புத் 64 இல. 09

கர வருடம் மாசி மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 04

SUNDAY FEBRUARY 26,  2012

 

றிச்லைஃவ் டெயரிஸ{க்கு புத்துயிரளிக்கும் ரேணுகா அக்ரி பூட்ஸ்

றிச்லைஃவ் டெயரிஸ{க்கு புத்துயிரளிக்கும் ரேணுகா அக்ரி பூட்ஸ்

இலங்கையில் உயர்தர பாலுற்பத்தி மற்றும் பழவகைகள் தயாரிப்புகளில் முன்னணியில் திகழும் றிச்லைஃவ் டெயரிஸ் லிமிடெட் நிறுவனம் கடந்த ஜனவரி மாத நடுப்பகுதியில் ரேணுகா அக்ரி பூட்ஸ் பிஎல்சி நிறுவனத்தை பொறுப்பேற்றதன் மூலம் புத்துயிர் வழங்கியுள்ளது.

ரேணுகா ஹோல்டிங்க்ஸ் பிஎல்சி நிறுவனம் ரேணுகா அக்ரி பூட்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் தாய் நிறுவனமாக திகழ்வதோடு, கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு விவசாயம், வாகனங்கள், வேகமாக விற்பனயாகும் நுகர்வோர் பொருட்கள், உணவுச் சேவைகள், முதலீடுகள், சொத்துக்கள் மற்றும் முகாமைத்துவ சேவைகளில் தனது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இந்நிறுவனம் கடந்த மாதம் றிச்லைஃவ் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை கொள்வனவு செய்திருந்தது.

சர்வதேச சந்தையில் ரேணுகா நிறுவனம், தனது செயற்பாடுகளை சுமார் 61 நாடுகளில் மேற்கொண்டு வருகிறது. இதில் நிறுவனத்தின் பெறுமதி சேர்க்கப்பட்ட தேங்காய் மூலமான தயாரிப்புகள் முக்கியத்துவம் வகிக்கின்றன. நாட்டில் ஏற்பட்டுள்ள யுத்தமற்ற சூழ்நிலையை தொடர்ந்து தனது முதலீடுகளை நிறுவனம் மேலும் அதிகரித்து ள்ளது. இதன் மூலம் தேசத்தின் பொருளாதார வளர்ச்சியிலும் தனது பங்களிப்பை வழங்க தன்னை அர்ப்பணித்துள்ளது.

2011 ஆம் ஆண்டில் ரேணுகா குழுமம் நூற்றாண்டுக்கு மேற்பட்ட காலமாக இலங்கையில் தனது வர்த்தக நடவடிக்கைகளை முனனெடுத்திருந்த ஷோ வொலஸ் சிலோன் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்திருந்ததன் மூலம் வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் மற்றும் உணவு சேவைகள் பிரிவுகளில் தனது விநியோக நடவடிக்கைகளுக்கு மேலும் வலுச் சேர்த்திருந்தது. றிச்லைஃப் நிறுவனத்தை கொள்வனவு செய்ததன் மூலம் ரேணுகா நிறுவனத்தின் விநியோக வலையமைப்பு மேலும் வலுவடைந்துள்ளதுடன், பின்தங்கிய பொருளாதார சூழ்நிலை நிலவும் பகுதிகளில் நேரடியான செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடிய வாய்ப்பையும் பெற்றுள்ளது.

றிச்லைஃவ் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பாக ரேணுகா லோல்டிங்க்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சமந்தி ராஜியா கருத்து தெரிவிக்கையில், “எமது குழுமத்தின் கீழ் றிச்லைஃப் நிறுவனத்தை கொள்வனவு செய்துள்ளமையானது எமக்கு பெருமளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.