ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 01
நந்தன வருடம் தை மாதம் 30ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY, 12, 2013
வரு. 81 இல. 37
 

உலகின் மிகப்பெரிய முதலை இறந்தது

உலகின் மிகப்பெரிய முதலை இறந்தது

பிலிப்பைன்ஸில் பிடிபட்ட உலகின் மிகப்பெரிய உப்பு நீர் முதலை இறந்துள்ளது.

கடந்த ஒரு மாதமாக உணவு உண்ண மறுத்துள்ள இந்த முதலை வயிறு உப்பிய நிலையில் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஒரு மனிதனை கென்றதைத் தொடர்ந்து தெற்கு பிலிப்பைன்ஸிலுள்ள மார்ஷி புனவான் கிராம மக்கள் ஒன்றிணைந்து இந்த முதலையை பிடித்தனர். 6.4 மீற்றர் (21 அடி) நீளமும் 1,074 கிலோ கிராம் எடையும் கொண்ட இந்த முதலை உலகில் இதுவரை பிடிபட்ட மிகப்பெரிய உப்பு நீர் முதலையாக கிண்ணஸ் புத்தகத்தை இடம்பிடித்தது.

இந்த முதலைக்காக விசேட பூங்கா அமைக்கப்பட்டு அங்கு அது காட்சிக்காக வைக்கப்பட்டது. இதன் கிராம மூலம் வருவாயை ஈட்டி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இறந்த முதலையின் உடலை பதப்படுத்தி வைக்க பிலிப்பைன்ஸ் வனவிலங்குத் துறை திட்டமிட்டுள்ளது.

எனினும் மேற்படி முதலை இறந்ததைத் தொடர்ந்து உலகின் மிகப்பெரிய உப்பு நீர் முதலை என்ற பெருமை மீண்டும் அவுஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந் திலுள்ள பண்ணையில் இருக்கும் முதலை வென்றுள்ளது. இந்த முதலை 5.48 மீற்றர் (17 அடி) நீளம் கொண்ட தாகும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி