புத் 65 இல. 50

விஜய வருடம் கார்த்திகை மாதம் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் பிறை 11

SUNDAY DECEMBER 15 2013

 

 
சமூக விரோத செயல்களிலிருந்து இளைஞர்களை பாதுகாப்பதே எமது மன்றின் பிரதான குறிக்கோள்

சமூக விரோத செயல்களிலிருந்து இளைஞர்களை பாதுகாப்பதே எமது மன்றின் பிரதான குறிக்கோள்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் கூறுகிறார்

போதைப் பொருட்கள் தொடர்பில் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் கொழும்பில் நகர்ப்புற இளைஞர் செயற்திட்டத்தினை ஆரம்பித்தது. புகைத்தலுக்கெதிராக இளைஞர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விழிப்புணர்வு வேலைத்திட்டம் வெற்றியளித்துள்ளதாகவும், புகைபிடிக்கும் பல இளைஞர்கள் அதனைக் கைவிட்டுள்ளதாகவும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற தலைவர் லலித் பியும் பெரேரா தெரிவித்தார்.

கே: போதைப் பொருட்களினதும் மற்றும் சமூக நோய்களினதும் ஆபத்து பற்றி இளைஞர்களை விழிப்பூட்டுவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் பற்றி விளக்க முடியுமா?

ப: இளைஞர்களின் நல்வாழ்வுக்காகப் பணியாற்றுகின்ற ஒரேயொரு அரச நிறுவனம் தேசிய இளைஞர் சேவை கள் மன்றமாகும். போதைப் பொருட்களுக்கு அடிமையாவதிலிருந்தும் சமூக நோய்களால் பாதிக்கப்படு வதிலிருந்தும் இளைஞர்களைப் பாதுகாப்பதற்கு நாம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்.

எமது இலக்குகள் அடையப்பெற சிறிது காலம் செல்லும். இளைஞர்களை இலக்காகக் கொண்டு எச்.ஐ.வி.மற்றும் எய்ட்ஸ¤க்கு எதிராக நாடளாவிய ரீதியில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களைச் செயற்படுத்தி வருகின்றது. இளைஞர்களுக்கான பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதாரம் என்ற தொனிப் பொருளில் நிகழ்ச்சித் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. இளைஞர்களுக்கு ஆரம்ப வழிகாட்டல் அவசியமாகும். இந்த எண்ணக் கருவினை அடிப்படையாக வைத்து 13 வயதிலிருந்து இளைஞர் கழகங்களுக்கு உறுப்பினர்கள் சேர்த்துக்கொள் ளப்படவுள்ளனர்.

கே: இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை களுக்கு எவ்வகையான தீர்வுகளை வைத்திருக்கின்aர்கள்?

ப: இளைஞர்கள் நாட்டின் அபிவிருத்திக்கு விலைமதிப்பற்ற வளமாவர். நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளில் அவர்களையும் பங்குதாரர்களாக்க வேண்டும். கடந்த மூன்றரை வருடங்களாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இளைஞர்களின் ஆளுமையினை கட்டியெழுப்புவதற்கும் அவர்களை அபிவிருத்திக்கான வளங்களாக மாற்றியமைப்பதற்கும் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. தேசத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகளிலும் இளைஞர்களைத் தொடர்புபடுத்த எதிர்பார்த்துள்ளோம்.

ஆரம்பத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் சமூகசேவை நிறுவனமொன்றாகக் கருதப்பட்டது. அது தற்போது நிலைத்திருக்கும் அபிவிருத்தி இலக்குகளை அடையச் செய்வதற்கு நாட்டிற்கு உதவும் புத்தாக்கம் மிக்க இளைஞர்களை உருவாக்கும் ஒரு நிறுவனமாக மாற்றியுள்ளது.

கே: தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வரலாற்றை உங்களால் விளக்க முடியுமா?

ப: தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நாட்டின் மிகப் பழமைவாய்ந்த அரசாங்க நிறுவனமாகும். நான்கு தசாப்தங்களுக்கும் மேற்பட்ட நீண்டதொரு வரலாறு அதற்கு உண்டு. முந்தைய அரசாங்கங்களின் தலையீட்டுடன் ஒரு அரசாங்க நிறுவனமாக செயற்பட்டதோடு இளைஞர் சேவைகளிலும் ஈடுபட்டது. 2009ஆம் ஆண்டு நாட்டின் இளைஞர்கள் வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது. இளைஞர்களின் அபிவிருத்திக்கான அனைத்து வசதிகளும் அளிக்கப்படக்கூடிய அமைதியான நாடொன்று அவர்களுக்குக் கிடைத்தது. இந்த நாட்டின் இளைஞர்கள் வாழ்வில் பொதுநலவாய இளைஞர்கள் மாநாடு ஒரு மைல் கல்லாகும்.

கே: என்ன நிகழ்ச்சித்திட்டங்களை நீங்கள் நடைமுறைப்படுத்தியுள்Zர்கள்?

ப: நான் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவராக 2010ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டேன். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவராக நான் நியமிக்கப்படுவதற்கு முன்னதாக அதே ஆண்டு இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும நியமிக்கப்பட்டார். நாட்டிற்கும் இளைஞர்களுக்கும் பொருத்தமான திட்டங்களை வடிவமைத்தல் போன்ற பாரிய கடமைகளில் நாம் ஈடுபட்டோம்.

2010 ஆண்டுக்கு பொருத்தமான வகையில் இளைஞர்களை தயார்படுத்த வேண்டியதன் அவசியத்தை நாம் உணர்ந்தோம். இளைஞர் சேவைகள் மன்றம் கடந்த காலங்களில் இளைஞர்களுக்காக பல விடயங்களைச் செய்துள்ளது. இளைஞர் தலைமுறையொன்றைக் கட்டியெழுப்புவதற்காக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினை இலங்கை இளைஞர் என மீளடையாளம் வழங்க தீர்மானித்தோம்.

கே: நாடு முழுவதிலும் காணப்படுகின்ற இளைஞர் கழகங்களின் தற்போதைய நிலை என்ன?

ப: 2010ஆம் ஆண்டு வரை இளைஞர் சம்மேளனத்தின் இளைஞர் கழகங்கள் பிரதானமான இளைஞர் அமைப்பாகக் காணப்பட்டது. இளைஞர் கழகங்களின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்ததோடு இயற்கை எய்தும் நிலையிலும் காணப்பட்டது. நாம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினை பாதுகாப்பதற்காக சவால்களை எதிர்கொண்டதோடு அதனை மேலும் அபிவிருத்தி செய்தோம். அது இலகுவானதொரு காரியமாக இருக்கவில்லை. இன்றைய இளைஞர்கள் 1980களில் அல்லது 1990களில் இருந்த இளைஞர்களைப் போலல்லாது முற்றுமுழுதாக வேறுபட்டவர்களாகக் காணப்படுகின்றனர். அவர்களது பண்புகளும் வேறுபட்டவை. அவர்கள் வித்தியாசமான சமூகமொன்றில் வாழ்கின்றனர். இளைஞர் கழகங்களின் மிக முக்கிய பணி சமூகத்தில் இருக்கின்ற இளைஞர்களுக்கு செய்தியை கொண்டு சேர்ப்பதாகும். நாடு முழுவதிலும் காணப்படுகின்ற இளைஞர் கழகங்களின் செயற்பாடுகளை நாம் மேம்படுத்தியுள்ளோம்.

கே: உலகமயமாதல் இளைஞர்கள் மீது எதிர்மறையான தாக்கத்தினை செலுத்துகிறதா?

ப: சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதிலிருந்து இளைஞர்களை பாதுகாப்பதே தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிரதான வகிபாகமாகும். இளைஞர் கழகங்கள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கடமைகளை இலகுபடுத்துவதற்காகவே அமைக்கப்படுகின்றன.

இளைஞர்களின் திறன்கள் மற்றும் ஆளுமைகளை அபிவிருத்தி செய்வதனூடாக மாத்திரமே நாட்டின் அபிவிருத்தி துரிதப்படுத்தப்பட முடியும். சவால்கள் வெற்றிகொள்ளப்பட முடியும். இளைஞர்கள் சவால்களை எதிர்கொள்ளத் தக்கவர்களாக வளர்க்கப்பட வேண்டும். இளைஞர் கழகங்களில் பால்நிலை சமத்துவத்தைப் பேணுமாறு இளைஞர் சேவை உத்தியோகத்தர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இளைஞர் கழகமொன்று கொண்டிருக்க வேண்டிய பெண்களின் எண்ணிக்கை தொடர்பான கோட்டாவினை வழங்கியுள்ளோம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.