ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 01
நந்தன வருடம் தை மாதம் 30ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY, 12, 2013
வரு. 81 இல. 37
 

காசாவில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வாக்காளர் பதிவு ஆரம்பம்

காசாவில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வாக்காளர் பதிவு ஆரம்பம்

பலஸ்தீனின் மேற்குக் கரை மற்றும் காசா பகுதியில் நீண்ட இடை வெளிக்கு பின்னர் பலஸ்தீன தேர்தல் அலுவ லகத்தால் வாக்காளர் பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பலஸ்தீனின் காசாவை ஆளும் ஹமாஸ் மற்றும் மேற்குக் காரையை ஆளும் பதா அமைப்புகளுக்கு இடையிலான முறுகல் நிலை காரணமாக அங்கு வாக்காளர் பதிவு பல ஆண்டுக ளாக முன்னெடுக்கப்படவில்லை.

இந்நிலையில் பிளவை முடிவுக்குக் கொண்டுவரும் முதல் கட்டமாக மேற்குக்கரை மற்றும் காசாவில் வாக்காளர் பதிவு ஆரம்பிக்கப்படுவதாக பலஸ்தீனத் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஹன்னா நாஸர் அறிவித்துள்ளார்.

ஹமாஸ் மற்றும் பதா அமைப்புகளுக்கு இடையில் சமரச பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே வாக்காளர் பதிவு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி காசாவிலுள்ள சுமார் 350,000 அங்கீகரிக்கப்பட்ட வாக்காளர்கள் தமது வாக்குப் பதிவை மேற்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பெரும்பாலானோர் முதல் முறையாக வாக்குப் பதிவை மேற்கொள்ளவுள்ளனர். ஒருவார காலப் பகுதியில் 581 பேரைக் கொண்டு காசாவிலுள்ள வாக்காளர்களை பதிவுசெய்ய பலஸ்தீன தேர்தல் அலுவலகம் திட்டமிட்டுள்ளது.

காசாவில் கடந்த 2006ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் வாக்காளர் விபரம் பதியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி