ஹிஜ்ரி வருடம் 1434 ரபீஉனில் அவ்வல் மாதம் பிறை 25
விஜய வருடம் தை மாதம் 14ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, JANUARY , 27 2014
வரு. 82  இல. 23
 

ஹரியானாவில் கொள்ளையர்களுடன் தைரியமாக மோதிய பாதுகாவலர்கள்: கொள்ளை முயற்சி முறியடிப்பு

ஹரியானாவில் கொள்ளையர்களுடன் தைரியமாக மோதிய பாதுகாவலர்கள்: கொள்ளை முயற்சி முறியடிப்பு

பெங்களூரில் உள்ள ஏடிஎம் மையத்தில் பெண் அதிகாரியை கொடுரமாக கத்தியால் வெட்டி, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஏடிஎம் மையங்கள் மற்றும் வங்கிகளில் பாதுகாப்பு விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

இந்நிலையில் ஹரியானா மாநிலம் ரோட்டக் மாவட்டம் கானோர் கிராமத்தில் உள்ள ஸ்டேட் வங்கியில் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அவர்களில் ஒருவன் மட்டும் வங்கிக்குள் நுழைந்தான் மற்ற இருவரும் வெளியில் நின்று யாராவது வருகிறார்களா? என பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போது அவர்கள் மீது சந்தேகம் அடைந்த காவலாளிகள், வங்கியின் வாசல் அருகே சென்று கதவை பூட்டினர். அப்போது கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் இரண்டு பாதுகாவலர்களுக்கும் காயம் ஏற்பட்டது. ஆனாலும் சுதாரித்துக்கொண்டு எழுந்த அவர்கள், கொள்ளையர்களுடன் கடுமையாக சண்டையிட்டு, அவர்களில் ஒருவனை மடக்கிப் பிடித்தனர்.

இதனால் கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டு கோடிக்கணக்கான பணம் தப்பியது. காவலர்கள் மிகவும் தைரியமாக கொள்ளையர்களுடன் சண்டையிட்ட சம்பவம் வங்கியின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அவர்களின் கடமையை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர். தப்பி ஓடிய இரண்டு கொள்ளையர்களையும் பிடிக்க தனிப் படைகள் விரைந்துள்ளன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி