ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 01
நந்தன வருடம் தை மாதம் 30ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY, 12, 2013
வரு. 81 இல. 37
 

துனீஷியாவின் அரபு எழுச்சி

துனீஷியாவின் அரபு எழுச்சி

டிசம்பர் 2010: தெருவோர வியாபாரி பவ்சிசி தீக்குளித்துக் கொண்டதை அடுத்து அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நாடு பூராகவும் பரவின. பவ்சிசி தீக்காயங்களுடன் மருத்துவமனையில் மரணமடைந்தார்.

ஜனவரி 2011: ஆர்ப்பாட்டம் தீவிரமடைய மூன்று தசாப்தங்கள் நாட்டை ஆண்ட ஜனாதிபதி சின் அல் அப்தின் பென் அலி பதவி விலகி சவூதிக்கு தப்பிச் சென்றார்.

மார்ச் 2011: இடைக்கால ஜனாதிபதியால் நிபுணர்களைக் கொண்ட அரசு அமைக்கப்பட்டது.

ஒக்டோபர் 2011: அரபு எழுச்சியின் முதல் பொதுத் தேர்தல் துனீஷியாவில் இடம்பெற்றது.

டிசம்பர் 2011: முன்னாள் அரச எதிர்ப்பாளரான மொன்கப் மர்சுக்கி ஜனாதிபதியாக தெரிவானதோடு இஸ்லாமியவாத கட்சியான அன்ஹதாவின் ஹமதி ஜபலி பிரதமராக நியமனமானார்.

மே 2012: மதுபான விற்பனை தொடர்பில் சலபி இஸ்லாமியவாதிகள் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டனர்.

ஜூன் 2012: 2011இல் ஆர்ப்பாட்டக்காரர்களை கொன்ற குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி பென் அலிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் அவரை நாடுகடத்த சவூதி மறுத்தது.

பெப்ரவரி 2013: முன்னணி எதிர்க்கட்சி தலைவர் சொக்ரி பிளைடி சுட்டுக்கொல்லப்பட்டார்; நிபுணர்களைக் கொண்ட அரசை அமைக்க பிரதமர் அறிவித்தார். பிரதமரின் ஆளும் கட்சியான அன்ஹதா இந்த முடிவுக்கு எதிர்ப்பு வெளியிட்டது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி