ஹிஜ்ரி வருடம் 1434 ரபீஉனில் அவ்வல் மாதம் பிறை 25
விஜய வருடம் தை மாதம் 14ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, JANUARY , 27 2014
வரு. 82  இல. 23
 

முன்னாள் எம்.பி.க்கு 4 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை

மாட்டுத் தீவன ஊழல் வழக்கு:

முன்னாள் எம்.பி.க்கு 4 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை

மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான மேலும் ஒரு வழக்கில் ஐக்கிய ஜனதாதள எம்.பி. ஜெகதீஷ் சர்மாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பீகாரில் கடந்த 1990 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ரூ. 37.7 கோடி மாட்டுதீவன ஊழல் வழக்கில், முன்னாள் முதல்வர்களான லாலு பிரசாத் யாதவ், ஜெகநாத் மிஸ்ரா மற்றும் ஐக்கிய ஜனதா தள எம்.பி. ஜெகதீஷ் சர்மா உள்ளிட்ட 45 பேரை குற்றவாளிகள் என சி. பி. ஐ. நீதிமன்றம் கடந்த ஆண்டு அறிவித்தது. இதில் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகள், ஜெகதீஷ் சர்மாவுக்கு 4 ஆண்டுகள் என கடுங்காவல் சிறை தண்டனை வழங்கப்பட்டது. முன்னர் ஜாமீனில் வெளியே வந்த இருவரின் எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது.

இந்நிலையில் அங்குள்ள கோடா கருவூலத்தில் இருந்து ரூ. 1.16 கோடியை முறைகேடாக பெற்றதாக ஜெகதீஷ் சர்மா உள்ளிட்ட 18 பேர் மீது சி. பி. ஐ. நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சீதாராம் பிரசாத், ஜெகதீஷ் சர்மாவுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ. 4 இலட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி