ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 01
நந்தன வருடம் தை மாதம் 30ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY, 12, 2013
வரு. 81 இல. 37

மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தினால் பொருளாதாரம் பலவீனமடைவதை தடுக்கலாம்

மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தினால் பொருளாதாரம் பலவீனமடைவதை தடுக்கலாம்

நாட்டில் மின்சாரத் தட்டுப்பாடு இன்று ஒரு பெரும் தேசிய பிரச் சினையாக உருவாகியிருக்கிறது. பாவனையாளர்களுக்கு தேவை யான அளவு மின்சாரத்தை நீர்த்தேக்கங்கள் மூலம் செயற் படும் உருளைகளின் மூலம் பெறமுடியாத காரணத்தினால் இலங்கை மின்சார சபை தனது அனல் மின்சார நிலையங்களை செயற்படுத்தி வருகின்றது.

இந்த அனல் மின்சார நிலையங்களை இயக்குவதற்கு பெருமளவு எரி பொருளை பயன்படுத்த வேண்டியிருப்பதனால் இலங்கை மின்சார சபை பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கியிருக்கின்ற இன்றைய காலகட் டத்தில் எங்கள் நாட்டில் உள்ள சில சமூக விரோதிகள் மின்சாரத்தை கொக்கி போட்டு எடுத்து மின்சார சபையின் நஷ்டத்தை மேலும் அதிகரித்து வருகிறார்கள்.

2016ம் ஆண்டில் நாடெங்கிலும் நகரங்களிலும் பின்தங்கிய கிராமங்களி லும் உள்ள சகல வீடுகளுக்கும் மின்சார இணைப்பை பெற்றுக் கொடுக்கும் உன்னத நோக்கத்துடன் செயற்பட்டு வரும் அரசாங்கத் தின் திட்டங்களை சீர்குலைக்கக்கூடிய வகையில் இந்த சமூக விரோ திகள் செயற்பட்டு வருவது உண்மையிலேயே வேதனையை அளிக் கிறது.

மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் மின்சார கம்பங்களை நாட்டி மின் விநியோகத்தை பெற்றுக் கொடுப்பதற்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தினால் மலையகத்தில் உள்ள பின்தங்கிய கிராமங்களுக்கும், பெருந்தோட்டங்களுக்கும் சூரிய சக்தியின் மூலம் மின்சாரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கும் இலங்கை மின்சார சபை இப்போது பெருமளவு பணத்தை முதலீடு செய்து வருகின்றது.

இவற்றுடன் வீதி விளக்குகளையும் எரிப்பதற்காக மின்சார சபை தனது வருமானத்தின் பெரும்பகுதியை செலவிட்டு, சமூகப் பணியையும் சிறந்த முறையில் நிறைவேற்றி வருகின்றது.

நாட்டின் தேசிய மின்சார உற்பத்தியை பெருக்குவதற்காக நுரைச்சோலையில் நிலக்கரியை மூலப் பொருளாகக் கொண்டு மின்சார உற்பத்தி செய்யும் அனல் மின்சார நிலையமொன்றையும் இப்போது அரசாங்கம் இயக்கி வருகின்றது. இதனுடன் மேல்கொத்மலையில் உள்ள மின்சார உற்பத்தி நிலையம் இப்போது மின்சார உற்பத்தி செய்யும் பணியை ஆரம்பித்திருக்கின் றது.

இவை அனைத்தையும் அரசாங்கம் மக்களுக்கு பணியாற்ற வேண்டுமெ ன்ற உன்னத நோக்கத்துடன் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலும் மின்சார உற்பத்திக்கு முதலிடத்தை கொடுத்து வருகின்றது. மின்சார த்தை கொக்கி போட்டு திருட்டுத்தனமாக பெறுபவர்கள் கண்டுபிடிக் கப்பட்டால் அவர்களுக்கு சட்டப்பூர்வமான தண்டனையும் அபராதத் தொகை வழங்கப்படுவதுடன் இனிமேல் சம்பந்தப்பட்டவர்களுக்கு வாழ் நாள் பூராவும் மின்சார இணைப்பு கொடுக்கப்பட மாட்டாதெ ன்று முன்னாள் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க அறிவித்துள்ளார்.

அமைச்சரின் உத்தரவின் பேரில் இந்த புதிய சட்டப்பிரமாணங்கள் நடை முறைப்படுத்தப்படும் போது ஒரு தடவை சட்டவிரோதமாக மின்சார இணைப்பை பெற்று இலங்கை மின்சார சபையை ஏமாற்றியவர்கள் வாழ் நாள் பூராவும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர்களின் பெயரில் மீண்டும் மின்சார இணைப்பு வழங்கப்பட மாட்டாதென்று அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இவ்விதம் சட்டவிரோதமாக மின்சார இணைப்பை பெறுவதனால் இல ங்கை மின்சார சபை இதுவரையில் 6 ஆயிரம் மில்லியன் ரூபா நஷ் டமடைந்துள்ளது. இவர்கள் தேசிய ரீதியில் உற்பத்தி செய்யும் மின் சாரத்தில் 4 சதவீதத்தை இவ்விதம் களவாடுகிறார்கள் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதே போக்கில் சென்றால் வருடமொன்றுக்கு 60 ஆயிரம் மில்லியனுக் கும் அதிகமாக நட்டம் ஏற்படும். கடந்த ஆண்டில் 2600 பேர் சட்ட விரோதமாக கொக்கி போட்டு மின்சாரத்தைப் பெற்றிருக்கிறார்கள். ஆயினும் இவர்கள் மீது நீதிமன்றங்கள் விதித்த அபராத கட்டணங் கள் மூலமாக அரசாங்கத்திற்கு 232 மில்லியன் ரூபா கிடைத்திருக்கி றது.

கிராமப்புறங்களில் மின்சாரம் இவ்விதம் சட்டவிரோதமாக பெறப்படுவத னால் கடந்த ஆண்டில் மின்சாரம் தாக்கி 25 பேர் மரணித்தும் இருக் கிறார்கள். சமீபத்தில் இவ்விதம் சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற எத்தனித்த ஒரு தாய் மற்றும் தந்தை அவர்களின் இரண்டரை வயது பிள்ளையும் மரணித்தமை குறிப்பிடத்தக்கது.

மின்சாரம், குடிநீர், வைத்திய வசதிகள், கல்வி ஆகியன மனிதனின் அடி ப்படை தேவைகளாகும். இவை அனைத்தையும் செயற்படுத்துவதில் அரசாங்கம் தனது முழுக் கவனத்தையும் செலுத்திவரும் இன்றைய சூழ்நிலையில் சில சமூக விரோதிகள் அரசாங்கத்தின் இந்த மக்கள் சேவைக்கு தீங்கிழைப்பதற்கு எடுத்துவரும் நடவடிக்கைகள் எங்க ளால் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஒரு நாடு வளம்பெற்று பொருளாதாரத் துறையில் முன்னேற்றமடைவத ற்கு அந்நாட்டின் சிறந்த நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், பாலங் கள் நவீன கட்டிடங்கள் மற்றும் சகல வசதிகளையும் உடைய பாடசா லைகள் மற்றும் ஆஸ்பத்திரிகள் அமைக்கப்படுவது அவசியமாகும். இவை அனைத்திற்கும் உயிரூட்டக்கூடிய பங்களிப்பை மின்சாரம் பெற்றுக் கொடுக்கிறது. மின்சார தடை ஏற்பட்டால் அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி தடைப்பட்டுவிடும். ஆசியாவிலேயே 24 மணி நேரமும் மின்சார விநியோகம் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் ஒரே ஒரு தேசமாக இலங்கை இருந்து வருகின்றது.

இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 10 முதல் 12 மணித்தியாலங்கள் மின்சாரத் தடை அமுலில் இருந்து வருகின்றது. பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இவ்விதம் மின்சார தடைகள் அமுலாக்கப்படுவத னால் அந்நாட்டு மக்கள் பெருமளவு இன்னல்களை எதிர்நோக்குகி றார்கள்.

இலங்கையில் மாத்திரமே வரட்சி காலத்திலும் மற்றெல்லா காலத்திலும் மின்சாரம் தங்குதடையின்றி பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்த கிடைப்பதற்கரிய மின்சாரத்தை திருட்டுத்தனமாக பெறும் தேச த்துரோக சக்திகளை நாம் இனிமேலும் தண்டிக்காமல் இருப்பது நாட் டுக்கு செய்யும் பெரும் துரோகமாகும். எனவே, மின்சாரத்தை சட்ட விரோதமாக பெறுபவர்களை கண்டுபிடித்து தயவுதாட்சண்யம் இன்றி தண்டிப்பது மிகவும் அவசியமாகும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி