புத் 66 இல. 21

விஜய வருடம் வைகாசி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் பிறை 25

SUNDAY MAY 25 2014

 

 

குளவிக் கொட்டுக்கு இலக்காகிவரும் தொழிலாளர்கள்:

குளவிக் கொட்டுக்கு இலக்காகிவரும் தொழிலாளர்கள்:

அசமந்தப் போக்கிலிருக்கும் நிர்வாகமும் தொழிற்சங்கங்களும்

மலையகத்தில் அண்மைக் காலமாக குளவிகளின் தொல்லை அதிகரித் துள்ளது. குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்திய சாலைகளில் சிகிச்சை பெறும் தொழிலாளர்களின் எண்ணிக் கையும் அதிகரித்து வருகிறது. பெருந் தோட்டங்களை நிர்வகிக்கும் தோட்டக் கம் பனிகள் தோட்டங்களை முறையாக நிர்வகிப்பதில்லை. தொழிலாளர்களின் தொழில்துறைக்கேற்ப பாதுகாப்பு எது வுமில்லை. தோட்டங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படாத நிலையில் தேயிலைச் செடியின் அடிவாரத் தில் குளவிக்கூடுகள் அதிகரித்து காணப்படுகின்றன. இதனால் தொழிலாளர் கள் தமது அன்றாடத் தேவைகளை மிகவும் சிரமத்திற்கு மத்தியிலேயே செய்ய வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

திம்புள்ளை பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிறேக்கிலி தோட்டத் தில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 10 பெண் தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகினர்.

கடந்த 21ம் திகதியன்று காலை 10.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத் தின் போது பாதிக்கப்பட்டவர்கள் கொட்ட கலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் சிகிச்சைகளின் பின்னர் அவர்களில் சிலர் வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் சிலர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக வும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

இதேவேளை ஹட்டன் டிக்கோயா வனராஜா தோட்டத்தில் கடந்த 19 ஆம் திகதியன்று பகல் காலை 1.00 மணியளவில் குளவி கொட்டியதால் 6 பேர் டிக்கோயா வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டனர். தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டி ருக்கும் போது மரத்தில் இருந்த குளவிக் கூடு கலைந்து கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களின் மீது தாக்கியுள்ளதாக தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர். இதில் பாதிக்கப்பட்ட 6 பேரில் 4 பெண்களும், 2 ஆண்களும் அடங்குவதாகவும் இவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக தெரி வித்தனர்.

ஹட்டன் போடைஸ் பகுதியைச் சேர்ந்த இன்ஜஸ்ட்ரி குறூப் பீரட் பிரிவில் காலை 11.00 மணியளவில் குளவி கொட்டியதால் 11 பேர் டிக்கோயா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த வேளையில் கழுகு ஒன்று மரத்தில் இருந்த குளவி கூட்டை கலைத்ததால் குளவிகள் கலைந்து கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலா ளர்களின் மீது தாக்கியுள்ள தாக தெரிவிக் கப்படு கின்றது. பாதிக்கப்பட்ட வர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுகின்ற போதும் தோட்ட நிர்வா கமோ அல்லது தொழிற்சங்கங்களோ தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து எதுவித அக்கறையும் எடுப்பதாகத் தெரியவில்லை. குளவி கொட்டுக்கு ஆளாகும் ஒரு தொழிலாளிக்கு ஒருநாள் சம்பளம் மட்டுமே வழங்கப்படுகிறது. பாதிக்கப்படும் தொழிலாளர்கள் குறித்து கவனம் செலுத்தப்படுவதில்லை. குளவிக் கொட்டுக்கு இலக்காகும் தொழிலாளர் களின் குடும்பத்தினருக்கு உதவிகளோ நிவாரணங்களோ வழங்கப்படுவதில்லை.

வேலை நேரங்களில் இவ்வாறு ஏற்படும் அனர்த்தங்களிலிருந்து தவிர்ப்பதற்கு தோட்ட நிர்வாகம் பாதுகாப்பான கட்ட மைப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டு மென பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர். அத்துடன், தேயிலைச் செடிகளை உரிய முறையில் பராமரிப் பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் தேயிலைச் செடிகளில் இருக்கும் குளவிக் கூடுகளை அழிக்கக் கூடியதாக இருக்குமெனவும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.