புத் 64 இல. 09

கர வருடம் மாசி மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 04

SUNDAY FEBRUARY 26,  2012

 

ஹேலீஸ் கன்சியுமர் அறிமுகப்படுத்தும் Fujifilm X Series நவீன டிஜpட்டல் கெமராக்கள்

ஹேலீஸ் கன்சியுமர் அறிமுகப்படுத்தும் Fujifilm X Series நவீன டிஜpட்டல் கெமராக்கள்

‘Fujifilm X Series’ நவீன டிஜிட்டல் கெமராக்கள் புகைப்படத்துறையைச் சார்ந்த கலைஞர்கள் மற்றும் புகைப்படப் பிடிப்பில் தீவிர ஆர்வமுடையவர்களை இலக்கு வைத்து அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்திடும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. வோட்டர்ஸ் எட்ஜிங் அண்மையில் இடம்பெற்ற இதன் அங்குரார்ப்பண நிகழ்வில் ஜப்பான் மற்றும் கனடா நாட்டு Fujifilm நிறுவன முதுநிலை அங்கத்தவர்களால் இவ் நவீன வகை கெமராவின் படப்பிடிப்பு மற்றும் பயன்பாட்டு வழிமுறைகள் பற்றி பயிற்சிகள் மற்றும் விளக்கங்கள் அளிக்கப்பட்டதுடன், அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

புகைப்படத்துறையில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்திடும் தொழில்நுட்பச் சிறப்புடனும் கவர்ச்சிகரமான தோற்றத்துடனும் நவீன வகை ‘Fujifilm X Series ‘ டிஜிட்டல் கெமராக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.

இவை புகைப்படக் கலைஞர்களுக்குத் தேவையான சிறந்த புகைப்பட தரத்தினை வழங்கிடும் வினைத்திறன்களைக் கொண்ட புது வடிவ கெமராக்களாகும். ‘Fujifilm X Series’ டிஜிட்டல் கெமராக்களில் Fujinon Lens கள் APS CMOS Sensor கள் மற்றும் நவீன EXR புகைப்பட செயலாக்க தொழில்நுட்பத்தின் மூலம் மிகச் சிறந்த தரப் புகைப்பட தீர்வுகளை வழங்கிட முடியும்.

இந் நவீன ரக கெமராக்கள் எல்லையற்ற இணைப்பாக்கங்களுடன் மிக துல்லியமான தெளிவான புகைப்படங்களை எடுக்கக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது. அத்துடன் இது புகைப்படக் கலைஞர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் ஒரு படி மேல் சென்று சிறந்த பெறுபேறுகளை தரக்கூடிய நவீன ரக கெமராக்கள் ஆகும். தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை புகைப்படக் கலைஞர் குழுவினர்களினால் இப்புதிய X Series ‘Fujifilm X10, X100, XA1. X Pro1’ ஆகிய டிஜிட்டல் கமராக்களை உபயோகித்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கருத்தரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டதுடன், அவர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இக் கமராக்களை உபயோகித்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மிக உயர் தரத்தில் காணப்படுவதை தாம் அனுபவத்தில் அறிந்து கொண்டதாக புகைப்படக் கலைஞர்கள் சுட்டிக்காட்டினர். இக் கெமரா பல்வேறு சூழல்களில் எடுக்கக்கூடிய புகைப்படங்கள், உருவப் படங்கள், இயற்கைக் காட்சிகள், வனவிலங்குகள், நகர அமைப்புகள், ஆடை அலங்கார புகைப்படப்பிடிப்புகள் போன்றவற்றுக்கு மிகப் பொருத்தமான தெரிவாகும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.