புத் 65 இல. 29

விஜய வருடம் ஆடி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரமழான் பிறை 12

SUNDAY JULY 21 2013

 

 
நாவுறுதீவில் கலவரம் 300 பேர் தப்பியோட்டம் 15 அதிகாரிகள் காயம்; கத்தி, கரண்டிகளுடன் மோதல்

நாவுறுதீவில் கலவரம் 300 பேர் தப்பியோட்டம் 15 அதிகாரிகள் காயம்; கத்தி, கரண்டிகளுடன் மோதல்

இலங்கையர் பற்றிய தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை

நாவுறு தீவிலுள்ள சட்டவிரோதப் புகலிடக் கோரிக்கையாளர்களின் முகாம் களில் ஏற்பட்ட கலவரத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட தடுத்துவைக்கப்பட்டிருந்த பலர் காயமடைந்துள்ளனர்.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா வுக்குச் சென்ற இலங்கையர் உட்பட நூற்றுக்கணக்கானோர் தடுத்து வைக்கப் பட்டிருக்கும் முகாமிலேயே இக்கலவரம் இடம்பெற்றுள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை வேளையில் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் சமையலறையிலிருந்த கரண்டிகள் மற்றும் கத்திகளைக் கையில் ஏந்தியவாறும், இருப்புக் கம்பிகளைக் கொண்டும் பாதுகாப்பு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இக்கலவரத்தில் புதிய முகாம்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதுடன், மருத்துவ நிலையமும் முற்றாக எரிக்கப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.

நாவுறு தீவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் உட்பட 15 பாதுகாப்பு அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். 300 பேர் முகாமைவிட்டுத் தப்பிச் சென்றிருப்பதாகவும் தெரியவருகிறது. நாவுறு தீவு தடுப்பு முகாமில் அமைதியை ஏற்படுத்தும் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நாவுறுதீவின் ஜனாதிபதி பொது மக்களிடம் கேட்டுக் கொண்டார். இதற்கமைய பொலிஸார் அங்கு அமைதியை ஏற்படுத்தியுள்ளனர்.

பெரும் எண்ணிக்கையானவர்களை குறித்த முகாமுக்குள் அனுப்பிவைத்துள்ள போதும் உரிய வசதிகள் வழங்கப்பட வில்லையென கடந்த சில வாரங்களாகவே முகாமிலிருந்தவர்கள் கோபமாக இருந்துள் ளதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரி விக்கின்றன. ஈரானிய சட்டவிரோத புகலிடக்கோரிக்கையாளர்களே இந்தக் கலவரத்தை ஆரம்பித்ததாகவும், ஈரானிய நாட்டவர்களே கூடுதலாக இந்தக் கலவரத்தில் ஈடுபட்டதாகவும் அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.

படகுகள் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு எவரும் நுழைவதற்கு அனுமதி வழங்கப்படாது என்றும், அவ்வாறு நுழைபவர்கள் உடனடியாக அவர்களின் நாடுகளுக்கு அல்லது மூன்றா வது நாடொன்றுக்கு நாடு கடத்தப்படுவார்கள் என அவுஸ்திரேலியாவின் பிரதமர் கெவின் ரட் நேற்று முன்தினம் அறிவித் திருந்தார். எனினும், இந்த அறிவிப்புக்கும், நாவுறு தீவில் இடம்பெற்ற கலவரத்துக்கும் தொடர்பில்லையென அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.