புத் 64 இல. 09

கர வருடம் மாசி மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 04

SUNDAY FEBRUARY 26,  2012

 

நயகரா நீர் வீழ்ச்சி

சு+ர்யாவுடன் இணைகிறாரா ஸ்ருதிஹாசன்?

சு+ர்யாவுக்கு ஜோடியாக மீண்டும் ஸ்ருதிஹாசன் நடிக்கிறாரா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் வெங்கட் பிரபு.

இதுகுறித்து இவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, மங்காத்தா பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜPத் படம் இயக்குகிறீர்களா என்கிறார்கள்.

மீண்டும் இயக்குவேன். ஆனால் அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. தற்போது சு+ர்யா நடிக்கும் படத்தை இயக்குகிறேன். இதில் ரவி தேஜhவும் நடிக்கிறார். இருவரும் வௌ;வேறு படங்களில் நடித்து வருகின்றனர். அப்படங்களை முடித்தவுடன் என் படத்தில் நடிப்பார்கள்.

சமீபத்தில் அஜPத்தை சந்தித்தேன். சினிமா தவிர பல்வேறு விடயங்கள் குறித்து பேசினோம். மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசையாக இருக்கிறேன்.

சு+ர்யா நடிக்கும் படத்தின் திரைக்கதை முடிந்துவிட்டது. இது ஆக்'ன் - த்ரில்லர் படம். அதே நேரம் கதாநாயகர்கள் நகைச்சுவை காட்சிகளிலும் நடிக்க உள்ளனர்.

இப்படத்தில் முன்னணி நடிகை ஒருவர் நடிக்கவுள்ளார். 7ம் அறிவு படத்துக்கு பிறகு இப்படத்திலும் சு+ர்யா ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறாரா என்கிறார்கள். அது வதந்திதான் என்று கூறியுள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.