.

2011-11-18

  நாட்டுப்பற்று, விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்திய வரலாற்று நாயகன் மஹிந்த ராஜபக்'

நாட்டுப்பற்று, விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்திய வரலாற்று நாயகன் மஹிந்த ராஜபக்'

லீhட்டுப்பற்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி நாட்டை வளப்படுத்து வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சிறந்த வழிகாட்டல் ஒரு வலுவான அடித்தளமாக அமைந்தது.

ஜனாதிபதி என்ற நாட்டின் அதிஉயர் பதிவியை மாண்புமிகு மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பொறுப்பேற்று இன்றுடன் 6 ஆவது ஆண்டு நிறைவு பெறுகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் மாத்திரமே நாட்டைப் பயங்கரவாதப் பிடியில் இருந்து விடுவித்து மக்களுக்கு அரசியல் சுதந்திரத்தை பெற்றுக் கொடுக்க முடிந்தது. இதனால் இந் நாட்டு மக்கள் ஜனாதிபதி அவர்களை ஒரு தேசிய வீரனாக மதித்துக் கெளரவிக்கிறார்கள்.

இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரத்தை உடைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தன 1978 ஆம் ஆண்டில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சி முறையை ஏற்படுத்தி அந்தப் பதவிக்கு சகல அதிகாரங்களையும் ஏற்படுத்திக் கொண்டார். ஜனாதிபதியான எனக்கு ஒரு ஆணைப் பெண்ணாகவும் ஒரு பெண்ணை ஆனாகவும் மாத்திரம் தான் மாற்ற முடியாது. மற்றைய எல்லா அதிகாரமும் என்னிடம் இருக்கின்றது என்று ஜே. ஆர். ஜயவர்தன அடிக்கடி தன்னைப் பற்றி ஆடம்பரமாகப் பேசிகொள்வார். ஜே. ஆர். ஜயவர்தனவின் இந்தக் கருத்தைக் கேட்ட மக்கள் நிறைவேற்று ஜனாதிபதிப் பதவியில் வீற்றிருக்கும் ஒருவருக்கு அதிஉயர் அதிகாரம் இருப்பதனால் அவருக்கு எதனையும் செய்ய முடியும் என்று நினைத்து வந்தார்கள்.

ஆயினும் ஜே. ஆர். ஜயவர்தன பதவியில் இருந்த சுமார் 11 ஆண்டுகளின் போது இந்நாட்டுக்கு அழிவை ஏற்படுத்தி வந்த பிரிவினைவாத பயங்கரவாதிகளின் நாசவேலைகள் அதிகரித்துக் கொண்டிருந்த போதிலும் ஜனாதிபதியினால் பயங்கரவதத்தை முறியடிக்க முடியாதிருந்தது. இலங்கையின் அரசியல் வரலாற்றில் வடமராட்சியில் ஏற்படுத்திய துரோகச் செயல் இந்தியர்கள் இங்குவந்து விமானம் மூலம் பருப்புப் பொதிகளை எறிந்து விட்டுத் திரும்பியமை. 1983 ஆம் ஆண்டின் கறுப்பு ஜுலை இனக்கலவரம் மற்றும் இந்தியாவின் அமைதிகாக்கும் படை எங்கள் நாட்டு மண்ணில் வந்து இறக்கப்பட்டமை, ஆகியன அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் இடம் பெற்ற வேதனைக்குரிய சம்பவமாக மக்கள் மனதில் இன்றும் இடம்பெற்றிருக்கின்றது. ஜே. ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் இலங்கையின் நற்பெயருக்கு சர்வதேச ரீதியில் களங்கம் ஏற்படுத்தப்பட்டது.

ஜே. ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்திலேயே ஒரு முட்டையின் கருவாக இருந்த பிரிவினைவாதம் நாடு முழுவதையும் அழிக்கும் ஒரு பெரும் தீயாகமாறியது என்பதை நாம் மறந்துவிடலாகாது. ஜனாதிபதி என்ற முறையில் ஜே. ஆர். ஜெயவர்தனவுக்கு அதி உயர் நிறைவேற்று அதிகாரம் இருந்த போதிலும் அவரது பதவிக் காலத்தில் நாட்டின் ஒற்றுமை சீர்குலைந்து போயிருந்தது. அதனால் இந்நாட்டு மக்கள் நாட்டின் எந்தப் பகுதிக்கும் சுதந்திரமாக செல்வதற்கு இருந்த உரிமை பறிக்கப்பட்டது. ஜே. ஆரை அடுத்து ஜனாதிபதிப் பதவியை ஏற்ற நாட்டின் நிறைவேற்று அதிகாரமுடைய இரண்டாவது ஜனாதிபதியாக ஆர். பிரேமதாஸ பயங்கரவாதத்தைப் பூண்டோடு ஒழித்துக் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்தார். அவர் கலந்துரையாடல்கள் வட்ட மேசை மாநாடுகள் மூலமும் பெருமளவு பணத்தை கொடுப்பதன் மூலமும் ஆயுதங்களை விநியோகிப்பதன் மூலமும் அதனைச் செய்ய எத்தனித்தார். இத்தகைய மாற்றுவழியில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முயற்சி எடுத்த ஜனாதிபதி பிரேமதாஸ நடு வீதியில் பயங்கரவாத்தினால் இறுதியில் உயிரிழக்க வேண்டியும் இருந்தது.

அதையடுத்து திரு. டி. பி. விஜயதுங்க மூன்றாவது ஜனாதிபதியானார். தமது பதவிக் காலத்தில் தான் எக்காரணம் கொண்டும் ஈழத்துக்கு இடமளிக்கமாட்டேன் என்று தெரிவித்த அவருக்கு இறுதியில் இந்த நாட்டை பயங்கரவாதப் பிடியில் இருந்து மீட்டெடுக்க முடியவில்லை.

இதை அடுத்து திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நாட்டில் நான்காவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகப் பதிவியேற்றார். பதவியேற்றவுடன் நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டத் தீர்மானித்தார். திருமதி குமாரதுங்கவும் பிரேமதாஸாவை போன்று எல்.ரி.ரி.ஈ. யினால் குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டார். பிரேமதாஸ கொல்லப்பட்ட போதிலும் இந்தத் தாக்குதலினால் திருமதி குமாரதுங்க ஒரு கண்ணை இழந்து உயிர்த்தப்பினார்.

திருமதி பண்டாரநாயக்கவின் பதவிக் காலத்திலும் யுத்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அப்போது இலங்கைப் படையினர் யுத்த முனையில் வெற்றிவாகை சூடிய போதிலும் சில சந்தர்ப்பங்களில் படுதோல்வியும் அடைந்தனர். சந்திரிகா நிறைவேற்று அதிகாரத்தையுடைய ஜனாதிபதியாக இருந்த கால கட்டத்தில் திரு. ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பிரதம மந்திரியாகப் பொறுப்பேற்றார். ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது ஜே. ஆர். காலத்தில் அதிகாரத்தைப் பெருக்கிக் கொண்டிருந்த பிரிவினவாதத்துக்கு சட்ட அந்தஸ்து கிடைத்தது. இலங்கையின் வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்தியது

2005 இல் நாடு ஒட்டுமொத்தமாக அழிவை எதிர்நோக்கிக் கொண்டிருந்தது. அன்று இந்நாட்டு மக்கள் நாளைய தினத்தின் மீது நம்பிக்கை இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். அன்று ஒரு சிலர் இந்தப் பயங்கரவாதிகளுக்கு அவர்கள் சலுகைகளைக் கொடுத்து இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் இருந்தனர். எல். ரி.ரி. ஈ. தன்னை எந்த ஒரு சக்தியாலும் தோல்வியடையச் செய்ய முடியாது என்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டிருந்த போதிலும் அதற்கு மிகவும் சக்தி வாய்ந்த பிரசார வலையமைப்பு சர்வதேச ரீதியில் இருந்தது. எல். ரி. ரி.ஈ. க்கு நவீன ஆயுதங்கள் கிடைத்தன. அன்றைய கால கட்டத்தில் எல். ரி. ரி.ஈ. க்கு வலுவான முப்படைகளும் நீதிமன்ற வலையமைப்பு, வங்கிகள் உட்பட ஒரு தேசத்துக்குத் தேவையான சகல வசதிகளும் இருந்தன.

இந்நாட்டில் 98 சதவீதமான மக்கள் எதிர்பாராத மாபெரும் வெற்றியை ஈட்டிக் கொடுத்தவர் எமது மஹிந்த ராஜபக்ஷ அவர்களே ஆகும். சுமார் 30 ஆண்டுகளாக பிரபாகரன் உருவாக்கிய கொலைக்காரக் கும்பலுக்கு ஜனாதிபதி அவர்களின் மனோபலத்தில் தலைமைத்துவத்தையும் எவ்விதத்திலும் அசைக்க முடியாமல் இருந்தது. திரு. மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முப்படைகளின் பிரதம தளபதி என்ற வகையில் இரண்டரை ஆண்டுகள் என்ற மிகக் குறுகிய காலப் பகுதியில் 30 ஆண்டுகாலமாக இந்நாட்டில் அழிவையும் மனித உயிரிழப்பையும் ஏற்படுத்தி வந்த பயங்கரவாதத்தை துவம்சம் செய்தார். பிரபாகரனை எங்கள் ஆயுதப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

ஆயுதம் தாங்கி உலகையே அச்சுறுத்திக் கொண்டிருந்த ஒரு பயங்கரவாதத்தை அடிப்பணிய வைத்தது எங்கள் நாட்டுக்கு ஒரு பெரும் சாதனையாகும். யுத்த வெற்றிக்க முன்னரும் அதற்குப் பின்னரும் ஜனாதிபதி அவர்கள் எங்கள் தாய்நாடே முதலாவது இடத்தையும் இரண்டாவது இடத்தையும் மூன்றாவது இடத்தையும் எனது வாழ்க்கையில் அமைந்திருக்கிறது என்று மிகவும் தைரியமாக அறிவித்திருந்தார்.

அவர் தன்னுடைய தாய்நாட்டின் மீது அதிக அன்பும் மரியாதையும் வைத்திருந்த காரணத்தினால் தான் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி அவர்களினால் இந்தச் சாதனையை ஏற்படுத்த முடிந்தது. தன்னைப் பற்றிச் சிந்திக்காமல் நாட்டை பற்றியே சிந்தித்துக் செயலாற்றியதால் தான் ஜனாதிபதிக்கு இந்தச் சாதனை ஏற்படுத்த முடிந்தது.

தாய்நாடு நெருக்கடி நிலையை எதிர்நோக்கி இருந்தபோது தமது உயிரைச் துச்சமாக மதித்து தாய்நாட்டுக்காகப் போராடிய தேசிய வீரர்களின் பட்டியலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயரும் இன்று சேர்க்கப்பட்டுள்ளது.

தேசிய சிந்தனையுடன் செயல்பட்டதனால் அவருக்கு நாட்டுப்பற்று வலுவடைந்தது. ஹிருவாயபத்துவையில் தோன்றிய மஹிந்த குடும்ப சம்பிரதாயத்தில் இருந்து உருவாக்கிய நாட்டுப்பற்று மஹிந்த ராஜபக்ஷ அவர்களையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது.

“ருகுணுவின் சிங்கம்” என்ற பெயர் பெற்றிருக்கும் அமரர் டி. எம். ராஜபக்ஷ அன்று ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக எழுந்து குரல் கொடுத்தார். அதையடுத்து டி. ஏ. ராஜபக்ஷ 1956 ஆம் ஆண்டில் மக்கள் புரட்சிக்கு வழியமைத்து முற்போக்குக் கொள்கையுடைய சிறிலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவராக விளங்கினார். அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்தார். அந்த குடும்பப் பின்னணியில் இருந்து தோன்றிய மஹிந்த ராஜபக்ஷ எப்போதும் நாட்டின் நலனுக்கே முதலிடம் கொடுத்து மத வழிபாட்டுக்கும் முக்கியத்துவம் வழங்கும் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.

நம் நாட்டவர் மீது நம்பிக்கை வைத்தல்

இந்நாட்டு மக்களுக்கு எல். ரி. ரி. ஈ. இயக்கத்தை அழிப்பதற்காக இலங்கைப் பாதுகாப்புப் படையினர் எடுத்த நடவடிக்கைகள் மாத்திரம் தான் தெரிந்திருக்கும். அவர்களுக்கு எவ்விதம் சர்வதேச சக்திகளுக்கு தைரியமாக முகம் கொடுத்து அவற்றை தோல்வியடையச் செய்தமை என்பது பற்றி ஒன்றுமே தெரிந்திருக்காது. இது ஆயுதப் போராட்டத்தை விட கஷ்டமான செயற்பாடாகும். இலங்கையின் கடந்த காலத் தலைவர்கள் எவரும் தைரியமாக எல். ரி. ரி.ஈ.யை ஆதரிக்கும் சர்வதேச சக்திகளுக்கு எதிராக முகம் கொடுக்காதபோதிலும், மஹிந்த ராஜபக்ஷ அந்த சக்திகளை எதிர்த்து 30 ஆண்டு காலமாக எல். ரி. ரி.ஈ. யின் துன்புறுத்தல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்தார்.

2005 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்நாட்டின் ஜனாதிபதியாக தெரிந்தெடுக்கப்படாதிருந்தால் இன்று எங்கள் நாடு இரண்டு நாடுகளாகப் பிரிந்திருக்கும் என்ற யதார்த்தத்தை இந்நாட்டு மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதிப் பதவிக்கு வரும் வரை இலங்கையில் அரசாங்கத் தலைவர்கள் மாத்திரமே இருந்தார்கள். ஆனால் இன்றைய ஜனாதிபதி ஒரு தேசத் தலைவராகிவிட்டார். அவர் வெளிநாட்டுப் படைகளின் உதவியை பயங்கரவாதத்தை முறியடிப்பதற்காகக் கேட்கவில்லை. வெளிநாடுகளுடன் எவ்விதம் யுத்த தந்திரத்தைக் கையாள வேண்டும் என்று கூட ஆலோசனை பெறவில்லை. அவர் நம்நாட்டு ஆயுதப் படை வீரர்களால் இதனைச் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்ததால் அவர் தனது அரசியல் தலைமைத்துவத்தின் கீழ் சரியான உத்தரவைப் பிறப்பித்தார்.

பயங்கரவாத யுத்தத்தில் வெற்றி பெற்ற பின்னர் ஜனாதிபதி அவர்கள் உள்நாட்டு மக்கள் மட்டுமன்றி வெளிநாட்டில் உள்ள இலங்கைப் பிரஜைகளையும் நாட்டுக்குத் திரும்பி நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அவர் சிங்களவர் தமிழர், முஸ்லிம்கள் என்ற பேதமின்றி அனைத்து மக்களுக்கும் இந்த அழைப்பை விடுத்தார். இலங்கையில் பிறந்த மக்கள் அனைவரும் இந்நாட்டுப் பிரஜைகள் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்நாட்டுப் பிரஜைகள் மீது ஜனாதிபதி அசையாத நம்பிக்கை வைத்திருப்பதனால் மக்கள் அவரது 6 ஆண்டு பதவிப் பிரமாணத்தை சிறப்பிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வது அவசியமாகும். மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தீர்க்க தரிசனமான செயற்பாடுகளினால் தான் இன்று முழு உலகமும் இலங்கை மக்கள் எவ்வித பேதமும் இன்றி ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டுள்ளார்கள்.

சர்வதேச சக்திகளை வென்றெடுத்தல்

மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அழகான மீசையும் அவர் அணிந்திருக்கும் குரக்கன் நிறச் சால்வையும் அவரை ஒரு தேசிய சின்னமாக இன்று உயர்த்தியிருக்கிறது. அவர் சர்வதேச ரீதியில் பயங்கரவாதத்தை தோற்கடித்த ஒரு நாட்டு தலைவர் என்று இன்று கெளரவிக்கப்பட்டு வருகிறார். ஆசியப் பிராந்தியத்தின் சாக் நாடுகளின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் பொது நலவாய நாடுகளின் உச்சி மாநாட்டிலும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்திலும் கலந்து கொண்ட போது அவரை உலக நாடுகள் ஒரு சர்வதேசத் தலைவராக அங்கீகரித்தது.

மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்ற ஆரம்பத்தில் சர்வதேச சமூகம் இந்த மனிதரினால் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் வலு இல்லை என்ற அபிப்பிராயத் தைக் கொண்டிருந்தது. இவர் ஒரு கிராமியக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதனால் அவருக்கு அபிவிருத்தி அடைந்த நாடுகளின் பாரம்பரியங்கள் தெரியாதிருந்திருக்கும் என்றும் சிலர் கூறினார்கள். ஆனால் இன்று சர்வதேச ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமைத் துவம் கொடிகட்டிப் பறக்கும்போது இந்தச் சக்திகள் இன்று வாயடைத்துப் போய் நிற்கின்றன. இந்நாட்டு மக்களுக்கு சுதந்திரத்தை மீட்டெடுத்துக் கொடுத்த அதி உன்னதமான உத்தம புருஷர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் இதேவேளை பிறந்த தின வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.