ஹிஜ்ரி வருடம் 1434 ரபீஉனில் அவ்வல் மாதம் பிறை 25
விஜய வருடம் தை மாதம் 14ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, JANUARY , 27 2014
வரு. 82  இல. 23
 

ஹம்பாந்தோட்டை மாவட்ட வர்த்தக சம்மேளன இருபது வருட பூர்த்தி விழா

ஹம்பாந்தோட்டை மாவட்ட வர்த்தக சம்மேளன இருபது வருட பூர்த்தி விழா

தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் மக்களின் மேம்பாட்டுக்கு உதவிகள்

ஹம்பாந்தோட்டை மாவட்ட, வியாபாரிகளுக்கும், இளைஞர் யுவதிகளுக்கும் கடந்த இருபது வருட காலமாக பல்வேறு சேவைகளை முன்னெடுத்து வந்த இலங்கையின் முதலாம் தர மாவட்ட வர்த்தக சம்மேளனமான ஹம்பாந்தோட்டை மாவட்ட வர்த்தக சம்மேளனம்  (HDCC) இன்று 27 ஆம் திகதி தனது இருபது வருட பூர்த்தியினை வெகுவிமரிசையாக கொண்டாடுகின்றது.

இசுரு அசிரி 2000 கண்காட்சியில் அன்றைய மீன்பிடி நீரியல் வளத்துறை அமைச்சராக இருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கலந்து கொண்ட
போது எடுத்த படம்.

1993 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு சில வியாபாரிகள் ஒன்றிணைந்து இலங்கையின் முதலாவது மாவட்ட வர்த்தக சம்மேளனமாக ஆரம்பித்த இவ் வர்த்தக சம்மேளனம் இலங்கையில் புதியதொரு அத்தியாயத்தை ஆரம்பித்து உருவாக்கப்பட்டது.

ஆரம்பகட்ட நடவடிக்கையாக ஒரு புதிய முயற்சியாக மாவட்டத்திலுள்ள வியாபாரிகளை, தொழில் முயற்சியாளர்களை ஒன்றிணைத்து பொருளாதார, அபிவிருத்தி துறைகளில் வியாபாரிகளுக்கு உள்ள தேவைகளை இனங்கண்டு அவற்றை நிறைவு செய்து வியாபாரிகளை வலுப்படுத்தி வியாபாரிகளது எதிர்பார்ப்புகளை, தேவைகளை கடந்த இரண்டு தசாப்தங்களாக நிறைவேற்றி வந்துள்ளது.

தொடர்ந்தும் யு. எஸ். எய்ட் நிறுவனத்தின் உதவிகளையும் பெற்று தேசிய ரீதியான வர்த்தக சங்கங்களினதும் தொடர்புகளை தனது சேவைகளை மேலும் விஸ்தரித்தது. இலங்கை அரசாங்கம் தனியார் துறை நிறுவனங்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றோடு நெருங்கிய உறவுகளை தொடர்புகளை பேணி பல்வேறு சேவைகளை திட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளது.

ஹம்பாந்தோட்டை ஒன்றிணைந்த கிராமிய அபிவிருத்தி திட்டம் திட்ட அமுலாக்கல் அமைச்சின் திட்டத்தின் கீழ் நோர்வே அரசாங்கத்தின் நோராட் திட்டத்தின் கீழ் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஹம்பாந்தோட்டை தொழில் முயற்சியாளர் சேவை நிலையம் ஒன்றை ஆரம்பித்து வியாபாரிகளுக்கான சேவையினை மேலும் விஸ்தரித்தது. இதனூடாக நோர்வே அரசாங்கம், தூதுவராலயம் ஆகியவற்றினூடாக தொடர்புகளை ஏற்படுத்தி பல சேவைகளை முன்னெடுத்தது.

வியாபாரிகளது தேவைகளை கண்டறிந்து அவற்றைத் தொகுத்து பல்வேறு நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி ஹம்பாந்தோட்டை மாவட்ட பொருளாதார அபிவிருத்திக்கு பாரியதொரு பங்களிப்பை வியாபாரிகளினூடாக செய்து வருகின்றது. சுனாமி அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட சகல தரப்பிலான மக்களுக்கும் அவர்களது பாதிப்புகளிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்காக பல்வேறு விதமாக உதவிகளை வழங்கியது.

 (HDCC) வியாபாரிகளுக்கு தகவல்கள், தொழில்நுட்பம், வங்கி வசதிகள், வெளிநாட்டு சந்தை வாய்ப்புகள், பயிற்சிகள், செயலமர்வுகள் என்பவற்றையும் நடத்தி வியாபாரிகளையும் அவர்களது ஊழியர்களையும் கட்டியெழுப்பு வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

ஹம்பாந்தோட்டை மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்களின் நிகழ்வு

அத்தோடு நின்றுவிடாமல் மாவட்டத்திலுள்ள தொழிலற்று இருக்கும் இளைஞர் யுவதிகளினையும் கருத்திற் கொண்டு அவர்களது தேவைகளை இனங்கண்டு அவர்களுக்காகவும் பல்வேறு திட்டங்களை வடிவமைத்து தொழில் வழிகாட்டல் சேவையொன்றினையும் (C. S. C.)   ஆரம்பித்தது.

1996 ஆம் ஆண்டு இத்திட்டத்திற்கு கனடா நாட்டின் உலக பல்கலைக்கழக சேவை உதவ முன்வந்ததன் பயனாக மாவட்டத்தில் தொழில் பயிற்சி நிலையங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து கூட்டாக்கி அதனூடாக பல்வேறு வகையான தொழில் பயிற்சிகளையும் வழங்கியது.

சிளிவிவி தொழிலற்று இருக்கும் இளைஞர் யுவதிகளது தேவைகளையும், திறன்களையும் இனங்கண்டு அவர்களை புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதனை ஊக்கப்படுத்தி அவர்களும் தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கான 18 தொடக்கம் 35 வரையிலான தொழிலற்று இருக்கும் இளைஞர் யுவதிகளை ஒன்றிணைத்து ஹம்பாந்தோட்டை இளைஞர் வியாபார சங்கம் ஒன்றினை ஸ்தாபித்தது.

1997 ஆம் ஆண்டு சுதந்திரமான நம்பிக்கையான ஹம்பாந்தோட்டை இளைஞர் வியாபார நம்பிக்கை  HYBT   ஒன்றினை இதன்  (HDCC) முகாமைத்துவத்தின் கீழ் ஸ்தாபித்து நம்பிக்கை சபையிடம் ஒப்படைத்தது. இது இங்கிலாந்து நாட்டின் இளவரசரின் சர்வதேச இளைஞர் வியாபார  (YBI)  திட்டத்தினையும் முன்னெடுத்தது. இதனூடாக உலகத்திலுள்ள 40 இளைஞர் வியாபார நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றும் சந்தர்ப்பமும் ஏற்பட்டது.

அத்தோடு  (HDCC) தொண்டர் சேவை சர்வதேச (USO)  நிறுவனத்துடனும் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தொடர்புகளை பேணி தொண்டர்களின் உதவியைப் பெற்று தனது நிறுவன ஊழியர்களை வளப்படுத்தியது.

2005 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்தின் கொமன்வெல்த் வர்த்தக சங்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொண்டு ஹம்பாந்தோட்டை மாவட்ட வர்த்தக சம்மேளனத்தை கட்டியெழுப்புவதற்கான நீண்டகால பொருளாதார அபிவிருத்தி திட்டமொன்றினையும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மேற்கொண்டது.

இதனூடாக பல்வேறு உதவிகள் பரிமாறப்பட்டதோடு, 2009 ஆம் ஆண்டு உலக வியாபார காங்கிரஸினால் நடத்தப்பட்ட போட்டியில் HDCC, GMCC இற்கு சிறந்த தொடர்புள்ள திட்டத்திற்கான பரிசும் கிடைத்தது. மாவட்டப் பெண்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை யு. எஸ். எய்ட் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்டு பெண்களை வலுவூட்டுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.

இவற்றுக்கு மேலதிகமாக உள்ளூர் நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி வியாபாரிகளுக்கு பல்வேறு சேவைகளை எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுத்து வியாபாரத்தினை முன்னெடுத்து செல்வதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தியது.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின்போது தனது அங்கத்தவர்கள் மற்றும் தொழிலாளர்களை நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தி சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதற்கு உள்ளூர் மற்றும் சர்வதேச உதவிகள் பெறப்பட்டதோடு, இதன் கீழ் மீண்டும் வியாபாரத்தை நோக்கி திட்டம் ஆரம்பிக்கப்பட்டு வியாபாரிகள் கட்டியெழுப்பப்பட்டனர்.

இவற்றிற்கு நோர்வே தூதுவராலயம், ஆசியா பவுண்டேசன், இலங்கை வர்த்தக சங்கம் என உதவியதோடு சுனாமியின் அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்காக  ‘Rhythm of the Sea’  எனும் புத்தகத்தினையும் வெளியிட்டதோடு  (HDCC) யின் செயற்பாடுகளை தெளிவுபடுத்துவதற்காக மாதாந்தம் உள்ளூர் பத்திரிகையொன்றையும் பிரசுரித்து வருகின்றது.

சுற்றுலாத் துறையை மேம்படுத்தி வெளிநாட்டவர்களை கவர்ந்தெடுப்பதற்காக டீப் செளத் (Deep South)  ஒரு திட்டத்தினை உருவாக்கி ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் துறைக்கு பிரபல்யமான பிரதேசங்களை காட்சிப்படுத்தி முன்னெடுத்து மூன்றாவது பயண மற்றும் சுற்றுலாத்துறைக்கான ஜனாதிபதி விருது வழங்கலின் போது மாகாண சுற்றுலா திட்டத்தின் கீழ் உள்ளூர் அபிவிருத்தி விருதினையும் பெற்றதோடு, ஐக்கிய இராச்சிய மென்செஸ்ரர் சொலுசன், மேர்ஸி கோப்ஸி ஐக்கிய அமெரிக்கா ஆகிய நிறுவனங்களினதும் உதவிகளையும் பெற்றது.

ஹம்பாந்தோட்டை மாவட்ட வர்த்தக சம்ளேனம் அதன் சக்தியாக கருதுவது அதன் தொடர்புகளாகும். இதன் கீழ் ஏனைய நிறுவனங்களுடன் தொடர்புகளை பேணி வந்துள்ளது. இலங்கை வர்த்தக சம்ளேனம் FCCISL, ICC, NCCSL, BPA, தொண்டர் சேவை சர்வதேசம், இளைஞர் வியாபார சர்வதேசம், கிரேடர் காமன் செஸ்ரா வர்த்தக சம்ளேனம், மென்செஸ்ரர் திட்டம், லும்பா பவுண்டேசன், சர்வதேச இளைஞர் பவுண்டேசன், ஆசியா பவுண்டேசன், சர்வதேச அலர்ட், பிரித்தானிய கவுன்ஸில் ILO, UNDP, USAID, GIZ,  உலக பல்கலைக்கழக சேவை உலக வங்கி, நோர்வே தூதுவராலயம்  NORAD, உருகுணை பல்கலைக்கழகம், அக்தெர் பல்கலைக்கழகம், ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகம், இலங்கை தொழிலாளர் பணியகம் உட்பட மேலும் பல நிறுவனங்களினதும் உதவிகளையும் ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் மற்றும் அனுபவங்களையும் பெற்றுவந்துள்ளது.

 (HDCC) இவ்வாறு வளர்ச்சியடைவதற்கான காரணம் சுதந்திர நிர்வாக உறுப்பினர்கள், காரியாலய அலுவலர்கள், கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோரின் நேரமும் சக்தியும் மற்றும் தொண்டர் அடிப்படையில் நிறுவனத்தை கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்பு செய்து வருவதுமாகும்.

கடந்த பல வருட காலமாக  (HDCC) வியாபாரிகளுக்காக சிறந்த வியாபாரிகளுக்கான போட்டிகள், பரிசளிப்பு விழாக்கள், உள்ளூர் சர்வதேச பயிற்சி, வியாபார கண்காட்சிகளில் பங்குபற்றச் செய்தல், சர்வதேச போட்டிகளில் பங்குபற்றுவதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்துதல், கண்காட்சிகளை நடத்துதல், முதலீட்டு சந்திப்புகளை ஏற்பாடு செய்தல் உட்பட பல்வேறு சேவைகளை வழங்கியுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி