புத் 64 இல. 09

கர வருடம் மாசி மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 04

SUNDAY FEBRUARY 26,  2012

 
ஜெனீவா கூட்ட முதல் நாளே அறிக்கை சமர்ப்பிக்க சந்தர்ப்பம்

ஜெனீவா கூட்ட முதல் நாளே அறிக்கை சமர்ப்பிக்க சந்தர்ப்பம்

விளக்கத்தை முறையாக வழங்குவோம் - சமரசிங்க

ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை ஆணைக் குழுவின் ஆரம்பக் கூட்டத் தொடரில் முதலாவது தினத் திலேயே இலங் கையின் சார்பில் உத்தியோகபூர்வ கொள்கை விளக்க மொன்றை அளிப்பதற்கு இப்போது அனுமதி கிடைத்திருக்கிறது.

இலங்கை அரசாங்கம் இதுவரையில் மேற்கொண்டு வரும் மனிதாபிமான செயற்பாடுகள் குறித்தும், அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்பட்டிருக்கும் அபாண்ட குற்றச்சாட்டுக்களுக்கும் இந்த கொள்கை விளக்கத்தில் ஆதாரபூர்வமான பதில் கொடுக்கப்பட்டிருப்பதாக பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சரும் ஜனாதிபதியின் மனித உரிமைகளுக்கான விசேட தூதுவருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

இந்த மனித உரிமைகள் மாநாடு சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நாளை 27ம் திகதியன்று ஆரம்பமாகி, மார்ச் மாதம் 23 ஆம் திகதி நிறைவுபெறும்.

யுத்தம் முடிவடையும் கடைசி நாட்களில் இலங்கையில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை என்பதை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டுவதற்கு இந்த கொள்கை விளக்க அறிக்கையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இது சம்பந்தமாக குடிசன மதிப்பீட்டு திணைக்களம் எடுத்த புள்ளிவிபர தகவல்களும் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்தப் புள்ளி விபர அறிக்கை பக்கச்சார்பானது என்று எவராலும் குற்றம் சுமத்த முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த கொள்கை விளக்க அறிக் கையை தயாரிப்பதற்காக வட பகுதியில் மாவட்ட செயலக காரியாலயத்திலும், பிரதேச செயலக காரியாலயத்திலும் சேவையிலுள்ள தமிழ் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் இவ்வறிக்கை தயா ரிக்கப்பட்டிருக்கிறதென்றும் அமைச்சர் கூறினார். எனவே, இவ்வறிக்கை பக்க சார்பற்றது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.