ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 01
நந்தன வருடம் தை மாதம் 30ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY, 12, 2013
வரு. 81 இல. 37

பொதுநலவாய மாநாடு இலங்கையில்
நடைபெறுவது உறுதி

கமலேஷ் சர்மா கொழும்பில் ஊர்ஜpதம்

* ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆராய்வு

* ஜனாதிபதியையும் சந்தித்து விரிவான பேச்சு

பொது நலவாய அமைப் பின் உச்சிமாநாடு இலங் கையில் நடத்தப்படுமென் பதை அந்த அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா நேற்று ஊர்ஜிதம் செய்தார். அதேநேரம், நேற்று பிற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.உத்தியோகபூர்வ விஜயம் மேற் கொண்டு லண்டனிலிருந்து இலங்கை வந்திருக்கும் கமலேஷ் சர்மா, நேற்று உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும் செயலணி குழுத் தலைவர்களை சந்தித்து உரையாடிய தன் பின்னர் இதனை ஊர்ஜிதம் செய்ததுடன் மாநாட்டுடன் சம்பந்தப் பட்ட இடங்களையும் தீர்மானித்ததாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரொட்னி பெரேரா தெரிவித்தார்.

விவரம் »

விவசாய உற்பத்திகளின் பெறுமதியைச் சேர்க்கும் தொழில் முயற்சிகளையும், வெளிநாட்டுச் சந்தைக்கு பிரவேசிப்பதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்காக அறுவடைக்குப் பிற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களையும், ஏற்றுமதி அபிவிருத்தி சபையையும் மறுசீரமைத்துப் பலப்படுத்துவேன்.

- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதிக்கு இன்று கோலாகல வரவேற்பு

* நகரெங்கும் தோரணங்கள்; தேசியக் கொடிகளால் அலங்கரிப்பு

* நிறைகுடம் வைத்து தமிழ் கலாசாரத்துடன் அழைத்துவர ஏற்பாடு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இரண்டு நாள் விஜயமாக இன்று யாழ். குடாநாட்டுக்கு செல்கிறார்.யாழ்ப்பாணத்தில் இன்றும் நாளையும் தங்கியிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் யாழ். மாவட்ட மக்களின் நலன்கருதி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பல்வேறு பாரிய அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

விவரம் »
 

பரிசுத்த பாப்பரசர் திடீர் இராஜினாமா

பரிசுத்த பாப்பரசர் 16 ஆம் ஆசிர்வாதப்பர் இம்மாத இறுதியில் இராஜினாமா செய்வ தாக நேற்று திடீரென அறிவித்துள்ளார். 85 வயதில் தொடர்ந்து பணியில் நீடிக்க முடி யாது என அவர் அறி வித்துள்ளார்.பாப்பரசர் இரண்டா வது ஜோன் போல் மரணமடைந்ததைத் தொடர்ந்து கடந்த 2005 ஆம்ஆண்டில் அவர் பாப்பரசராக பொறுப் பேற்றார். இந்நிலையில் பாப்பரசர் ஒருவர் பதவி விலகியது குறித்து நவீன வரலாற்றில் பதியப்படவில்லை. இதனால் வரலாற்றில் இது முதல் தடவையாக பதிவாகவுள்ளது. பாப்பரசர் ஒருவர் இறந்த பின்னரே ஆட்சி பீடத்திற்கு நியமிக்கப்படுவது சம்பிரதாயமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத் தக்கது.

விவரம் »

கொழும்பு மெனிங் சந்தையை பேலியகொடைக்கு மாற்ற தீர்மானம்

25 ஏக்கரில் நிர்மாணம் 1357 மில்.
ரூபா செலவு

கொழும்பு மெனிங்க் காய்கறி மற்றும் பழவகை மொத்த விற் பனைச் சந்தையை சகல வசதிகளையும் கொண்ட சந்தையாக பேலியாகொட பிரதேசத்தில் நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் மேற் கொண்டுள்ளது.பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் பேலியாகொட மீன் சந்தைக்கு அருகிலுள்ள 25 ஏக்கர் நிலப்பரப்பில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இச் சந்தை நிர்மாணிக்கப்படவிருக்கின்றது.

விவரம் »
 


இலங்கைக்கு வருகை தந்துள்ள பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர் களை சந்தித்துப் பேசினார். இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
(படம்: சுதத் சில்வா)