புத் 64 இல. 09

கர வருடம் மாசி மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 04

SUNDAY FEBRUARY 26,  2012

இறைமையும், ஜனநாயக மரபும் கொண்ட நாட்டின் மீது ஏன் இந்தக் கொலைவெறி?

மேற்குலகத்திற்கு எதிராக நாளை நாடளாவிய பொதுமக்கள் பேரணி!

இன, மத, கட்சி பேதமின்றி ஒன்றிணைய மதத்தலைவர்கள் வேண்டுகோள்

வடக்கு, கிழக்கிலிருந்து கொழும்பு நோக்கி ஆயிரக்கணக்கான வாகனங்களில் மக்கள் படை!

இறைமையுள்ள, ஜனநாயக பண்புகளைக் கொண்ட நமது நாட்டின் மீது மேற்குலகம் திட்டமிட்ட வகையில் அழுத்தங்களைப் பிர யோகித்து எம்மை சர்வதேசத்தின் முன் குற்ற வாளியாக நிறுத்த முற்படும் செயற்பாடுகளுக்கு எதிராக இன, மத, பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக மதத் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விவரம் »

ஜெனீவா தீர்மானத்திற்கு கண்டனம் ;

வடக்கில் மாபெரும் மக்கள் பேரணி நாளை

அங்கஜன், கீதாஞ்சலி ஏற்பாடு

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நாவின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறை வேற்றப்படுவதைக் கண்டித்து யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவுப் பகுதி மக்கள் மாபெரும் கண்டனப் பேரணி ஒன்றினை நடத்தவுள்ளன.

விவரம் »

அரபுலக நாடுகள் பலவற்றை பதம் பார்த்த மமதையில் அமெரிக்கா;

சர்வதேசத்தின் சதிகார வலைப்பின்னலில் சிக்கவிடாது தாயகத்தை பாதுகாப்போம்!

இலங்கையர் சகலரதும் கடமை என அஸ்வர் ணிஜி சபையில் வலியுறுத்து

அரபு உலகில் பல நாடுகளை பதம் பார்த்து விட்டோம் என்ற மமதையில் இலங்கையையும் தம் வலையில் சிக்கவைக்கப்பார்க்கிறது வல்லரசு நாடான அமெரிக்கா. இந்த சர்வதேச சதிகார வலைப்பின்னலிலிருந்து எமது நாட்டை காப்பது ஒவ்வொரு இலங் கையரினதும் கடமையாகும்.

விவரம் »

நடிகர் மோஹனுக்கு இன்று உயர் கெளரவம்

கலைச் சேவையில் 35 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள கலைஞர் கே. மோஹன்குமார் கலைப் பொய்கை வைபவத்தில் கெளரவிக்கப்பட வுள்ளார். இன்று மருதானை டவர் மண்டபத்தில் கிருஷ்ண கலாலயம் ஒழுங்கு செய்துள்ள கலைப் பொய்கையில் மூன்று தசாப்தங்களுக்கு மேல் கலைச் சேவையில் தன்னை அர்ப்பணித்த மோஹன் குமாரும் மற்றும் சக கலைஞர்களும் பாராட்டப்படவுள்ளனர்.

விவரம் »


 

ஜெனீவா கூட்ட முதல் நாளே அறிக்கை சமர்ப்பிக்க சந்தர்ப்பம்

விளக்கத்தை முறையாக வழங்குவோம் - சமரசிங்க

ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை ஆணைக் குழுவின் ஆரம்பக் கூட்டத் தொடரில் முதலாவது தினத் திலேயே இலங் கையின் சார்பில் உத்தியோகபூர்வ கொள்கை விளக்க மொன்றை அளிப்பதற்கு இப்போது அனுமதி கிடைத்திருக்கிறது.

விவரம் »

ஜெனீவாவிற்கு செல்வதை தவிர்த்துக்கொண்ட TNA

இறுதித் தீர்வை பாதிக்கும் என்பதால் முடிவு

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரின் போது ஜெனீவாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரசன்னமாவதில்லை என அதன் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இனப் பிரச்சினைக்கான இறுதித் தீர்வை எட்டுவதில் எவ்விதமான தடையையும் அரச தரப்பு போடக் கூடாதென தமிழ்க் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

விவரம் »

 

Advertisements______________________

Other links_________________________

www.apiwenuwenapi.co.uk

    TRC

www.defence.lk    


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.