புத் 64 இல. 09

கர வருடம் மாசி மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 04

SUNDAY FEBRUARY 26,  2012

 
மேற்குலகத்திற்கு எதிராக நாளை நாடளாவிய பொதுமக்கள் பேரணி!

இறைமையும், ஜனநாயக மரபும் கொண்ட நாட்டின் மீது ஏன் இந்தக் கொலைவெறி?

மேற்குலகத்திற்கு எதிராக நாளை நாடளாவிய பொதுமக்கள் பேரணி!

இன, மத, கட்சி பேதமின்றி ஒன்றிணைய மதத்தலைவர்கள் வேண்டுகோள்

வடக்கு, கிழக்கிலிருந்து கொழும்பு நோக்கி ஆயிரக்கணக்கான வாகனங்களில் மக்கள் படை!

இறைமையுள்ள, ஜனநாயக பண்புகளைக் கொண்ட நமது நாட்டின் மீது மேற்குலகம் திட்டமிட்ட வகையில் அழுத்தங்களைப் பிர யோகித்து எம்மை சர்வதேசத்தின் முன் குற்ற வாளியாக நிறுத்த முற்படும் செயற்பாடுகளுக்கு எதிராக இன, மத, பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக மதத் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து மாவட் டங்களிலும் மேற்குலக நாடுகளின் பிரேரணைக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடாத்தப் படவுள்ளன. இலங்கைக்கு எதிரான துரோகச் செயல்களுக்கு நாம் துணைபோக மாட்டோமென ஒன்று திரண்டு மக்கள் குரலை எழுப்பவுள்ளனர். இக் கோஷத்திற் கமைவாக யாழ்ப் பாணம், கிளி நொச்சி, முல் லைத்தீவு, மட் டக்களப்பு, திரு கோணமலை உள்ளடங்கலாக தமிழ், முஸ்லிம் மக்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இதர அரசியல் கட்சிகள், தொழிற் சங்கங்கள், இயக்கங்கள் என்று பல்வேறு கிராமிய நமது நாட்டிற்காக கட்சி பேதங்களை மறந்து நாளைய பேரணியில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

நாளை 27ம் திகதி பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு மாநகரில் இலட்சக் கணக்கான மக்கள் கூடும் பேரணியொன்றை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேசிய ஐக்கியத்துக்கான சர்வ மதங்கள் கூட்டமைப்பின் தலைவரும் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பேராசிரியர் அதி வணக்கத்துக்குரிய குபுரு கமுவே வஜிர தேரர் தெரிவித்தாவது,

நமது நாட்டில் உள் விவகாரங்களை சர்வதேசத்தின் பெரும் பிரச்சினைகளாக உருவமைத்து நாட்டை குழப்ப நிலைக்கு இட்டுச் செல்வதை கண்கூடாக காணக் கூடியதாக இருக்கின்றது. இந்நிலை தொடருமே ஆனால் நமக்கு கிடைத்திருக் கின்ற சமாதானம் மீண்டும் நம்மை விட் டும் தூரமாகக் கூடிய நிலை உருவாகலாம்.

இதற்காகவே மேற்கத்திய வாதிகள் சதிகளை முன்னெடுத்து வருகிறார்கள் இதற்கான அறிகுறிகள் தான் அரசுக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள். எத்தனையோ சதிகள் நமது நாட்டில் நாளுக்கு நாள் உருவெடுத்து உருகின்றது. இதன் அடிப்படையில் பார்க்கும் போது சமாதானத்தை அனுபவிக்கும் நம் நாட்டு மக்கள் மிகவும் புத்திசாலிகளாக நடந்து கொள்ளக்கூடிய ஒரு கால கட்டத்தில் இருக்கின்றோம்.

அண்மைக் காலங்களில் உலகில் மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்று வந்த நிலைகளை உற்று நோக்கும் போது குறிப்பாக எகிப்து, ஈராக், லிபியா, மலைதீவு போன்ற நாடுகளில் நடைபெற்ற உள்விவகாரங்களில் மேற்கத்திய வாதிகளின் சதிகள்தான் முன்னெடுக்க பட்டு வந்ததை நம்மால் காணக்கூடியதாக இருக்கின்றது.

இதே நிலையைத்தான் நமது நாட்டிலும் உருவாக்க மனித உரிமைகள் என்ற பேரில் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. 30 வருடகால யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான உயிர்கள், உடமைகள் சின்னா பின்னமாக்கப்பட்ட போது இவர்கள் எங்கே இருந்தார்கள்?” தற்போது நாடு பரிபூரண சமாதானம் அடைந்து” நாட்டு மக்கள் அனைவரும் நிம்மதியாக வழந்து கொண்டிருக்கும் சூழலை மீண்டும் இழக்க வைக்க சில சதிகள் திட்டம் தீட்டுகின்றார்கள்” இந்த சதிகளுக்கு நாட்டு மக்கள் ஒரு போதும் இடமளிக்காது நாட்டுக்கு சமாதானத்தை பெற்றுத்தந்த ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் பூரண ஒத்துழைப்பை வழங்கி நமது நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்வோம்...

சர்வதேச இந்து மதபீடத்தின் செயலாளர் - பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா

ஜெனீவாவில், இலங்கையை அபகீர்த்திக்குள்ளாக்கும் முயற்சியை விடுத்து இலங்கை நாட்டு மக்களின் வாழ்வுரிமையையும் வளநிலைமையையும் மேம்படுத்த அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் முன் வர வேண்டும். இலங்கையின் 30 வருட காலத்தில் அரசியல் வாதிகள் இந்து குருமார்கள், வர்த்தகர்கள், பொது மக்கள் போன்றோர் இலங்கையின் பயங்கரவாத யுத்தத்தால் பாதிப்பட்டமை உலக நாடுகள் அறிந்ததே. இவ் யுத்தத்தால் சொந்த இடங்களை விட்டு, சொந்தங்களை விட்டு பிரிந்து புலம்பெயர் நாடுகளில் தஞ்சம் அடைந்து பரம்பரையையும் பாரம்பரியங்களையும் மறந்தவர்களாக வாழக்கூடிய தமிழ் சமுதாயத்தை பெரும்பாலும் காணக்கூடியதாக இருக்கின்றது. பிறந்த மண்ணை பார்க்க முடியுமா? என்று பரிதவித்தவர்களும் பலர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூலம் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இலங்கை மண்ணை மறந்தவர்கள் இன்று ஓடோடி இலங்கை வருவதையும் சொந்தங்களையும் அரவணைப்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்திய- இலங்கை ஒப்பந்தம், ரணில்- பிரபா ஒப்பந்தம், நோர்வேயின் சமாதானப் பணி இவை அனைத்தையும் ஏதோ ஒரு விதத்தில் சாக்கு போக்கு சொல்லி தமிழ் தரப்பினர் தமிழ் மக்களின் இருப்புக்கு பங்கம் ஏற்படுத்தினர்.

ஜனாதிபதி முதலாவது தடவையாக பதவி ஏற்ற போது விடுதலை புலிகளின் தலைவர் வே. பிரபாகரனை கிளிநொச்சியில் சந்திக்க தயார் என அறை கூவல் விடுக்கப்பட்ட போதும் அவர்களும் அதை கணக்கில் எடுக்கவில்லை. இன்று இலங்கையை அபகீர்த்திக்குள்ளாகும் நாடுகள் கூட தங்கள் நாட்டின் வர்த்தக துறைக்காவும், நமது நாட்டின் பாதுகாப்பு கருதியும் தமிழர் அரசியல் பிரச்சினைகளை தமக்கு சாதகமாக்கி தங்கள் நலத்துக்கே &:கி|@னிகிறார்களே அன்றி தமிழ் மக்கள் மீது உள்ள பரிதாபம் அல்ல. இலங்கையை தங்களது சுயநல தேவைக்காக பயன்படுத்த நினைக்கின்றார்கள். இதன் எதிரொலி தான் ஜெனிவாவில் நடைபெற உள்ள மாநாட்டில் இலங்கை நாட்டை அபகீர்த்திக்குள்ளாக்கும் முயற்சிகள் சில சர்வதேச நாடுகளினால் முயற்சிக்கப்படுகின்றது. இந்த நாடுகள் இலங்கையை அவலநிலைக்கு உள்ளாக்காமல் அபிவிருத்திக்குதவுவதுடன் மக்களின் சுபீட்ச வாழ்க்கைக்கு உதவ வேண்டும் என சர்வதேச இந்துமத பீடத்தின் செயலாளரும் ஸ்ரீவித்யா குருகுல அந்தண சிறுவர்களின் சமஸ்கிருத பாடசாலை ஸ்தாபகருமான பிரம்மஸ்ரீ ராமச்சந்திரகுருக்கள் பாபுசர்மா தெரிவித்துள்ளார்.

தேசிய ஐக்கியத்துக்கான சர்வ மதங்கள் கூட்டமைப்பின் சம தலைவரும் ஜனாதிபதியின் மத விவகாரங்களுக்கான ஆலோசருமான அருட் தந்தை சரத் ஹெட்டியாராச்சி,

30 வருடங்களாக பயங்கரவாத யுத்தத்தினால் வாழ்ந்த மக்களுக்கு இன்று பரிபூரணமான சுதந்திரம் கிடைத்துள்ள இன்று நாட்டில் எந்தவொரு இடத்துக்கும் பயம், சந்தேகம் இன்றி தங்களுடைய தேவைகளை எந்த இடத்துக்குச் சென்று நிறைவேற்றக் கூடிய சூழல் உருவாகியுள்ளது. சிங்களம், தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவர் என்று வேறுபாடு இன்றி நாம் அனைவரும் ஒரே இலங்கையர் என்று சுதந்திரத்துடன் வாழும் சூழல் உருவாகியுள்ளது.

இதற்கு பல வருடங்களுக்கு முன் 3 தசாப்தங்களை துக்ககரமான நிலையை இலங்கைப் பிரஜைகள் என்ற முறையில் மறக்க முடியாது.

இன்று அரசாங்கத்தினால் வேகமான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அதிகளவில் எமது கைகளுக்கு எட்டியுள்ளது. பயங்கரவாதிகளுடன் யுத்தம் புரிந்து வெற்றிவாகை சூடியதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அனைவரும் அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் பரிபூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.

தேசிய ஐக்கியத்துக்கான சர்வ மதங்கள் கூட்டமைப்பின் சமதலைவரும் ஜனாதிபதியின் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கான ஆலோசகருமான கலாநிதி அல்-ஹாஜ் அஸ்ஸெய்யத் ஹஸன் மெளலானா,

இன்று நமது நாட்டில் பரிபூரணமான சமாதானம் மலர்ந்து மூவின மக்களும் ஒற்றுமையுடனும் நிம்மதியுடனும் வாழக்கூடிய நிலையை உருவாகியுள்ளது. இக்காலக்கட்டத்தில் ஜனாதிபதியும் இந்த அரசாங்கமும் வேகமான அபிவிருத்திப் பாதையில் வீறுநடை போட்டுக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் நாட்டில் தோன்றிய எந்தவொரு தலைவராலும், முடிவுக்குக் கொண்டுவர முடியாத 30 வருடகால பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து ஆசியாவின் அதிசயம் மிக்க நாடாக திகழ்ந்து வருவதை பார்த்துக் கொண்டு இருக்க முடியாத சில உள்நாட்டு வெளிநாட்டு தீயசக்திகள் நமது நாட்டை மீண்டும் ஒரு துக்ககரமான நிலைக்கு மாற்றுவதற்கு சதித்திட்டம் தீட்டுகின்றன.

எனவே நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் சாதிமத கட்சி பேதமின்றி ஜனாதிபதி பெற்றுத் தந்த சமாதானத்தை அனுபவிப்பது போல், ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் வேகமான அபிவிருத்தித் திட்டங்களுக்கும் இடையூறு செய்யக் கூடிய சதிகாரர்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

நமது நாடு மீண்டும் ஒரு குழப்ப நிலைக்கு தள்ளப்பட்டு விட்டால் துன்பங்களுக்கு நாமே தான் முகம் கொடுக்கக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம். எனவே நாட்டு மக்களாகிய நாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களை பலப்படுத்துவதன் மூலம் தான் நம் நாட்டில் மூவின மக்களும் நிம்மதியுடன் வாழலாம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.