கொள்ளும். மொசபத்தேமியாவில் கிழக்கில் முதலில் தோன்றிய ஆசிய யானைகள் இன்று 13 ஆசிய நாடுகளில் இருக்கின்றன.

நாகரிக உலகில் அபிவிருத்தி செயற்பாடுகளினால் யானை இனங்கள் தங்கள் வசிப்பிடங்களை இழந்து வருவதனால் அவை இன்று வேகமாக அழிவை எதிர்நோக்குகின்றன. ஒரு யானை நாளொன்றுக்கு சுமார் 150 கிலோகி ராம் தாவரங்களை உணவாக உட்கொள்ளுகின்றன.

அவற்றின் கால்கள் எந்த நிறை யையும் தாங்கக்கூடிய வலுவைப் பெற்றுள்ளன. யானைகளின் பற்கள் அசைபோட்டு உணவை சிறு துண்டுகளாக சப்பி உண்பதற்கு உதவியாக அமைந்துள்ளன.

யானைகள் பெரும்பாலும் தனது தந்தத்தில் நீரை உறிஞ்சியே பின்னர் அந்த நீரை வாய்மூலம் குடிக்கின்றன. ஒரு சராசரி யானை யின் தந்தத்தின் நீளம் 2.5 மீற்றர்களாகும்.

மனிதர்களைப் போன்று யானைகளின் உடம்பின் உஷ்ண நிலை 97.7ழ கு 36.5ழஊ அளவில் அமைந்துள்ளது. யானைகளின் உடம்பில் அளவுக்கு அதிகமான உஷ்ண நிலை ஏற்படுவதனால் தான் அவை நீர் நிலைகளை நாடுகின்றன. இதனால் தான் பழக்கப்பட்ட யானைகள் நாளாந்தம் சுமார் ஒரு மணித்தியாலம் வரை ஆறுகள் மற்றும் குளக்கரைகளில் நீராடுவதற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

இத்தகைய பெருமைக்குரிய எங்கள் நாட்டின் தேசியசெல்வமான யானைகளைப் பாதுகாப்பது எங்கள் கடமையாகும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.