ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 01
நந்தன வருடம் தை மாதம் 30ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY, 12, 2013
வரு. 81 இல. 37
 

மௌனம் என்னும் மந்திர மொழி!

மௌனம் என்னும் மந்திர மொழி!

ஒரு விவசாயியின் கைக்கடிகரம், அவன் மாட்டுத்தொழுவத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது தொலைந்து விட்டது. அங்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைத் தேடித் தர சொன்னான். பரிசு கொடுப்பதாகவும் கூறினான்.

சிறுவர்கள் சிறிது நேரம் தேடினார் கிடைக்க வில்லை.விவசாயியிடம் வந்து அதைச் சொன்னார்கள். அவர்களில் ஒரு

சிறுவன், “அய்யா எனக்கு இன்னொரு முறை வாய்ப்பு தருவீர்களா?" என்று கேட்டான்.

“சரி போய்த் தேடு" என்றான் விவசாயி.சற்று நேரத்திற்கெல்லாம் சிறுவன் ஒரு கைக் கடியாரத்துடன் திரும்பினான்.

“மற்றவர்களுக்குக் கிடைக்காத போது உனக்கு மட்டும் எப்படிக் கிடைத்தது?" என்று. கேட்டான் விவசாயி.

சிறுவன் சொன்னான், “மாட்டுத் தொழுவத்தில் சிறிது நேரம் நான் எந்த ஒரு சப்தமும் செய்திடாது மௌனமாகஇருந்தேன். அப்போது கடியாரத்தின் ~டிக் டிக்' சத்தம் எனக்குக் கேட்டது" என்று.

மௌனத்திற்கு என்ன ஒரு பலம் பார்த்தீர்களா? நீங்களும் தினமும் சில நிமி'ங்கள் மௌனமாக இருக்கப் பழகினால்,மனோ பலம் அடைவீர்கள்…

வார்த்தைகள் இல்லாத புத்தகம் மௌனம். ஆனால் வாசிக்க, வாசிக்க இதற்குள் வாக்கியங்கள். மௌனம் என்பது வெளிச்சம். நம்மை நாமே இதற்குள் தரிசிக்கலாம். மௌனம் என்பது இருட்டு. எல்லாத் துன்பங்களையும் இதற்குள் புதைக்கலாம். மௌனம் என்பதுமூடி. இதை தயாரித்து விட்டால், எல்லா உணர்ச்சிகளையும் பூட்டி வைக்கலாம். மௌனம் என்பது போதி மரம். இதுவரை சொல்லாத உண்மைகளை இது போதிக்கும். மௌனம் என்பது தவம். இதில் ஆழ்ந்தால் அமைதி நிச்சயம்.

மௌனம் என்பது வரம். நம்மிடம் நாமே பெறுவது. இன்பம், துன்பம் இரண்டையும்மௌனம் கொண்டு சந்தித்தால் எப்போதும் இதயம் இயல்பாக இருக்கும். இதழ்களை இறுக மூடி நாம் நமக்குள் இறங்குவோம்.

உலகிலேயே நமக்குப் பிடித்த குரல் நமது குரல்தான். எங்கோ, எப்போதோ படித்த இதயத்தை வருடிய வரிகள். அதனால்தான் நாம் பேச ஆரம்பித்தால், மணிக்கணக்காகப் பேசிக் கொண்டே இருக்கிறோம். ஒரு வரியில் பேச வேண்டியதை ஒன்பது வரியில் பேசுகிறோம். பல நேரங்களில் நாம் யாரிடம்பேசுகிறோம், எதற்காகப் பேசுகிறோம், எந்த இடத்தில் பேசுகிறோம் என்பதைக் கூட சிந்திப்பதில்லை.

நமக்குத் தெரிந்ததை நாம் பேச வேண்டும் என்பது மட்டுமே நமக்கு இலக்கு. புத்திசாலி மற்றவர்களைப் பேசவிட்டு, மெüனம் சாதித்து, தேவையான பொழுது மட்டும் பேசி பேசுபவர்களின் நட்பைப் பெறுகின்றான்.

நாம் ஒரு நாளில் பேசுகிற பேச்சை, ஒலிநாடாவில் பதிவு செய்து அதையே நாம் கேட்டால்சில நேரங்களில் வருத்தப்படுவோம். அதிகம் பேசாதவனை உலகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை உலகம் மதிக்கிறது.பேசாத ஞானியை உலகம் தொழுகிறது.

மௌனத்தின் வெளிப்பாடு பல. கல்யாணப் பெண்ணின் மௌனம் சம்மதமாகிறது. கரை கடந்த இன்பத்தில் மனிதன் மௌனிக்கிறான். துன்பத்தின்உச்சியில் மௌனமே பேசுகிறது. மௌனம் இறைவனின் மொழி. “"சும்மா இரு சொல்லற என்றதுமே அம்மா பொருள் என அறிந்திலமே " என்று முருகன்,

அருணகிரி நாதருக்கு உபதேசித்த மந்திர மொழி மௌனம். அமைதி வேறு, மௌனம் வேறு. போருக்குப் பின் அமைதி வரும். அமைதி மேலோட்டமானது. மௌனம் உள்ளிருந்து வருவது. மௌனம்வார்த்தைகளற்ற நிலை. எண்ணங்கள் அற்ற நிலை. ஓம் என்ற பிரணவத்தின் பொருள், அறிவாக உள்ள இறைவனை, உயிராக உணர்கிற மனிதன், பேரின்ப நிலையாகிய மௌனத்தில் ஆழ்கிறான் என்பதே.

இது அவசர உலகம். இயந்திர கதியில் மனிதர்கள். வாய்க்கும் வயிறுக்கும் போராட்டம். நின்று, நிலைக்க நேரமில்லை. வாழ்க்கை ஓடிக் கொண்டிருக் கிறது.

வாரம் ஒருமுறை தினசரிக் காலண்டரில் ஞாயிறன்று ஆறு நாட்களைச் சேர்த்து கிழிக்கிறோம். தேவை நிம்மதி, மன அமைதி, மகிழ்ச்சி. இது மௌன தவத்தால் கிடைக்கும்.

மௌனத் தவம் செய்பவன் தன்னைத் தானே சுய பரிசோதனை செய்து கொள்கிறான். அவனது புறக் கதவுகள் மூடி, அகக் கதவுகள் திறக்கின்றன. அவன் பேசாத பொழுது, அவனுள்ளிருக்கும் இறைவன் பேசுகிறான். தனது குறை, நிறைகளை அவன் ஆராய்கிறான். அவனது பேராசை நிறை மனமாகிறது. சினம் பொறுமையாக மாறுகிறது. கடும்பற்று ஈகையாகிறது. முறையற்ற பால் கவர்ச்சி கற்பாக மாறுகிறது. வஞ்சம் மன்னிப்பாகிறது. அவன் அனைத்தையும் சமன் செய்து சீர்தூக்குகிறான். அவனது தன் முனைப்பு, அகந்தை அகன்று, தான் பரம்பொருளின் அம்சம் என உணர்கிறான். முடிவு வாழ்க்கை கல்வியில் தேர்ச்சி.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி