புத் 65 இல. 08

நந்தன வருடம் மாசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 12

SUNDAY FEBRUARY 24 2013

 

 

இளையராஜh இசைக்கும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

இளையராஜh இசைக்கும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

மிஷ்கின் இயக்கும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற படத்துக்கு இளையராஜh இசையமைப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முகமூடி படத்தின் தோல்விக்குப் பிறகு மிஷ்கின், தனது லோன் வுல்/ப் நிறுவனம் சார்பில் தயாரித்து இயக்கும் படம் ஓநாயும் ஆட்டுக்குட்டியும். இந்தப் படத்தில் புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இந்த ஒரு தகவல் தவிர இதுவரை மிஷ்கின் அதிகாரபு+ர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் இளையராஜh இசையமைக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

மிஷ்கினின் நந்தலாலா படத்துக்கு இளையராஜh இசையமைத்திருந்தார். அதன் பிறகு இளையராஜhவின் புகழ்பாடுவதே மிஷ்கினின் வேலையாக இருந்தது. இளையராஜh இருந்த மேடையில், இளையராஜhவுடன் ஒவ்வொரு இளம் இயக்குநரும் ஒரு படமாவது செய்யணும் என்று கூறி இளையராஜhவின் கோபத்துக்கு ஆளானார் மிஷ்கின். நீ என்ன எனக்கு பிஆர்ஓ வா என்று அந்த மேடையில், இளையராஜh மிஷ்கினை கடிந்துகொண்டார். அதற்குப் பிறகு இளையராஜh குறித்து மிஷ்கின் வாய் திறப்பதில்லை.

இதனால், இவர்கள் மீண்டும் இணைய வாய்ப்பில்லை என அனைவரும் கருதிக்கொண்டிருக்கும் நிலையில் ஓநாய்க்கு இளையராஜh இசையமைக்கிறார் என்ற தகவல் ரசிகர்களிடம் புது உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால் இந்தச் செய்தி இன்னும் அதிகாரபு+ர்வமாக உறுதிசெய்யப்படவில்லை என்பது முக்கியமானது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.