ஹிஜ்ரி வருடம் 1434 ரபீஉனில் அவ்வல் மாதம் பிறை 25
விஜய வருடம் தை மாதம் 14ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, JANUARY , 27 2014
வரு. 82  இல. 23

இருநாட்டு மீனவர் பிரதிநிதிகள் சென்னையில்
இன்று சந்திப்பு

தேனாம்பேட்டையில் பேச்சுவார்த்தை ஆரம்பம்

* இலங்கை சார்பில் 16 பேர்கொண்ட குழு பங்கேற்பு

* இருதரப்பு உயர் அதிகாரிகளுக்கு பார்வையாளர் அந்தஸ்து

இலங்கை, இந்திய மீனவர்களிடையிலான பேச்சுவார்த்தை இன்று தமிழகத்தில் சென்னை தேனாம்பேட்டையில் நடைபெறவுள்ளது.தேனாம்பேட்டை டி. எம். எஸ். வளாகத்தில் உள்ள மீன் வளத்துறை இயக் குநர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று காலை 10 மணிக்கு இருதரப்பு மீனவர்களி னதும் சந்திப்பு ஆரம்ப மாகும்.இப்பேச்சுவார்த் தையில் கலந்துகொள்ள வென இலங்கையிலி ருந்து 16 பேர் கொண்ட குழு நேற்று இந்தியா பயண மானது.

விவரம்

அமைச்சர் ஜீ. எல். அபுதாபியிலிருந்து டில்லி செல்ல ஏற்பாடு

ஓரிரு தினங்களில் உயர்மட்ட சந்திப்பு

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் இன்னும் ஓரிரு தினங்களில் புதுடில்லி செல்லவுள்ளார்.

விவரம்


ஜனாதிபதியுடன் போட்டியிட எதிர்க்கட்சியில் எவரும் இல்லை

ஜனாதிபதி தேர்த லில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் போட்டியிடுவதற்கு எதிர்க்கட்சியில் ஒரு வேட்பாளர் கூட இல்லை என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

விவரம்

ஜெயலலிதாவின் கருத்துக்கள் எவ்வகையிலும் எடுபடாது

இலங்கைக்கும் இந்தியாவு க்குமிடையில் இராஜதந்திர ரீதியாக எந்தவிதமான பிரச்சி னையுமில்லையென வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்தார்.இலங்கை அரசாங்கம் இந்திய மத்திய அரசாங்கத்துடனேயே பேச்சுவார்த்தை நடத்துகிறது. அதனால் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் கூற்றுக்கள் முக்கியத்துவமானவையல்லவெனவும் பிரதியமைச்சர் நியோமல் கூறினார்.

விவரம்

இலங்கையின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை

இலங்கை நிலைப்பாட்டில் மாற்றமில்லையெனவும் சர்வதேச கடல் சட்டத்தில் எவ்வித விட்டுக் கொடுப்புகளும் முன்னெடுக்கப் போவதில்லை எனவும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் ராஜித்த சேனாரத்ன நேற்றும் வலியுறுத்தினார். இலங்கை - இந்திய மீனவர் பேச்சுவார்த்தை இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், கச்சதீவு உள்ளிட்ட கடல் பரப்பில் இந்திய . . .

விவரம்

இந்தியாவின் 65 வது குடியரசு தினத்தையொட்டி கொழும்பு 03 இல் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்ற வைபவத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹா அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். (படம்: அஷ்ரப் ஏ. சமட்)

பஸ் கட்டணக் கொள்கை மறுசீரமைப்பு; அரச நிறுவனங்களின் உதவியுடன் மதிப்பீடு

தேசிய பஸ் கட்டணக் கொள்கையை மறுசீரமைப்பதற்காகப் பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள சகல அரச நிறுவனங்களின் ஒன்றிணைந்த மதிப்பீடொன்று நடத்தப்படும்.தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, இதற்கான நவடிக்கையை மேற்கொண்டு ள்ளது.

விவரம்


கலிகமுவ மத்திய மகா வித்தியாலயத்தில் மஹிந்தோதய ஆய்வு கூடத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று திறந்து வைத்த பின் மாணவிகளுடன் உரையாடுவதைக் காணலாம்.
(படம்: நளின் ஹேவாபத்திரன)





தனியார் பேருந்து தொழில் முயற்சியாளர்களுக்கு விசேட வரிச்சலுகையும் பெறுமதி சேர்க்கப்பட்ட வரிச்சலுகையும் வழங்கி உதிரிப்பாகங்கள் மற்றும் புதிய கொள்வனவுகளின்போது எதிர்நோக்குகின்ற கடுமையான பிரச்சினையான தவணைக்கட்டண முறையிலான நிதி கஷ்டங்களைத் தீர்த்துவைப்பேன்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ