புத் 64 இல. 09

கர வருடம் மாசி மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 04

SUNDAY FEBRUARY 26,  2012

 

SAP நிறுவனத்தின் மூலோபாய பங்காளர்களாக PC House தெரிவு

SAP நிறுவனத்தின் மூலோபாய பங்காளர்களாக PC House தெரிவு

இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப விற்பனை மற்றும் தீர்வுகளின் தர ஓப்பீட்டு நியமமாகத் திகழும் PC House PLC நிறுவனம் தொழிற்றுறைப் பிரயோக மென்பொருளில் சந்தை முன்னோடியாக விளங்கும் SAP இன் மூலோபாயக் கூட்டிணைப்புப் பங்காளர்களுள் ஒன்றாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே தான் கொண்டுள்ள மகத்தான உற்பத்தி மற்றும் தீர்வு வரிசைகளை இந்தப் பங்குடைமையின் மூலமாக மேலும் விரிவுபடுத்தி முற்றுமுழுதான மற்றும் இலகுதன்மை கொண்ட வியாபார முகாமைத்துவ மென்பொருளான SAP Business All -in -One தீர்வை PCH நிறுவனம் வழங்கவுள்ளது. தொழிற்துறை குறித்த தேவைகளை நிறைவேற்றியவாறு தங்களது முற்றுமுழுதான வியாபார நடவடிக்கைகள் மீதும் பூரண கண்ணோட்டதைச் செலுத்துவதற்கு சமுவாக உள்ளிணைப்புச் செய்யப்பட்ட தொழிற்துறைத் தீர்வொன்றை எதிர்பார்த்துள்ள நடுத்தர அளவிலான நிறுவனங்களின் தேவைகளை கச்சிதமாகத் தீர்த்துவைக்க SAP Business All -in -One உதவுகின்றது.

“நாட்டில் உலகத் தரம் வாய்ந்த தொழிற்துறை வளத்திட்டமிடல் தீர்வுகளை வழங்குவதில் மற்றுமொரு முக்கியமான படியாக SAP உடனான பங்குடைமை அமையப்பெற்றுள்ளது என்று PC House நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரான ரிஷான் குறிப்பிட்டார். “நாட்டிலுள்ள தனியார் மற்றும் அரச துறைகள் அபிவிருத்தியில் பிரமாண்டமான எழுச்சியை அனுபவித்து வருகின்றன. a

முதலீடுகளின் உட்பாய்ச்சல் மற்றும் பல்வகைத் தோற்றப்பாடு ஆகியவற்றின் விளைவாக உள்நாட்டுத் தொழிற்துறைகளின் பலதரப்பட்ட தேவைகளக்கு ஏற்ற, இலகுதன்மை கொண்ட தொழில்நுட்பத்துடன் கிடைக்கப்பெறுகின்ற சோதனை செய்யப்பட்டு நிரூபிக்கப்பட்ட ஒரு முனையிலிருந்து மறுமுறைக்கான பிரயோகங்களை வழங்குகின்ற நவீன வியாபார மென்பொருள் தீர்வுகளுக்கான கிராக்கி அதிகரித்தவண்ணம் உள்ளது. அதை துல்லியமாக நிறைவேற்றும் பணியையே SAP Business All -in -One அடிப்படையிலான தீர்வுகள் ஆற்றுகின்றன” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

SAP உற்பத்தி வரிசையின் தனித்துவம் தொடர்பில் PC House PLC நிறுவனத்தின் விற்பனைகள் மேலதிகாரியான இந்திஷார் பெரோஸ் கருத்துக்கூறுகையில் ‘அமுலாக்கம் செய்வதற்கு எடுத்துக்கொள்ளும் காலநேரங்களைக் குறைத்து உபயோகிப்பவர்கள் தம்மை இதற்குப் பரிச்சயப்படுத்திக்கொள்வதை விரைவுபடுத்தி தாங்கள் மேற்கொள்கின்ற முதலீடுகள் மீது விரைவான பிரதிலாபங்களை ஈட்டிக்கொள்ள எமது வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் குறிப்பிட்ட தொழிற்துறைகளில் முன்னிலை வகித்துவருகின்ற நிறுவனங்களினால் உபயோகிக்கப்படுகின்றன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.