|
||
ஆப்கானிலிருந்து அமெ. படையின் வெளியேற்றம் ஆரம்பம்
அமெரிக்கப் படை ஆப்கானில் இருந்து வெளியேறும் நடவடிக்கையை தரைவழியாக ஆரம்பித்துள்ளது. இதன் முதல் கட்டமாக ஆப்கானில் இருக்கும் அமெரிக்க இராணுவ தளபாடங்கள் பாகிஸ்தான் ஊடாக வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆப்கானிலிருந்து கப்பலில் கொண்டு செல்வதற்காக 50 கண்டைனர் வண்டிகள் பாகிஸ்தான் ஊடாக கொண்டு செல்லப்பட்டதாக ஆப்கானுக்கான அமெரிக்கப் படையின் பேச்சாளர் மார்கஸ் ஸ்பாட் குறிப்பிட்டார். அமெரிக்க இராணுவ தளபாடங்களை ஆப்கானிலிருந்து வெளியேற்றும் பிரதான தரைவழி மார்க்கமாக பாகிஸ்தான் அமைந்துள்ளது. ஆப்கானில் இருக்கும் வெளிநாட்டுப் படை 2014 ம் ஆண்டு அங்கிருந்து முழுமையாக வெளியேற வுள்ளது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிலுள்ள அமெரிக்க விமானப்படை தளத்திலிருந்து 25 கண்டைனர் வண்டிகள் பாகிஸ்தானை வந்தடைந்துள்ளது. இவைகளில் கனரக இராணுவ தளபாடங்கள் இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு தரப்பு உறுதி செய்துள்ளது. |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |