ஹிஜ்ரி வருடம் 1434 ரபீஉனில் அவ்வல் மாதம் பிறை 25
விஜய வருடம் தை மாதம் 14ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, JANUARY , 27 2014
வரு. 82  இல. 23
 

'மோடி பிரதமராவதற்கு அமோக ஆதரவு; பா. ஜ. வுக்கு வெற்றி வாய்ப்பு

'மோடி பிரதமராவதற்கு அமோக ஆதரவு; பா. ஜ. வுக்கு வெற்றி வாய்ப்பு

தற்போதைய சூழலில் பார்லி., தேர்தல் நடத்தப்பட்டால் பா. ஜ. வே கூடுதல் சீட்டுக்களை பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாகவும், காங்கிரசுக்கு கடந்த தேர்தலை விட பெரும் இழப்பு ஏற்படும் என்றும், ராகுலை விட மோடியே பிரதமர் ஆக வேண்டும் என கூடுதல் சதவீதத்தினர் விரும்புவதாகவும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

சி. என். என். சார்பில் நடத்தப் பட்டுள்ள இந்த கருத்துக் கணிப்பு 18 மாநிலங்களில் பல தரப்பு வாக் காளர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. நேரில் மற்றும் பேஸ்புக், இணையதளம் ஆகியன மூலம் இந்த கணிப்புகள் நடந்தன.

இந்த கணிப்பின்பிடி கடந்த 2009 நடந்த லோக்சபா தேர்தலை விட காங். தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஏற்கனவே பெற்ற 206 தொகுதிகளில் 92 முதல் 108 வரை மட்டுமே பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பா. ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 211 முதல் 231 தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிய வந்துள்ளது.

இது மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் அறுதி பெரும்பான்மை பெறுவதற்கு மிக (272 தேவை) குறைந்த வித்தியாசமே. மாநில அளவிலான கட்சிகள் இந்த முறை அதிக இடங்களை பிடிக்க வாய்ப்பும் உள்ளது. குறிப்பாக மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, தமிழகத்தில் ஜெ. தலைமையிலான அ. தி. மு. க. கூடுதல் இடங்களை பிடிக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும், இந்த நேரத்தில் மத்தியில் பிரதமரை முடிவு செய்வதில் இந்த கட்சிகள் முக்கியத்துவம் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி