புத் 65 இல. 50

விஜய வருடம் கார்த்திகை மாதம் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் பிறை 11

SUNDAY DECEMBER 15 2013

 

 
டிசம்பர் -29 ல் கோலாகலம் தர்கா நகரில் முப்பெரும் விழா

டிசம்பர் -29 ல் கோலாகலம் தர்கா நகரில் முப்பெரும் விழா

களுத்துறை மாவட்ட எழுத்தாளர் ஒன்றியமும், தர்கா நகர் நஜீப் ஹாஜியார் கல்வி நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள தினகரன் வாரமஞ்சரி தர்கா நகர் வாசகர் வட்டம் அங்குரார்ப்பண விழாவும் மூத்த ஊடகவியலாளர், எழுத்தாளர்கள், கலைஞர்கள் அரசியல் பிரமுகர்கள் கெளரவிப்பும் விமரிசையாக நடைபெறவுள்ளது.

பேருவளை தேர்தல் தொகுதியில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளான தர்காநகர் அல்ஹம்றா மகாவித்தியாலயம், தர்கா நகர் ஸாஹிரா, தர்கா நகர் முஸ்லிம் மகளிர் தேசிய பாடசாலை, பேருவளை சீனன்கோட்டை அல்-ஹுமைஸரா தேசிய பாடசாலை, பேருவளை சீனன் கோட்டை நZம் ஹாஜியார் மகளிர் கல்லூரி, பேருவளை மஹகொட ஐ.எல்.எம். சம்ஸ¥தீன் மகாவித்தியாலயம், மாளிகாஹேன ரிபாய் ஹாஜியார் முஸ்லிம் மகா வித்தியாலயம், பேருவளை மருதானை அல்பாஸியத்துல் நஸ்ரியா பெண்கள் பாடசாலை, மக்கொன அல்ஹஸனிய்யா முஸ்லிம் மகா வித்தியாலயலம், மற்றும் தர்கா நகரில் அமைந்துள்ள சிங்கள பாடசாலையான ஞானேஸ்வர மகாவித்தியாலம் ஆகியவற்றில் 2013ம் ஆண்டு 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வும் எதிர்வரும் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு தர்கா நகர் அல்ஹம்ரா மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளன.

கவிஞர் ஏ. இக்பால் தலைமையில் நடைபெறும் இவ்விழாவுக்கு கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ. எச். எம். அஸ்வர், எம். எஸ். எம். அஸ்லம், மேல்மாகாண சபை உறுப்பினர்களான எம். எம். எம். அம்ஜாத், ஏ. எம். யூசுப், பியால் நிசான்த்த, பேருவளை பிரதேச சபை தலைவர் பிரசன்ன சன்ஜீவ பேருவளை நகர பிதா எம். டபிள்யு. எம். மில்பர் கபூர், பேருவளை பிரதேச சபை உறுப்பினர்களான ஏ. ஆர். எம். பதியுத்தீன், எம். எம். எம். இஸ்மாயில், பைஸான் நைஸர், எம். ஆர். எம். ருஸ்தி ஆகியோர் பங்கேற்பதுடன் தர்கா நகர் ஜமாஅத் கவுன்சில் தலைவர் கலீபதுள்ளாதுலி எஸ். ஏ. எம். மஸா ஆலிம், தர்கா நகர் அல்ஹம்றா மகா வித்தியாலய அதிபர் எம். எப். எம். நள்ரி.

தர்கா நகர் ஸாஹிறா மகாவித்தியாலய அதிபர் எம். எஸ். எம். யெஸ்மின். தர்கா நகர் முஸ்லிம் மகளிர் தேசிய பாடசாலை அதிபர் திருமதி எம். எப். எப். பஸ்லியா.

லேக்ஹவுஸ் ஆசிரிய பீட பணிப்பாளர் சீலரட்ண செனரத், தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசியர் தே. செந்தில்வேலவர், தினகரன் வாரமஞ்சரி இணையாசிரியர் சுஐப் எம். காசிம். தினகரன் வாரமஞ்சரி செய்தியாசிரியர் விசு கருணாநிதி, பிரதி ஆசிரியர் வாசுகி சிவகுமார், உதவி ஆசிரியர்கள் பீ. வீரசிங்கம், அ. பரசுராமன் உட்பட கல்விமான்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், பாடசாலை அதிபர்கள் எனப் பலர் கலந்து கொள்ளும் இப் பெருவிழாவில் “எழுத்து - வாசிப்பு ஒரு நோக்கு” என்ற தலைப்பில் ஜாமியா நZமிய்யா கலாபீட சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எச்.ஐ. கைருல் பஷர் (நZமி) எம். ஏ. சிறப்பு சொற்பொழிவாற்றுவார். தர்கா நகர் பிரதேச பாடசாலைகளின் மாணவ, மாணவிகளின் பல்சுவை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன. விழா ஏற்பாடுகளை களுத்துறை மாவட்ட எழுத்தாளர் ஒன்றியத்தின் செயலாளரும், அறிவிப்பாளருமான எம். பாஸி ஸ¥பைர் மேற்கொண்டுவருகின்றார். மேலதிக விபரங்களுக்கு 35, ஸாவியா லேன், மஹகொட, பேருவளை. தொ. இல 0770812420

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.