புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

 

மலையக சமூகத்தின் சாபக்கேடு

சிறுவர் தொழில்:

மலையக சமூகத்தின் சாபக்கேடு

சிறுவர்களை வேலைக்கு அமர்த்தல் என்பது ஒரு சமூக பிரச்சினையாக மாறி வருகின்றது. குறிப்பாக குறைவிருத்தி நாடுகள், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள், கிராமங்கள், மற்றும் நகரின் சேரிப்புறங்களில் சிறுவர் உழைப்பு பெரும் பிரச்சினையாக இருக்கிறது.

சில சமூகங்களில் சிறுவர் உழைப்பின் மூலமே குடும்பங் களின் அன்றாட வாழ்க்கை கொண்டு நடத்தப்படுகின்றது.

இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள். உலகில் வாழும் மக்களில் 1/3 பங்கினர் சிறுவர் களாகக் காணப்படுகின்றனர். உலக நாடுகளில் இடம்பெறும் யுத்தங்கள், கலவரங்கள், இயற்கை அனர்த்தங்களில் பாதிப்புக்குள்ளானவர்களில் சிறுவர்களின் முக்கியத்துவத்தை உணர்த்து அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்ற அடிப்படையில் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.

சிறுவர் தொழில் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை மனித அபிவிருத்தி தாபனம் கவனத்திற் கொண்டு பல செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதுடன் அண்மையில் சிறுவர் உழைப்பு பற்றிய ஆய்வினையும் மேற்கொண்டது.

உலக சர்வதேச சிறுவர் தினத்தில் சிறுவர் ‘தொழிலையும் துஷ்பிரயோகத்தையும் நிறுத்துவோம்’ என்ற தொனிப்பொருளில் கண்டி, நுவரெலியா, கேகாலை, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் ஒருங்கிணைந்த செயற்பாடுகளை ஏற்பாடு செய்து நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.

அரச நிறுவனங்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமூக நல சேவையாளர்கள், தோட்ட அதிகாரிகள், சிறுவர் நன்நடத்தை திணைக்கள அதிகாரிகள், தேசிய சிறுவர் உரிமை அதிகார சபை உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் மலையக கல்விமான்கள் போன்றோர் இடையே விளக்க உரையை ஏற்பாடு செய்து நடாத்தியதுடன் ‘கல்வி உரிமை, சிறுவர் துஷ்பிரயோகத்தை தவிர்ப்போம்’ என்ற தொனிப்பொருளில் மலையக மற்றும் கிழக்கு பிரதேசங்களில் சிறுவர்களிடையே சித்திரப்போட்டி, கண்காட்சி, சித்திரப்போட்டிக்கான சான்றிதழ் வழங்கும் வைபவங்களையும் நடாத்தியது.

சிறுவர் தொழிலை ஒழிப்போம் எனும் தொனிப்பொருளில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக கண்டி மாவட்ட தொல்தோட்டை பிரதேசம், நுவரெலியா மாவட்ட மஸ்கெலிய, ஹட்டன், போகவந்தலாவ, நோர்வூட், அக்கரப்பத்தனை, கேகாலை, தெரணியகல போன்ற பிரதேசங்களில் பதாதைகளும், துண்டுபிரசுர விநியோகம், வீதி நாடகம், சுவரொட்டிப் பிரசாரம் ஆகியவற்றின் மூலமாக மக்களை, சிறுவர்களை விழிப்புணர்வுப் படுத்தும் நிகழ்வுகளும் நடைபெற்றன.

இலங்கையில் சிறுவர் உரிமைகள் வரலாற்றில் கவலை தரும் நிகழ்வுகளாக்கியுள்ளன. தொடர்ந்து இவ்வாறான பிரச்சினைகள் நடைபெறாமல் இருப்பதற்காக மனித அபிவிருத்தி தாபனம் சட்ட ஆலோசனை, நியாயப்பிரச்சாரம், சட்டரீதியான உதவி என்பவற்றை யும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.