ஹிஜ்ரி வருடம் 1434 ரபீஉனில் அவ்வல் மாதம் பிறை 25
விஜய வருடம் தை மாதம் 14ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, JANUARY , 27 2014
வரு. 82  இல. 23
 

தலைநகரில் குடியரசு தின விழா

தலைநகரில் குடியரசு தின விழா

நாட்டின் 65வது குடியரசு தின விழா தலைநகர் டெல்லியில் லோகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டை காக்க உயிர்நீர்த்த வீரர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் மரியாதை செலுத்தினார். டெல்லி அமைர்ஜவான் ஜோதி நினைவிடத்தில் அவர் உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அமர்ஜவானில் உள்ள பதிவேட்டில் மன்மோகன் சிங் கையெழுத்திட்டார்.

46 படைவீர்கள் புடைசூழ விழாவிற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வருகை தந்தார். விழா மேடைக்கு வந்த குடியரசுத் தலைவரை பிரதமர் மன்மோகன் வரவேற்றார். பின்னர் மூவர்ண தேசியக் கொடியை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஏற்றி வைத்தார். விழாவில் ஜப்பான் பிரதமர் சின்சோ அபே சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.

தேசியக் கொடியை ஏற்றி வைத்த குடியரசுத் தலைவருக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. தளபதி மஜூம்தார் தலைமையில் டி90 தாங்கிப் படை அணிவகுப்பு நடைபெற்றது. கேப்டன் பியூஷ் பாண்டே தலைமையில் டி-72 தாங்கி படை அணி வகுத்து சென்றது.

பார்க் களத்தில் கண்ணிவெடிகளை அகற்றும் ஆற்றல் கொண்டவை டி-72 தாங்கிகள் கப்டன் தர்மிந்தர் சிங் தலைமையில் பஞ்சாப் படை பிரிவினர் அணிவகுத்து சென்றனர். சுபேதார் டி. ராஜா தலைமையில் இராணுவ இசைக் குழுவினர் அணிவகுத்து சென்றனர்.

ஆத்திரப் பிரதேச ஆய்வாளர் பிரசாத் பாவுக்கு அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது. பிரசாத் பாவ் வீர மரணத்தை பாராட்டி குடியரசுத் தலைவர் இந்த விருதை வழங்கினார். ஆய்வாளர் பிரசாத் பாவு கடந்த ஏப்ரலில் மாவோயிஸ்ட்டுகள் உடனான மோதலில் வீரமரணம் அடைந்தார். பிரசாத் பாவு சார்பில் அவரது தந்தை அசோக சக்ரா விருதை பெற்றுக்கொண்டார். 65 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு முப்படைகளின் எழுச்சி அணிவகுப்பு நடைபெற்றது. எல்லை பாதுகாப்பு படையினர் ஒட்டகப் படை மிடுக்காக அணிவகுத்துச் சென்றது. ஆய்வாளர் ஃபூல்சிங் ராம் ராணா தலைமையில் ஒட்டகப் படை அணிவகுப்பு நடைபெற்றது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி