ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 01
நந்தன வருடம் தை மாதம் 30ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY, 12, 2013
வரு. 81 இல. 37
 

இலங்கையில் மகளிரின் உற்பத்திப் பொருட்களை உலக தரத்துக்கு உயர்த்தும் முயற்சியில் SABAH  சங்கம்

இலங்கையில் மகளிரின் உற்பத்திப் பொருட்களை உலக தரத்துக்கு உயர்த்தும் முயற்சியில் SABAH  சங்கம்

மைக்றோ அடிப்படையிலான உணவு தயாரிப்பாளர்களை அபிவிருத்தி செய்வதே SABAH  சங்கம் பிரதான கொள்கையாகும். இலங்கையின் உண்மையான ருசியை உலகுக்கு அறிமுகம் செய்து இந்த திறமைமிகு தொழில் முயற்சியாளர்களை அபிவிருத்தி செய்வதே நோக்கமாகும்.

வீட்டு மட்டத்திலான உணவு உற்பத்தியாளர்களுக்காக இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட மகளிருக்கு உள்ளூர், சர்வதேச பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்த சபா SABAH  சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வீட்டு மட்டத்திலான வேலையாட்களின் சார்க் வர்த்தக சங்கம் இலங்கை மகளிர் உணவு தயாரிக்கும் ஒரு வலையமைப்பாகும். இதற்கு சார்க் அபிவிருத்தி நிதியம் நிதி வழங்குகிறது. SABAH  இலங்கையில் செயற்படும் ஓர் உள்ளூர் நிறுவனமாகும். இந்தியாவைத் தவிர்த்து 7 சார்க் நாடுகளில் இச்சங்கம் சிறப்பாக பணியாற்றி வருகிறது.

இந்த நிகழ்ச்சி அரச நிறுவனங்களான தென் அபிவிருத்தி அதிகார சபை, கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை (மேல்மாகாணம்) ஆகியவற்றின் ஆதரவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஊடாகவும், களுத்துறை மாவட்ட ‘விதாதா’ அலகுடனும், களுத்துறை மாவட்ட செயலகத்தின் ஊடாகவும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

SABAH  சங்கம் இலங்கையில் 10 மாவட்டங்களில் 1000 மகளிரை உள்ளடக்கிய வண்ணம் செயற்படுகின்றது. தெரிவு செய்யப்பட்ட இந்த மகளிருக்கு அறிவும், திறமையும், விசேடமாக வடிவமைக்கப்பட்ட உள்ளூர் சர்வதேச பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

உணவு தொழில்நுட்பம், முகாமைத்துவம், சந்தைப்படுத்தல், கணக்கீடு செய்தல், பொதி அமைத்தல் ஆகிய துறையில் பயிற்சிகள் வழங்கப்படுவதாக இலங்கை SABAH  சங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சொபத்தியா எதிரிசிங்க தெரிவித்தார்.

சில மகளிர் குழுக்கள் ஏற்கனவே இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவர்கள் உணவு, தொழில்நுட்பம், முகாமைத்துவம், பொதி அமைத்தல் துறைகளில் 25 நாட்களுக்கு பயிற்சி பெறுவர் என்றும் அவர் தெரிவித்தார்.

SABAH  சங்கம், தெரிவு செய்யப்பட்ட மகளிர் உற்பத்தியாளர்களைக் கொண்டு உற்பத்தியான பொருட்களை பொதுவான ஒரு பெயரில் உயர் தரத்தை இலக்கு வைத்து சந்தையில் விஸ்தரித்துள்ளது.

இவை நவீன சுகாதார, தர முறைகளில் தயாரிக்கப்பட்டுள்ளன. செயற்கை ரசனைகள், உணவைப் பாதுகாத்து வைக்கும் பொருட்கள், வர்ணங்கள் என்பன இவற்றில் பயன்படுத்தப்படவில்லை. மைக்றோ அடிப்படையிலான உணவு தயாரிப்பாளர்களை அபிவிருத்தி செய்வதே SABAH  சங்கம் பிரதான கொள்கையாகும். இலங்கையின் உண்மையான ருசியை உலகுக்கு அறிமுகம் செய்து இந்த திறமைமிகு தொழில் முயற்சியாளர்களை அபிவிருத்தி செய்வதே நோக்கமாகும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி