ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 01
நந்தன வருடம் தை மாதம் 30ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY, 12, 2013
வரு. 81 இல. 37
 

ஆப்கானிலிருந்து அமெ. படையின் வெளியேற்றம் ஆரம்பம்

ஆப்கானிலிருந்து அமெ. படையின் வெளியேற்றம் ஆரம்பம்

அமெரிக்கப் படை ஆப்கானில் இருந்து வெளியேறும் நடவடிக்கையை தரைவழியாக ஆரம்பித்துள்ளது. இதன் முதல் கட்டமாக ஆப்கானில் இருக்கும் அமெரிக்க இராணுவ தளபாடங்கள் பாகிஸ்தான் ஊடாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஆப்கானிலிருந்து கப்பலில் கொண்டு செல்வதற்காக 50 கண்டைனர் வண்டிகள் பாகிஸ்தான் ஊடாக கொண்டு செல்லப்பட்டதாக ஆப்கானுக்கான அமெரிக்கப் படையின் பேச்சாளர் மார்கஸ் ஸ்பாட் குறிப்பிட்டார். அமெரிக்க இராணுவ தளபாடங்களை ஆப்கானிலிருந்து வெளியேற்றும் பிரதான தரைவழி மார்க்கமாக பாகிஸ்தான் அமைந்துள்ளது.

ஆப்கானில் இருக்கும் வெளிநாட்டுப் படை 2014 ம் ஆண்டு அங்கிருந்து முழுமையாக வெளியேற வுள்ளது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிலுள்ள அமெரிக்க விமானப்படை தளத்திலிருந்து 25 கண்டைனர் வண்டிகள் பாகிஸ்தானை வந்தடைந்துள்ளது. இவைகளில் கனரக இராணுவ தளபாடங்கள் இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு தரப்பு உறுதி செய்துள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி