புத் 64 இல. 09

கர வருடம் மாசி மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 04

SUNDAY FEBRUARY 26,  2012

 
குடாநாட்டு மக்களுக்கு

குடாநாட்டு மக்களுக்கு

ஏன் இன்னும் எட்டாக்கனி!

யாழ் மாவட்டத்திற்கான மின்சார விநியோகத்தில் அரசாங்கம் அக்கறைகாட்டவில்லையா? இல்லையேல் அரச அதிகாரிகளின் அசிரத்தையான செயல்பாடுகளினால் இருப்பத்திநாலு மணித்தியாலயம் தொடர்ச்சியான மின்சாரம் வழங்குவதில் பாதிப்பு ஏற்படுகின்றதா,

இதற்கு விடை தேடுவதில் யாழ்குடா நாட்டு மக்கள் ஈடுபட்டுள்ளனர். தற்பொழுது பொது மக்கள் கூறுவதும் கருதுவதும் மின்சார சபை ஊழியர்களின் அசிரத்தையான போக்கே யாழ்குடாநாட்டு மக்களின் தொடர்ச்சியான மின் பாவனைக்கு தடையாக இருப்பதாகவும் கூறுகின்றார்கள்.

இறுதியாக நடந்த உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின்போது யாழ். குடாநாடடில் பாரிய மின்வெட்டு இரவுவேளைகளில் நடைபெற்று வந்தது.

இது சம்பந்தமாக யாழ் குடாநாட்டின் மின்சார சபையின் உயர் அதிகாரிகள் மின் விநியோகம் சீராக வழங்க போதிய மின் உற்பத்தி இல்லை. மட்டுப்படுத்தியதனால் மட்டும் மின்சார உற்பத்தி நடைபெறுவதினால் சுழற்சி முறையில் மட்டுமே மின்சாரம் வழங்க முடியும். அறிக்கைகள் மூலம் பொது மக்களுக்கு அறிவித்தும் இருந்தார்கள்.

யாழ். குடாநாட்டில் எந்த வகையான தடையும் இன்றி 24 மணித்தியாலய மின்சார விநியோகம் சீராக அன்று யாழ் குடாநாட்டின் மின்சாரம் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் வழங்கப்பட்டதுடன் திருட்டு மின்சாரம் பெற்றவர்களும் கூட சீராகப் பெற்று தமது தேவைகளையும் பூர்த்தி செய்தார்கள்.

இந்நிலைமை ஜனாதிபதியின் ஒரு அறிவித்தலின் கீழ் உடனடியாக ஏற்பட முடியுமானவை ஏன் இதுவரை காலமும் அந்நடவடிக்கைகயை தொடர முடியவில்லையென்பதே மின்சார சபை ஊழியர்களின் ஆசிரத்தையான போக்கும். பொறுப்பற்ற தன்மையுமே யாழ்குடா நாட்டு மக்கள் மின்சார விடயத்தில் பாதிப்படையக் காரணம் என பொது மக்கள் நம்புகின்றார்கள். யாழ். மாவட்ட மக்களின் மின்சார விநியோகம் என்பது கோழி குஞ்சுக்கு பால் கொடுப்பதைப் போன்று காணப்படுகின்றது என்றால் மிகையாகமாட்டாது.

1995ம் ஆண்டு யாழ்குடாநாட்டை படையினர் மீண்டும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததைத் தொடர்ந்து இப்பகுதியில் 1996ம்ஆண்டு மேமாதம் முதல் மக்கள் மீளக் குடியேறினார்கள்.

இந்நிலையில் நகரப் பகுதியில் மின் பிறப்பாக்கிகள் மூலம் மின்சாரம் வழங்கும் நடவடிக்கைகளும் கூட அரசினால் விரைவுபடுத்தப்பட்டன.

1990ம் ஆண்டு இந்திய அமைதிப்படை யாழ்குடாநாட்டில் இருந்து விலகியதைத் தொடர்ந்து லக்சபான மின்சாரமும் யாழ். குடா நாட்டில் இருந்து விலகிக் கொண்டது.

ஆனாலும் யாழ்குடாநாட்டு மக்களுக்கு மின் விநியோகத்தை வழங்க வேண்டும், இயல்பு வாழ்க்கை திரும்பியதை நிரூபிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு கூல் எயார் நிறுவனம் என்ற வெளிநாட்டு நிறுவனத்துடன் அரச செய்து கொண்ட உடன்படிக்கைக்கு அமைவாக மின்சல விநியோகம் யாழ் குடா காட்டிற்கு மேற்கொள்ளப்பட்டது.

மின்சாரம் மக்களுக்கு சுழற்சி முறையிலும் ஒன்றுவிட்ட ஒருநாள் என்ற அடிப்படையிலும் பகல்நேரங்களில் மின்வெட்டு என்றும் மக்கள் மின் சாரத்தையிட்டு அவநம்பிக்கை கொள்ளும் அளைவுக்கு விநியோகம் காணப்பட்டது.

யாழ் மாவட்டத்தின் ஏன் வட மாகாணத்தின் ஒரேயொரு அமைச்சராக இருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முதல் தென்னிலங்கையில் இருந்து வரும்அமைச்சர்கள் வரை யாழ் குடா நாட்டுக்கான மின்சாரம் ஒரு சில மாதங்களில் சீர்செய்யப்படும் என்ற வாக்குறுதிகளை வழங்கினார்கள்.

கடல் எயார் நிறுவனம் யாழ் குடா நாட்டு மக்கள் அன்றைய தேவையான சுமார் 27 மெகாவட் மின்சாரத்தை பூர்த்தி செய்யவில்லையெனக் கூறி 32 மெகாவாட் மின்சாரத்தை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் கூல் எயார் நீக்கப்பட்டு அக்றிக்கோ என்ற நிறுவனத்துடன் மின்விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஏற்கனவெ ஒப்பந்தம் செய்யப்பட்ட கூல்எயார் அக்றிக்கோ போன்ற நிறுவனங்கள் செய்யப்பட்ட ஒப்பந்தத்திற்கு ஏற்ப மின்சாரத்தை வழங்கவில்லையெனக் கூறி தற்போது நோத்பவர் என்ற நிறுவனம் 35 மெகாவாட் மின்சாரம் வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு சுமார் இரண்டு வருடங்களாக மின்விநியோக செயல்பாட்டில் ஈடுபடுகின்றது.

மின்சாரம் வழங்கும் நிறுவனங்களும் பெயர்களும் குறிப்பிட்ட சகல இடைவெளியில் மாறுகின்றதே அன்றி யாழ் குடா நாட்டிற்கான மின்சார விநியோகத்தில் மாற்றம் ஏற்படவில்லை.

மின்சாரசபை ஊழியர்களின் அசிரத்தையான போக்கும் மக்கள்விடயத்தில் காட்டும் அக்கறை இன்மையும் தான் இந்த மின்சார விநியோகம் சீர்செய்யப்படாமைகான கார ணம் என பொதுமக்கள் குறைகூறுவதிலும் குற்றம் சாட்டுவதிலும்கூட நியாயம் காணப்படுகின்றது.

யாழ். நாட்டின் வீதி அபி விருத்திக்காக பகல் வேளை களில் மின்சாரம் நிறுத்தப் படுகின்றது. முன்னேற்பாடாக சில வேளைகளில் அறிவி க்கப்படும் சில வேளைகளில் அது கூட செய்யாது நிறுத் தப்படும்.

பிற்பகல் 5.00 மணிக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கும் . ஆனால் மின்சாரம் இரவு 7.00 மணிக்கும் 8.30 மணிக்கும் இடையிலேயே மீண்டும் வழங்கப்படும்.

மின்சார சபை ஊழியர்களின் திட்ட மிடப்படாத செயற்பாடுகளும் பொறுப்பற்ற நடவடிக்கைகளுமே இன்று யாழ். உள் நாட்டு மக்களை, யாழ் குடா நாட்டிற்கான இருபத்திநான்கு மணிநேர தொடர் மின் விநியோகத்திற்கு தடையாக இருப்பது அரசாங்கமா? அன்றி அரச அதிகாரிகளா என்ற கேள்வியை எழுப்பத் தொடங்கி யுள்ளனர்.

மின்சாரசபை ஊழியர்களின்செயல் பாடே இதற்குக் காரணம் என கடந்த கால செயல்பாடுகளின் பின்னணியில் மக்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.