புத் 64 இல. 09

கர வருடம் மாசி மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 04

SUNDAY FEBRUARY 26,  2012

 

'ஒரே குரல் ஒரே தேசம்' ஸ்ரீலங்கா ரெலிகொம்மின் வர்த்தகப் பிரசாரம் ஆரம்பிப்பு

'ஒரே குரல் ஒரே தேசம்' ஸ்ரீலங்கா ரெலிகொம்மின் வர்த்தகப் பிரசாரம் ஆரம்பிப்பு

தேசிய தொலைத் தொடர்புகள் சேவை வழங்குநரான ஸ்ரீலங்கா ரெலிகொம், இலங்கையின் 64ஆவது வருட சுதந்திர தினத்தை அனுஷ்டிக்கும் வகையில், “ஒரே தேசம், ஒரே குரல் என்பதன் கீழ் வர்த்தக பிரசாரம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கையின் ஒருங்கிணைக்கப்பட்ட தொலைத் தொடர்புகள் சேவை வழங்குநர் என்ற வகையில், இலங்கையர்கள் அனைவருக்கும் தொழில் நுணுக்க வசதியை வழங்கும் நோக்குடன், புத்தாக்கம் மிக்க மற்றும் உற்சாகமான தொலைத் தொடர்பு அனுபவங்களை வழங்குவதே ஸ்ரீலங்கா ரெலிகொம்மின் தூரநோக்கமாக உள்ளது.

“இலங்கை மக்களுக்கு சிறந்த சாத்தியமான தொலைத் தொடர்பு தீர்வுகளை கற்பிப்பது மற்றும் வசதியளிப்பதே இந்த பிரசாரத்தின் ஊடாக எமது குறிக்கோளாக உள்ளது. மெகாலைன், ஸ்ரீலங்கா ரெலிகொம் அகன்றபட்டை அலைவரிசை மற்றும் ஒட்டு மொத்த வாடிக்கையளர் பராமரிப்பு சேவைகள் போன்ற ஸ்ரீலங்கா ரெலிகொம்மினால் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து மேலதிக சேவைகளையும் அது உள்ளடக்கும். நாடு முழுவதிலும் உள்ள எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையின் ஊடாக எமது அர்ப்பணிப்பினை நாம் உறுதி செய்கின்றோம்” என ஸ்ரீலங்கா ரெலிகொம்மின் பிரதம நிறைவேற்றதிகாரி கிரெக் யங் தெரிவித்தார்.

புதிய பிரசாரத்தின் அறிமுகமானது, மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் நலன் மற்றும் விற்பனைக்கு பின்னரான சேவைகள் உள்ளடக்க சேவைகளான வாழ்த்துக்கள், கட்டண பட்டியல், தகவல், அதிர்ஷ்ட பட்டி இணையம் சார்ந்த அழைப்புகள், அனைத்து சேவைகளுக்கும் ஒரே இலக்கம், தூர இருந்து இயக்கும் கட்டுப்பாட்டு முறை மற்றும் தொகுதியான பொதி போன்ற பெறுமதி சேர் சேவைகளின் அறிமுகத்துடன் ஸ்ரீலங்கா ரெலிகொம்மின் பிரதான மெகாலைன் இணைப்பினை மேம்படுத்தல் மற்றும் புதுப்பித்தல் உள்ளடங்கலாக தற்போதுள்ள உற்பத்திகள் மற்றும் சேவைகளில் வேறு விரிவாக்கங்கள் என்பவற்றை உள்ளடக்கியி ருக்கும்.

புதிய பொதிகளின் அறிமுகத்துடன், அனைத்து இலங்கையர்களுக்கும் சேவையை மேலும் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் ஸ்ரீலங்கா ரெலிகொம் அகன்றபட்டை அலைவரிசை சேவையில் புதிய பெறுமதிகளை அறிமுகப்படுத்துகின்றது. அரசாங்க ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெற்றவர்களுக்கான சலுகை அடிப்படையிலான விசேட பொதிகளும் உள்ளன.

நாடு முழுவதிலும் தீi-பிi மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றுமொரு இணைப்பாக உள்ளது. அத்துடன், அகன்றபட்டை அழைப்பு சேவை மற்றும் இணைய வடிகட்டல் சேவைகளின் அளவினை கேள்விக்கு ஏற்ற வகையில் விரிவாக்கல் என்ற வடிவிலும் சேவைகளில் பெறுமதி சோக்கப்பட்டுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.