ஹிஜ்ரி வருடம் 1434 ரபீஉனில் அவ்வல் மாதம் பிறை 25
விஜய வருடம் தை மாதம் 14ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, JANUARY , 27 2014
வரு. 82  இல. 23

டொலர் நோட்டுகளுக்காக செயற்பட்டு வந்த புலம்பெயர்ந்த தமிழர் பிளவுபட்டுள்ளார்கள்

டொலர் நோட்டுகளுக்காக செயற்பட்டு வந்த புலம்பெயர்ந்த தமிழர் பிளவுபட்டுள்ளார்கள்

தாங்கள் பிறந்த தாய்நாடான இலங்கைக்கு பல வகையிலும் துன்புறுத்தல்களை செய்து வந்த, இங்கிருந்து புலம்பெயர்ந்த தமிழ்க் குழுக்களிடையே தங்களுக்கு கிடைக்கும் கோடிக்கணக் கான பணத்தை பங்கு போட்டுக் கொள்வதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் இன்று பல பிரிவுகளாக பிரிந்து சீர்குலைந்து போயுள்ளன.

2009ம் ஆண்டில் பயங்கரவாத யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கையில் உள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு விமோசனத்தை பெற்றுக் கொடுக்க வேண்டுமென்பதற்காகவும் யுத்தக்குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆயுதப் படை வீரர்களை தண்டிப்பதற்கு தாங்கள் கூட்டாக செயற்பட வேண்டு மென்ற நோக்கத்துடனும் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்று சேர்ந்து செயற்பட ஆரம்பித்தார்கள்.

பிரிட்டனின் தமிழர் அமைப்பு, புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளில் உருவாகிவரும் ஊழல் மோசடி காரணமாக உலகளாவிய தமிழர் பேரவையில் இருந்து விலகிக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது. உலகளாவிய தமிழர் பேரவை உலகெங்கிலும் உள்ள 14 நாடுகளில் இருக்கும் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து செயற்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் உலகளாவிய தமிழர் பேரவைக்கு கிடைக்கும் சன்மானப் பணம் மற்றும் நிதி உதவிகளை இவ்வமைப்பு தங்களின் அங்கத்துவ அமைப்புகளுக்கு சரிசமமாக பிரித்து, இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான பிரசார பணிகளுக்கான செலவுக்காக கொடுத்து வந்தது.

உலகளாவிய தமிழர் பேரவைக்கு பொறுப்பாக இருக்கும் தலைவர்கள் சுயநல நோக்கத்துடன் தங்களுக்கு கிடைக்கும் பணத்தை சூறையாடி வருவதனால், புலம்பெயர்ந்த தமிழர் அமைப்பு இன்று பணம் இன்றி ஸ்தம்பித நிலை அடைந்திருக்கிறது என்பதனால், தங்களுக்கு தொடர் ந்தும் இவ்வமைப்பில் இருந்து செயற்பட முடியாதென்று பிரிட்டிஷ் தமிழர் பேரவை அதிலிருந்து விலகியுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளில் ஏற்பட்டி ருக்கும் இந்த ஒற்றுமையின்மையும் பிளவுகளும் இலங்கை அரசாங்க த்திற்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்திருக் கிறதென்று ஒரு சர்வதேச அரசியல் விமர்சகர் கூறுகிறார்.

புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் அவ்வமைப்புகளின் பணிகளுக்கு தங்கள் சொந்தப் பணத்தை செல விடுவதில்லை. அவர்கள் சில வெளிநாடுகளினதும் உதவி வழங்கும் அமைப்புகளினதும் பொம்மைகளாக செயற்பட்டு வருவதனால், இந் நாடுகளும் இவ்வமைப்புகளும் கொடுக்கும் பணத்தை வைத்தே இலங்கைக்கு எதிரான போலிப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களில் பெரும்பாலானோர் தாங்கள் செய்யும் தொழிலுக்கு மேலதிகமாக புலம்பெயர்ந்த அமைப்புகளை வைத்துக் கொண்டு இலட்சக்கணக்கான பணத்தை சூறையாடி வருவதனால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

ஒருசிலர் பணத்தை சூறையாடி சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கும் போது, நாம் மாத்திரம் எவ்வித பயனும் இன்றி ஏன் புலம்பெயர்ந்த அமைப்பு களில் இருக்க வேண்டுமென்ற எண்ணத்தில் பல புலம் பெயர்ந்த தமிழர் கள், இவ்வமைப்புகளின் அரசியல் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி, இலங் கைக்கு எதிரான போலிப் பிரசாரங்களில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்வ தென்றும் தீர்மானித்திருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளார்கள்.

பொதுவாக மார்ச் மாதங்களில் வருடந்தோறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உச்சிமாநாடு நடைபெறும் போது பல மாதங் களாக முடங்கிக் கிடக்கும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் செயற்பட ஆரம்பிக்கின்றன. இலங்கைக்கு எதிராக சில சர்வதேச அமைப்புகளும், அரசசார்பற்ற அமைப்புகளும் புலம்பெயர்ந்த தமிழர்களை தங்கள் கையாட்களாக பயன்படுத்தி தங்களின் இலங்கைக்கு எதிரான செயற் பாட்டினை நிறைவேற்றுவதற்கு முனைகின்றன.

தங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கும் அமைப்புகளிடம் இருந்து ஆயிரக் கணக்கான டொலர்களைப் பெறும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்பு களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மனைவி மக்களை லண்டன், ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து ஜெனீவா நகருக்கு அழைத்து வந்து அங்குள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் சுமார் ஒரு மாத காலம் தங்கியிருந்து ஆடம்பர வாழ்க்கையை நடத்தி மகிழ்ச்சியில் மூழ்குகிறார்கள்.

இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் நாட்களில் ஜெனீவாவில் உள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை தலைமையகத்திற்கு வெளியில் ஓரிரு மணித்தியாலங்கள் பதாகைகளையும் சுலோக அட் டைகளையும் தாங்கி இலங்கைக்கு எதிரான துர்பிரசாரங்களை செய்து, இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் தங்கள் கடமை முடிந்துவிட்ட தென்று கொடிகளையும், சுலோக அட்டைகளையும் மடித்துக் கொண்டு தங்கள் ஹோட்டல்களுக்கு சென்று அங்கு மதுபோதையில் மூழ்கி மகிழ்ச்சியாக இருப்பதுண்டு.

இவ்விதம் ஒரு மாத காலம் மற்றவர்கள் கொடுக்கும் பணத்தில் ஜெனீவா நகரில் தங்கள் விடுமுறையை கழித்துவிட்டு இந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளுக்கு திரும்பிய பின்னர் இலங்கை யைப் பற்றியோ, இங்குள்ள தமிழர்களைப் பற்றியோ, சிந்திக்காமல் தங்களுடைய சுகபோக வாழ்க்கையை நிம்மதியாக கழிப்பதுண்டு. மீண்டும் மார்ச் மாதம் அடுத்தாண்டில் வரும்போது இதே துரோகத்தை இலங்கைக்கு எதிராக செய்கிறார்கள்.

உலகளாவிய தமிழர் பேரவை இன்று பிளவுபட்டிருப்பதனால், இனிமேலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்ந்தும் தங்களின் போலி நாடகத்தை ஜெனீவாவில் மேடையேற்ற முடியாத நிலை உருவாகி வருகிறது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி