புத் 65 இல. 29

விஜய வருடம் ஆடி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரமழான் பிறை 12

SUNDAY JULY 21 2013

 

 
பொதுநலவாய அமைப்பிலுள்ள 53 நாடுகளும் மாநாட்டில் பங்கேற்கும்

பொதுநலவாய அமைப்பிலுள்ள 53 நாடுகளும் மாநாட்டில் பங்கேற்கும்

இலங்கைக்கு எதிரான பிரசாரங்களை பொருட்படுத்தவில்லை

பொதுநலவாய உச்சிமாநாட்டை இலங் கையில் நடத்துவது நாட்டுக்குக் கிடைத்த பெருமை. இதனை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு கட்சி அரசியல் பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் மூலம் எதிர்வரும் 2 வருடங்களுக்கு பொதுநலவாய நாடுகளுக்கு இலங்கையே தலைமை வகிக்கும். நாட்டின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமை வகிக்கவுள்ளார்.

இது இலங்கைக்கும், நாட்டு மக்களுக்கும் கிடைத்த பெருமையாகும். இந்த நிலை யில் இதனை வெற்றிகரமாக நடத்துவதற்கு அனைவரும் கட்சி பேதங்களை மறந்து ஒன்றிணைய வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு எதிராக சர்வதேச நாடுகளில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட் டாலும் பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் 53 நாடுகளில் எந்தவொரு நாடும் பொதுநலவாய அரச தலைவர் மாநாட்டைப் பகிஷ்கரிப்பதாகக் கூற வில்லை. அனைத்து நாடுகளும் தமது பங்களிப்பை உறுதிப்படுத்தியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

பொதுநலவாய மாநாட்டில் அவுஸ் திரேலிய மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் பிரதமர்கள் கலந்து கொள்ள வுள்ளனர். கடல் ரீதியாக நடைபெறும் சட்டவிரோத கடல் பயணம் குறித்த விடயங்களை அந்த நாட்டுத் தலைவர் களுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. பசுபிக் பிராந்தியத்திலுள்ள சிறிய நாடுகளின் பிரதிநிதிகளை பொதுநல வாய உச்சி மாநாட்டுக்கு நியூசிலாந்து அரசாங்கமே தமது விமானங்களில் அழைத்து வருவது ஒரு வழக்கமாக உள்ளது. இம்முறையும் தமது சேவையை வழங்கத் தயார் என நியூசிலாந்து அறிவித்துள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.