புத் 64 இல. 09

கர வருடம் மாசி மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 04

SUNDAY FEBRUARY 26,  2012

 

முரண்பாடுகளுக்குப் பிந்திய இலங்கையில் ஆஆடீடு இன் வியாபார முன்மாதிரி

உலகளாவிய வர்த்தகச் சின்னங்கள், கம்பனிகளை இணைத்து முதலீடுகளை கட்டியெழுப்பல்

முரண்பாடுகளுக்குப் பிந்திய இலங்கையில் MMBL இன் வியாபார முன்மாதிரி

யாழ்ப்பாணத்தில் இம் மாதம் 3 ஆம் திகதி ஜெட்விங் யாழ். ஹோட்டல் நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்துக்கு ஊடகங்களில் பரவலான பிரசாரம் வழங்கப்பட்டது. இது மேர்க்கன்டைல் மேர்ச்சன்ட் வங்கி(MMBL) மற்றும் ஜெட்விங் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாகும். மூன்று தசாப்தகால மோதல்களின் பின் முதலீட்டாளர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள வளங்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். குடாநாட்டு மக்களும் பொருளாதார சுபீட்சத்தை அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர்.

சுற்றுலாத்துறையில் MMBL க்கு ஜெட்விங் குழுமத்துடன் மேலும் இரண்டு கூட்டு முயற்சிகள் உள்ளன. அதில் ஒன்று மலைநாட்டிலுள்ள ரங்கல பிரதேசத்தில் சுற்றாடலுக்கு இசைவான ஆடம்பர உல்லாச விடுதி ஒன்றை அமைப்பதாகும். இந்தப் பகுதி பனி மூட்டத்துடன் கூடிய மலைப்பாங்கான பிரதேசத்தில் நீர் வீழ்ச்சிகள் சூழ உள்ள ஒர் இடமாகும். மற்றைய முயற்சி மிகவும் பிரத்தியேகமான உன்னதமான ஒரு முயற்சியாகும். இரண்டு அறைகள் கொண்ட ஆடம்பர படகு இல்லமொன்றை அமைப்பதே இதுவாகும்.

பிரபலமான உலக வர்த்தக முத்திரைகளுடன் மூலோபாய கூட்டணிகளை ஏற்படுத்திக் கொள்வதும் உள்ளூரில் பங்குச் சந்தையில் சிறந்து விளங்கும் ப்ளு சிப் கம்பனிகளுடன் கூட்டணிகளை ஏற்படுத்திக் கொள்வதும் MMBL குழுமத்தின் பலமாக கருதப்படுகின்றது. இது தவிர சுற்றுலாத் துறையில் MMBL க்கு ஏனைய ப்ளு சிப் கம்பனிகளான ஜோன் கீல்ஸ் போன்ற கம்பனிகளுடனும் கூட்டு முயற்சியை ஏற்படுத்தி சிறந்த சுற்றலாத்தளங்களை அபிவிருத்தி செய்வதற்காக உகந்த காணிகளில் முதலீடு செய்து வருகின்றது.

மேலும் ஒரு வியக்கத்தக்க MMBL குழுமத்தின் கூட்டு முயற்சியாக ஜோன் கீல்ஸ், பிராண்டிக்ஸ் ஆகியோருடன் இணைந்து உள்நாட்டு விமான சேவை ஒன்றினையும் தொடங்கவுள்ளது. தங்குவிடுதிகளை சுற்றுலாத் தளங்களாக மாற்றி சுற்றுலாத் துறை அபிவிருத்தியில் சொத்துக்கள் மீது முதலீடுகள் மேற்கொள்ளப்படுகி ன்றன. MMBL குழுமத்தின் ஜோன் கீல்ஸ் உடனான மற்றொரு சிறப்பான கூட்டு முயற்சி உள்நாட்டு விமான சேவையில் உள்ளது. பிராண்டிக்ஸ் மற்றும் ஏனைய முதலீட்டாளர்களுடனும் MMBL கூட்டு முயற்சிகளைக் கொண்டுள்ளது. இந்த உள்நாட்டு விமான சேவை மூலம் இலங்கையை வந்தடையும் எந்தவொரு உல்லாசப் பயணியும் 45 நிமிடங்களில் அல்லது ஒரு மணித்தியாலத்தில் நாட்டில் தான் விரும்பிய எந்தவொரு மூலையையும் சென்றடையலாம்.

MMBL இன் ஏனைய முதலீடுகள் வரிசையில் Energizer Lanka ழிஹிளி இன் இலங்கையில் ஆகக் கூடுதலான பங்குகளைக் கொண்டுள்ள நிறுவனமாகவும் அது திகழ்கின்றது. இது அமெரிக்காவின் Energizer Holdings Inc நிறுவனத்தின் பிரதிநிதியாகச் செயற்படுகின்றது. எவரெடி பெற்றரிகள் உட்பட ரிnலீrgizலீr உற்பத்திகளை இந்நிறுவனமே இலங்கையில் சந்தைப்படுத்தி வருகின்றனர். இலங்கையில் பெற்றரி சந்தையில் தலைமை தாங்கும் உற்பத்தியாக இது திகழ்கின்றது.

MMBL நாடு முழுவதும் வடக்கு, கிழக்கு உட்பட பல முக்கியமான இடங்களில் காணி அபிவிருத்தி துறையிலும் செயற்பாடுகளைக் கொண்டுள்ளது.

MMBL பணிப்பாளர் சபையில் நீலியா பெரோ (தலைவி) தர்மசிறி பீறிஸ் (பிரதித் தலைவர்) பாலசுந்தரம் (பிரதம நிறைவேற்று அதிகாரி) ராஜன் ஆசிர்வாதம், பெர்ணாட் குணதிலக, இந்திரஜித் குமராஸ்வாமி, மஹிந்த ஹரதாஸ, மற்றும் ரேணுகா தெரனியகல ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.