ஹிஜ்ரி வருடம் 1434 ரபீஉனில் அவ்வல் மாதம் பிறை 25
விஜய வருடம் தை மாதம் 14ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, JANUARY , 27 2014
வரு. 82  இல. 23
 

ஆறு வருடங்களின் பின்னர் மீண்டும் ஹோல்சிம் சங்ஸ்தா சீமெந்து சந்தையில்

புத்தளம் சீமெந்து தொழிற்சாலை

ஆறு வருடங்களின் பின்னர் மீண்டும் ஹோல்சிம் சங்ஸ்தா சீமெந்து சந்தையில்

இலங்கையில் முன்னணி சீமெந்து உற்பத்தி நிறுவனமான ‘ஹோல்சிம் லங்கா’ ஆறு வருடங்களின் பின்னர் மீண்டும் ‘சங்ஸ்தா’ சீமெந்தை தயாரித்து விநியோகிக்க ஆரம்பித்துள்ளது.

இலங்கை மக்களின் நம்பிக்கையை வென்ற ‘சங்ஸ்தா’ சீமெந்து கட்டட நிர்மாணப் பணிகளுக்கும், பூச்சு வேலைகளுக்கும், கொங்கிaட் வேலைகளுக்கும் தரம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

மீண்டும் சந்தைக்கு வந்துள்ள ஹோல்சிம் சங்ஸ்தா சீமெந்தை புத்தளத்திலுள்ள ஹோல்சிம் சீமெந்து தொழிற்சாலையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

இந்த அறிமுக நிகழ்வில் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவின் உதவி தலைவர் நலின் கருணாரட்ன கருத்து வெளியிடுகையில், ‘இந்த செயற் திட்டத்தை முன்னெடுப்பதன் மூலம், பிரதான நுகர்வோர் உள்ளம்சங்களை இனங்காண்பதற்கு கம்பனி மிகவும் விஞ்ஞானபூர்வமான வழிகாட்டலை பின்பற்றியிருந்தது.

மேலும், முழு செயற்திட்டமும் முற்கூட்டியே பரிசோதித்து பின்னர் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் சரியான செய்தி பங்குதாரர்களுக்கு சென்றடையும்’ என்றார்.

சீமெந்து துறையில் முன்னோடிகளாக திகழும் சங்ஸ்தா சீமெந்து, கொங்கிaற் அமைத்தலுக்கு, சுவர்களுக்கான கற்களை பதித்தல் மற்றும் சுவர் பூச்சுக்களை மேற்கொள்ளல் போன்ற நடவடிக்கைகளுக்கு உகந்த, அதிசிறந்த சீமெந்தாக நிபுணர்களின் மூலம் தெரிவு செய்யப்படுகிறது. ஹோல்சிம் வாடிக்கையாளர்கள் சங்ஸ்தா சீமெந்தை பயன்படுத்துவது தொடர்பில் பெறுமதி சேர்க்கப்பட்ட தொழில்நுட்ப சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

ஹோல்சிம் புத்தாக்க மற்றும் ஆப்ளிகேஷன் நிலையத்தின் மூலமாக சங்ஸ்தா சீமெந்தை சிறப்பான முறையில் பயன்படுத்துவது தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. பிரதான ஒப்பந்தக்காரர்கள் மற்றும் சுயாதீன கட்டட நிர்மாணிப்பாளர்களை இந்த வசதிகளை அனுபவிக்குமாறு ஹோல்சிம் ஊக்குவிக்கிறது.

ஹோல்சிம் (லங்கா) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிப்பே றிச்சர்ட் கருத்து வெளியிடுகையில் :-

‘இலங்கையின் நிர்மாணத் துறை மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு மற்றும் வர்த்தக மற்றும் தனிநபர் சார் கட்டமைப்புகளுடன் புதிய பரிணாமத்தை நோக்கி பயணிக்கையில், முக்கிய பங்களிப்பை ஹோல்சிம் வழங்குவதையிட்டு மிகவும் பெருமையடைகிறது’ என்றார்.

ஹோல்சிம் இதுவரையில் மத்தளை விமான நிலையம் மற்றும் கிண்ணியா பாலம் ஆகியவற்றை நிர்மாணிப்பதில் தனது பங்களிப்பை வழங்கியுள்ளது. இதன் மூலம் தேசத்தின் நம்பிக்கையை வென்றுள்ளது. கடந்த தசாப்த காலத்தின் நம்பிக்கையை வென்ற சீமெந்து விநியோகத்தர் எனும் வகையில், ஹோல்சிம் மக்களின் இதயத்திலும், மனதிலும் உறுதியான இடத்தை பிடித்துள்ளது.

இலங்கையில் மூன்றில் ஒரு இல்லம் ஹோல்சிம் தயாரிப்பு பயன்படுத்தப்படுகிறது. சந்தையில் காணப்படும் சிறந்த பரிந்துரையாக இது அமைந்துள்ளது.

சர்வதேச ரீதியில் ஹோல்சிம் தயாரிப்புகள் 100 ஆண்டுகளுக்கு மேலாக உற்பத்தி செய்து விநியோகித்த கீர்த்தி நாமத்தை தன்னகத்தே கொண்டுள்ளதுடன், சந்தை முன்னோடியாகவும் திகழ்கிறது. ஹோல்சிம் மூலமாக உறுதி செய்யப்பட்ட தர உத்தரவாதம் வழங்கப்படுகிறது.

உற்பத்தி இடம்பெறும் வெவ்வேறு கட்டங்களில் இதன் தரம் பரிசோதிக்கப்படுவதுடன், அனைத்து சந்தர்ப்பங்களிலும் உயர் தரம் உறுதி செய்யப்படுகிறது.

இந்த செயற்பாடுகளை உறுதி செய்யும் வகையில், இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் மூலம் ஷிழிஷி தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஹோல்சிம் சங்ஸ்தா சீமெந்து இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஒரே சீமெந்து என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி